For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறந்து போன குழந்தை பிறந்த பின், தம்பதியரின் மனநிலை எப்படி இருக்கும்?

குழந்தை இறந்து பிறப்பது என்பது அரிதாக நடக்கும் விஷயம்; இந்த பதிப்பில் இறந்து போன குழந்தை பிறந்த பின், தம்பதியரின் மனநிலை எப்படி இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

|

குழந்தை இறந்து பிறப்பது என்பது அரிதாக நடக்கும் விஷயம்; குழந்தை இறந்து பிறந்து விடும் நேரத்தில், 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்த பெண் அடையும் மன வேதனைக்கு அளவே கிடையாது. குழந்தையை பெற போகிறோம், தந்தை ஆக போகிறோம் என்று நினைத்து கொண்டு இருந்த ஆணுக்கும், இவ்வாறு குழந்தை இறந்து பிறப்பது பெரும் அடியாக தான் இருக்கும்.

Husband’s Responsibilities During Stillbirth

இந்த பதிப்பில் குழந்தை இறந்து பிறந்தால், அதை எதிர்கொள்ளும் தம்பதியரின் மனநிலை எப்படி இருக்கும் மற்றும் அந்த நிலையில் மனம் உடைந்து போய் இருக்கும் மனைவியை தேற்ற கணவன்மார்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இறந்து போன குழந்தை - Stillbirth

இறந்து போன குழந்தை - Stillbirth

கருவில் உருவான குழந்தை, வளர்ச்சி கால கட்டத்தின் பொழுது இறந்து பிறந்து விட்டால், அதனை ஆங்கிலத்தில் Stillbirth என்று கூறுவர். பத்து மாத கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும் தனக்குள் வளரும் தங்கள் காதலின் அடையாளத்தை காண ஆசையாய் கொண்டு இருக்கும் பெண்ணுக்கும், தனது சாயலை, தனது வாரிசை காண போகிறோம் என்று காத்து இருக்கும் ஆணுக்கும், இவ்வாறு குழந்தை இறந்து பிறந்தால் எத்தனை ஏமாற்றமாக இருக்கும் என்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது!

பிரசவித்த தருணம்!

பிரசவித்த தருணம்!

இறந்து போன குழந்தையை பிரசவித்த பின், பிரசவ மயக்கம் கழிந்து கண் விழிக்கும் பொழுது பெண்கள் அடையும் வேதனையை எப்படி கூறுவது? இறந்து போன குழந்தையுடன் தானும் இறந்து போயிருக்க கூடாதா என்றும், இத்தனை நாள் கஷ்டப்பட்டு வாழ்ந்தது உன்னை இப்படி காணவா என்றும் பெண்கள் மனம் தாய்மையை அடைய முடியாத வேகத்தில் கதறி அழுவதை என்னவென்று கூறுவது.

ஆறுதல் மொழிகள்!

ஆறுதல் மொழிகள்!

இவ்வாறு இறந்து போன குழந்தையை பிரசவித்த பெண்களுக்கு வழங்கப்படும் ஆறுதல்கள், அவள் மனதின் பாரத்தை போக்கும் என்று எண்ணி, உறவுகளும் உற்றத்தாரும் பெண்ணை சூழ்ந்து கொண்டு கவலைப்படாதே! அடுத்து பார்த்து கொள்ளலாம் என்று கூறும் பொழுது பெண்ணின் மனதில் எப்படிப்பட்ட எண்ணம் எழும் என்று அறிவீரா?

ஈட்டிகளாய் மாறி குத்தும்!

ஈட்டிகளாய் மாறி குத்தும்!

நாம் நல்லது என்று கூறும் ஆறுதல் மொழிகள், பெண்ணின் மனதில் ஈட்டிகளாய் சென்று குத்துகின்றன என்பதை யாரும் அறிவது இல்லை. பார்த்து பழகிய ஒருவர் இறந்து போன வீட்டில் அமைதி மற்றும் ஆறுதல் இருக்கும்; அதில் நியாயம் உள்ளது, அது சரியான ஒரு நடைமுறை. ஆனால், தான் கண்ணால் காணாத குழந்தையின் மீது, ஆணா பெண்ணா என்று அறியாத குழந்தையின் மீது தம்பதியர் வைத்த பாசம் எல்லை இல்லாதது.

மேலும் படிக்க: புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு போறீங்களா? இதெல்லாம் மனசுல வெச்சிக்கோங்க...

புரிந்து கொள்ள முடியாது!

புரிந்து கொள்ள முடியாது!

ஏன் ஆறுதல் மொழிகள் ஈட்டியாய் மாறுகின்றன என்பதை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் தனக்குள் உருவாகி வெளி வரப்போகும் அந்த கரு தான் தனது வாழ்க்கை என்று எண்ணி, ஒவ்வொரு நொடியும் அதனோடு பேசி, குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் உணர்ந்து வந்த பெண்மணிக்கு, அன்னையாக போகிறோம் என்று கனவுகள் கண்ட பெண்ணிற்கு திடீரென அப்படியெல்லாம் எதுவுமே நடக்காது என்றால் எப்படி இருக்கும்.?

கணவர்களின் பொறுப்பு!

கணவர்களின் பொறுப்பு!

தானும் தனது மனைவியும் அனுபவித்து வரும் மீளா பிரிவின் துயரத்தை புரிந்து கொள்ளாமல் பேசி, மனைவியின் மனதையும் தன் மனதையும் கஷ்டப்படுத்தும் நபர்களை எப்படி ஆவது தங்களது பாதையில் இருந்து விலக்கி வைக்க வேண்டியது கணவரின் பொறுப்பு. மேலும் மனைவியை காயப்படுத்தும் வண்ணமோ அல்லது அதிக அனுதாபத்தை காட்டும் நபர்களையோ அல்லது அடுத்த குழந்தை எப்படி பிறக்குமோ என்று அச்சுறுத்தும் நபர்களையோ மனைவியின் அருகில் அண்ட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கணவரின் கடமை!

கணவரின் கடமை!

குழந்தையை இழந்தது கணவருக்கு பெரிய இழப்பு தான் என்றாலும், மனைவிக்கு உடல் அளவிலும், மனது அளவிலும் அது மிகப்பெரிய இழப்பு. மனைவி உடல் அளவிலும், மனது அளவிலும் தயாராக மாறும் வரை கணவன்மார்கள் மனைவிக்கு அதிக அன்பையும் ஆதரவையும் நல்க வேண்டும். மேலும் எதற்கும் அவர்களை வற்புறுத்தாமல், மனைவியாக தயாராகி வரும் வரை காத்து இருப்பதும் மிகவும் அவசியம்!

கணவன்மார்கள் முடிந்த அளவுக்கு மனைவியை புரிந்து கொண்டு நடக்க வேண்டியது அவசியம்.

மேலும் படிக்க: ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்தணுவை உற்பத்தி செய்ய கூடிய உணவுகள் இதுவே..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Husband’s Responsibilities During Stillbirth

Husband’s Responsibilities During Stillbirth
Story first published: Saturday, September 22, 2018, 12:58 [IST]
Desktop Bottom Promotion