கோமாவில் இருக்கும்போதே குழந்தை பெற்றுக்கொண்ட போலீஸ்அதிகாரி

Subscribe to Boldsky

நம் உலகம் அதிசயங்களாலும், மர்மங்களாலும் நிறைந்தது. மிகப்பெரிய விபத்தில் இருந்து சிறு காயம் கூட தப்பித்தவர்கள் இருக்கிறார்கள் அதேபோல சாதாரண காய்ச்சல் வந்து இறந்தவர்களும் இருக்கிறார்கள். அதிசயங்கள் பலவகை இருந்தாலும் இல்லையென்ற முடிவெடுத்த பின் நாம் ஆசைப்பட்டது நம் கைக்கு கிடைத்தால் எப்படி இருக்கும். அதுவும் நம்ப முடியாத வகையில் கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படி ஒன்றுதான் இந்த பெண்ணுக்கு நடந்துள்ளது.

Pregnancy

ஒவ்வொரு பெண்ணிற்கும் தாய்மை என்பது வரம் போன்றது. ஆனால் சூழ்நிலை காரணமாக கர்ப்பகாலத்தில் ஒரு பெண் கோமாவில் விழுந்து விட்டால் அந்த குழந்தை இனி கிடைக்காது என்ற மனநிலைக்கு நாம் வந்துவிடுவோம். ஆனால் கடவுள் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது அல்லவா? அதை உண்மையாக்கும் படி கோமாவில் இருந்த பெண்ணிற்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விபத்து

விபத்து

அர்ஜென்டினாவை சேர்ந்த அமிலியா பன்னன்ஸ் என்ற காவல்துறையில் வேலை செய்யும் பெண் ஆறு மாதம் கருவுற்றிருந்தார். ஒருநாள் தன் கணவருடன் வெளியே சென்றபோது கார் விபத்துக்கு உள்ளானது. அமிலியாவின் கணவர் எந்தவித காயமும் இன்றி தப்பிவிட்டார். ஆனால் அமிலியாவிற்கு மண்டை ஓட்டில் மூளையில் இரத்தம் உறைந்துவிட்டது. அதன் விளைவாக அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு

அமிலியா கோமா நிலைக்கு சென்றுவிட்டார் என்று அவர் குடும்ப உறுப்பினர்கள் சோர்ந்து விடவில்லை. எப்பொழுதும் பொல அவருக்கு தேவையான மருந்துகளையும், உணவுகளையும் கொடுத்து வந்துள்ளனர். கோமாவில் இருக்கும் தன் அம்மாவின் வயிற்றுக்குள் அந்த குழந்தையும் வளர்ந்துகொண்டே வந்துள்ளது.

மருத்துவர்களின் கவலை

மருத்துவர்களின் கவலை

என்னதான் நம்பிக்கை இருந்தாலும் மருத்துவர்களுக்கும், அமிலியாவின் குடும்பத்தினருக்கும் குழந்தை உயிரோடு பிறக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில் ஆரோக்கியத்துடன் இருக்கும் எத்தனையோ அம்மாக்களுக்கே குழந்தை இறந்து பிறக்கும் போது மூன்று மாத காலம் கோமாவில் இருக்கும் அமிலியாவிற்கு குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்று யாரும் நம்பவில்லை. இருப்பினும் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இருந்தால் அது அமீலியாவை பாதிக்கும் என்று குழந்தையை அறுவைசிகிச்சை செய்து வெளியே எடுக்க மருத்துவர்களும் , அமிலியா குடும்பத்தினரும் முடிவு செய்தனர்.

அதிசயம்

அதிசயம்

அந்த குழந்தை இறக்க வேண்டும் என்று விதியிருந்திருந்தால் அமிலியாவிற்கு விபத்து ஏற்பட்ட போதே இறந்திற்கும். ஆனால் அந்த குழந்தை பூமியில் பிறக்க வேண்டும் என்று கடவுளால் முடிவு செய்யப்பட்டுவிட்டது. புனித இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்ய தொடங்கினர். அறுவைசிகிச்சை செய்து பார்த்தபோது உள்ளே 34 வாரம் முழுமையடைந்த இரண்டு கிலோ எடையுடைய ஆண் குழந்தை இருந்தது.

குடும்பத்தினர் மகிழ்ச்சி

குடும்பத்தினர் மகிழ்ச்சி

மருத்துவர்களாலும், அமிலியாவின் குடும்பத்தினராலும் இந்த அதிசயத்தை நம்ப முடியவில்லை. அந்த ஆண் குழந்தைக்கு சான்டினோ என்று பெயர் வைத்தனர். அதன்பின் அமிலியாவின் உறவினர்கள், நண்பர்கள் என தினமும் பலபேர் வந்து சான்டினோவை பார்த்து சென்றனர். அமிலியாவின் சகோதரி முழுநேரமும் அங்கேயே தங்கிவிட்டார். அமிலியாவை சுற்றி எப்பொழுதும் சான்டினோவின் குரல் கேட்கும்படி செய்தார் அமிலியாவின் சகோதரி.

மற்றொரு அதிசயம்

மற்றொரு அதிசயம்

சான்டினோ பிறந்த மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்தினருக்கு மற்றுமொரு மகிழ்ச்சியாக அமிலியா மெல்ல மெல்ல குணமாக தொடங்கினார். ஒருநாள் சான்டினோவிற்கு உணவு ஊட்டும்போது அமிலியா "யெஸ், யெஸ்" என்று முனகியதைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். அதன்பின் அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு அமிலியா உடல் அசைவுகள் பதிலளிக்க முயற்சித்தார். மருத்துவர்கள் இதனை நரம்பியல் துறையின் மிகப்பெரிய அதிசயம் என்று கூறினர்.

முன்னேற்றம்

முன்னேற்றம்

இப்படியே நாட்கள் செல்ல செல்ல அமிலியாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. முன்பெல்லாம் சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்த அவர் பின்னர் அனைத்து கேள்விகளுக்கும்அசைவுகள் மூலம் பதிலளிக்க தொடங்கினார். அமிலியாவின் மருத்துவர்கள் "அமிலியா எங்களுக்கு தினமும் ஆச்சரியமூட்டுகிறார்" என்று கூறினர்.

தாய்மை

தாய்மை

அம்மா மற்றும் குழந்தைக்கிடையே இருக்கும் பிணைப்பை யாராலும் புரிந்து கொள்ளவும் இயலாது, விவரிக்கவும் இயலாது. அந்த பிணைப்புதான் கோமாவில் இருந்தபோதும் அந்த குழந்தையை பாதுகாத்தது அதே பிணைப்புதான் சான்டினோவின் குரலை கேட்டு அமிலியாவை குணப்படுத்தவும் செய்தது. விரைவில் அமிலியா தன் மகன் சான்டினோவை தூக்கிக்கொண்டு பூரண குணமடைந்து மருத்துவமனையை விட்டு செல்லத்தான் போகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Woman gave birth to baby after falling into coma

    A woman police officer gave birth to a baby boy after falling into coma. After three months she woke up and held her baby for the first time
    Story first published: Wednesday, July 18, 2018, 18:35 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more