For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு டீனேஜ் வயசுல பிள்ளைங்க இருக்காங்களா? அப்ப கட்டாயம் இத படிங்க...

டீனேஜ் வயதில் பிள்ளைகள் எந்த விஷயத்திலும் தானாக முடிவெடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதுவே சில நேரம் ஆபத்திலும் முடியலாம்.

|

பதின் பருவம் என்பது பிள்ளைகள் மற்றும் பெற்றோர் ஆகிய இருவரும் கவனமாக கையாள வேண்டிய ஒரு பருவம் ஆகும். குழந்தைகள் என்றும் சொல்ல முடியாமல் குழந்தை நிலையில் இருந்து சற்று வளர்ந்து பெரியவர்கள் என்றும் சொல்ல முடியாமல் இரண்டிற்கும் இடையில் உள்ள பருவம், டீனேஜ் என்னும் பதின் பருவம்.

இந்த வயதில் பிள்ளைகள் எந்த விஷயத்திலும் தானாக முடிவெடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதுவே சில நேரம் ஆபத்திலும் முடியலாம். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அதனை புரிய வைக்க முயற்சிப்பார்கள். பெற்றோரின் எண்ணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத பிள்ளைகள், பெற்றோரிடம் தர்க்கத்தில் ஈடுபடுவார்கள். இதனால் ஒரு முடிவில்லாத விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனால் இருவரின் நிம்மதியும் போய்விடும்.

இந்த டீனேஜ்/பதின் பருவத்து பிள்ளைகளின் பழக்கத்தை சாமர்த்தியமாக கையாள பெற்றோர் பழகிக் கொள்ள வேண்டும். பதின் பருவத்து பிள்ளைகளின் பெற்றோர் அவசியம் படிக்க வேண்டிய ஒரு பதிவு இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. அமைதியாக இருங்கள்:

1. அமைதியாக இருங்கள்:

எந்த நேரத்திலும் நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கியமான அம்சம், அமைதியாக இருப்பது மட்டுமே. இரண்டு தரப்பினரும் வாதத்தை தொடர்ந்து கொண்டே இருந்தால் நிச்சயம் சண்டையில் தான் முடியும். கோபப்படுவது, கத்துவது, திட்டுவது போன்ற செயல்கள் இந்த சூழ்நிலையை இன்னும் மோசமானதாக மாற்றும். ஆகவே உங்கள் கோபத்தில் கட்டுப்பாடு இருக்கட்டும். எப்போதும் பதின்பருவத்து பிள்ளைகளை எளிதாக நிர்வகிக்க அமைதி மிகவும் அவசியம்.

2. உட்கார்ந்து பேசி பிரச்சனையை தீர்க்க முயற்சியுங்கள்:

2. உட்கார்ந்து பேசி பிரச்சனையை தீர்க்க முயற்சியுங்கள்:

பதின்பருவத்து பிள்ளைகளிடம் வாதம் செய்வதை விடுத்து, அவர்களிடம் எப்போதும் பேசுவதற்கு முயற்சியுங்கள். அவர்களுடைய நடத்தைக்கான வேர் காரணம் என்ன என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சியுங்கள். அமைதியாக அவர்களை ஒரு இடத்தில் அமர வைத்து அவரிடம் மனம் விட்டு பேசுங்கள்.

3. ஆரோக்கியமான கலந்துரையாடலை தொடங்குங்கள்:

3. ஆரோக்கியமான கலந்துரையாடலை தொடங்குங்கள்:

உங்கள் பதின் பருவத்து பிள்ளைகளிடம் அவர்களின் அன்றைய நாள் பற்றி பேசுங்கள். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்னவென்று கேளுங்கள். சில நேரங்களில் பதின்பருவத்து பிள்ளைகளுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளியில் சொல்ல ஒரு சிறந்த வழி இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு உருவாகலாம். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகலாம். இந்த எண்ணம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மேலும் மேலும் அதிகரிக்கலாம். ஆகவே உங்கள் பிள்ளைகளிடம் எப்போதும் மனம் திறந்து பேசுங்கள். இதனால் உங்கள் மீது அவர்களுக்கு நிறைய நம்பிக்கை எழலாம். அவர்கள் சோகமாக இருக்கும் போது அல்லது தாழ்வாக உணரும் போது உங்களிடம் மறைக்காமல் கூற வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் தோன்றும்.

4. சில அடிப்படை விதிகளை பின்பற்றுங்கள்:

4. சில அடிப்படை விதிகளை பின்பற்றுங்கள்:

இன்றைய பிள்ளை வளர்ப்பு முறை என்பது 30 வருடத்திற்கு முந்தைய பிள்ளை வளர்ப்பில் இருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளது. தற்போது நவீன காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை நண்பர்களாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மரியாதை, பண்பு போன்ற விஷயங்கள் காணாமல் போய்விட்டன. ஆனால் பிள்ளை வளர்ப்பில் பழைய முறை என்பது முற்றிலும் சிறந்தது. ஆகவே சில அடிப்படை விதிகளை வீட்டில் பின்பற்றுங்கள். பெற்றோருக்கான அடிப்படை மரியாதை எந்த நேரத்திலும் பின்பற்றப்பட வேண்டும். பெற்றோரை அவமரியாதையாக நடத்துவது, பெற்றோரை திட்டுவது போன்ற விஷயங்களுக்கு பெற்றோர் பொறுமை காப்பது அவசியமற்றது. இதனை பின்பற்றுவதன் மூலம் பிள்ளைகள் அவர்களுக்கான நிலையை அறிந்து நடந்து கொள்வார்கள்.

5. பெற்றோர் விட்டுக்கொடுக்க வேண்டாம்:

5. பெற்றோர் விட்டுக்கொடுக்க வேண்டாம்:

பிள்ளைகளின் ஆசைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் பெற்றோர் எளிதில் இணங்க வேண்டாம். நீங்கள் உருவாக்கிய சில அடிப்படை விதிகளை எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகள் உங்களை மோசமான பெற்றோர் என்று சித்தரித்தாலும், உங்களை ப்ளாக்மெயில் செய்தாலும் நீங்கள் எல்லாவற்றையும் நியாயமாக அணுகுங்கள்.

6. எச்சரிக்கை செய்யுங்கள்:

6. எச்சரிக்கை செய்யுங்கள்:

குழந்தைகளின் தவறுகளுக்கு அவர்களுக்கு தண்டனை வழங்கவில்லை என்றாலும் அவர்களை எச்சரிப்பது மிகவும் அவசியம். நீங்கள் திட்டுவதை அவர்கள் அலட்சியம் செய்யாமல், அவர்கள் தவறுக்கான விளைவுகளை பற்றி அவர்களிடம் எச்சரிக்கை செய்யுங்கள். உங்கள் மீது உங்கள் குழந்தைகளுக்கு பயம் தேவையில்லை, ஆனால் அவர்கள் உங்களை எதிர்த்து வாதம் செய்வதற்கான விளைவுகள் பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

7. பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டாம்:

7. பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டாம்:

பொதுவாக அதீத பாதுகாப்பு தரும் பெற்றோர்கள் மீது பதின் பருவ பிள்ளைகளுக்கு எரிச்சல் உண்டாகிறது. அவர்களது சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுங்கள், அதே சமயம் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். எல்லா பெற்றோருக்கும் அவர்கள் பிள்ளைகள் குறித்த கவலை இருப்பது இயற்கையான விஷயம் என்றாலும், அதிகமாக அவர்களை பாதுகாப்பது நிச்சயம் அவர்களுக்கு எரிச்சலுணர்வைத் தரும்.

8. மரியாதையான குணநலனை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்:

8. மரியாதையான குணநலனை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்:

குழந்தைகள் வளரும் பருவம் முதலே அவர்களுக்கு மரியாதையை சொல்லிக் கொடுங்கள். மரியாதையான மனிதனாக சமூகத்தில் வளர்வதற்கான முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய வளர்ச்சிக்கு நல்ல வழியில் உதவ முடியும். மற்றவருக்கு மரியாதையை கொடுப்பது மூலமாக அவர்களுக்கு மரியாதை கிடைக்கும் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். இது வாழ்க்கைக்கு மிகவும் தேவையான அம்சமாகும்.

9. உதாரணங்களுடன் சொல்லிக் கொடுங்கள்:

9. உதாரணங்களுடன் சொல்லிக் கொடுங்கள்:

மனிதர்களை ஊக்கப்படுத்தும் காணொளிகள், செய்திகள், படங்கள், கதைகள் ஆகியவற்றை காண்பித்து உதாரணங்கள் மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு நன்மை தீமைகளை உணர்த்துங்கள். இதன் மூலம் மரியாதையுடன், பண்புடன் இருப்பதற்கான முக்கியத்துவத்தை அவர்கள் மறக்காமல் இருப்பார்கள்.

10. அக நோக்கு பார்வை:

10. அக நோக்கு பார்வை:

அக நோக்கு பார்வை என்பது தன்னை தானே சோதனை செய்து கொள்ளும் ஒரு குணமாகும். பிள்ளைகள் உங்களிடம் வாதம் செய்தார்கள் என்றால், விவாதத்திற்கு பின் பெற்றோராகிய நீங்கள் சுய சோதனை செய்து பாருங்கள். உங்கள் சொந்த நடத்தை மற்றும் குணநலனை ஆழ்ந்து சோதியுங்கள். பொதுவாக பிள்ளைகள் பெற்றோர் செய்வதை கவனிக்கிறார்கள். ஆகவே உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல உதாரணமாக இருங்கள். உங்களை பார்த்து அவர்கள் வளரும் போது நிச்சயம் நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Tips To Deal With A Teenager Who Talks Back In Tamil

Here are some tips to deal with a teenager who talks back in tamil. Read on...
Desktop Bottom Promotion