For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் செய்யும் இந்த தவறு உங்கள் குழந்தையை பாலியல் குழப்பத்திற்கு ஆளாக்கும் என தெரியுமா?

இங்கே பெற்றோர்கள் செய்யும் சில தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

By Lakshmi
|

தாயைப் போல பிள்ளை நூலை போல சேலை என்பது போல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் இருந்து தான் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். எனவே பெற்றோர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நாம் தெரியாமல் செய்யும் சிறுசிறு தவறுகள் கூட நாளை பெரிய விளைவுகளை உண்டாக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலியல் குழப்பங்கள்

பாலியல் குழப்பங்கள்

ஒரு வயது குழந்தையை கூட இப்போது பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். வளர்இளம் பருவத்திலேயே குழந்தைகள் பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவது, பாலியல் படங்களை பார்ப்பது என குழந்தை பருவத்திலேயே இது போன்ற பாலியல் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். பெற்றோர்கள் செய்யும் விஷயங்களை அப்படியே செய்வது, இது பற்றி தேடி கண்டுபிடித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஆகியவை இந்த வயதின் இயல்பு.

பெற்றோர்கள் செய்யும் தவறுகள்

பெற்றோர்கள் செய்யும் தவறுகள்

பெற்றோர்கள் குழந்தை தானே என்ன தெரியப்போகிறது என குழந்தையின் முன்பு உடை மாற்றுவது, இந்த வயதிலேயே உடல்களை பற்றி தெரிந்து கொண்டால் அவர்களின் எண்ணத்தில் வித்தியாசம் தெரியாது என்று நினைக்கும் தாய்மார்களும் இருக்கிறார்கள்.

குழந்தையின் முன்பு வேண்டாம்

குழந்தையின் முன்பு வேண்டாம்

ஆண் பெண் என யாராக இருந்தாலும் குழந்தைகளின் முன்பு உடை மாற்றுவதை தவிர்க வேண்டும். மேலை நாட்டு கலாச்சாரங்கள் நமது நாட்டிற்கு ஒத்துவராது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நாம் குழந்தைகள் தானே என்று அவர்கள் முன்பு உடை மாற்றும் போது அவர்களது மனதில் ஒரு அதிர்ச்சி உண்டாகும். ஆனால் அதை வெளியில் காட்ட தெரியாது. இது அவர்கள் பாலியல் குழப்பம் அடைய பாதைவகுக்கிறது.

முகம் சுழிக்கும் உடைகளும் வேண்டாம்

முகம் சுழிக்கும் உடைகளும் வேண்டாம்

வீட்டில் இருக்கும் போதும் சரி, வெளியில் போகும் போதும் சரி முகம் சுழிக்கும் அளவிற்கு உடைகளை அணியாதீர்கள். மற்றவர்கள் மனதை உறுத்தும் விதமான ஆடைகளை அணிவது குழந்தைகளுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும்.

முன்னுதாரணமாக இருங்கள்

முன்னுதாரணமாக இருங்கள்

குழந்தைகள் பெரும்பான்மையான விஷயங்களை தங்களை சுற்றியுள்ளவர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நாமே தவறாக நடந்து கொண்டால், அவர்களால் எப்படி நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகள் முன்பு நேர்மை, கண்ணியம், உதவி செய்யும் மனப்பான்மையுடன் இருங்கள். அவர்களும் நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

do not dress change near you kid

here are the some mistakes of parents are given
Story first published: Friday, June 2, 2017, 10:48 [IST]
Desktop Bottom Promotion