விறைப்பு தன்மை பிரச்சனையா? மனைவி கர்ப்பமடைய இந்த முறையை டிரை செய்யுங்க!

Written By:
Subscribe to Boldsky

ஆண்களுக்கு பொதுவாக வரும் பிரச்சனை என்னவென்றால் இந்த விரைப்பு தன்மை இல்லாமல் போவது தான்.. இளம் வயதிலேயே கூட சிலர் விரைப்பு தன்மை இல்லாமல் சிரமப்படுகின்றனர். விரைப்பு தன்மை இல்லை என்றால் குழந்தை பெறும் கனவு என்பது கனவாகவே போகும்.. ஆனால் இந்த விரைப்பு தன்மை என்பது ஒரு வெளிப்பாடு மட்டும் தான்.. இந்த பிரச்சனையின் பின்னணியில் சில பிரச்சனைகள் இருக்க கூடும். இந்த பகுதியில் இந்த விரைப்பு தன்மை பிரச்சனை உள்ளவர்கள் குழந்தை பெறுவது எப்படி என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனரீதியான பிரச்சனைகள்

மனரீதியான பிரச்சனைகள்

உடலுறவு என்பது எப்போதுமே உடல் சம்மந்தப்பட்டது மட்டுமே கிடையாது. மனது சம்மந்தப்பட்டதும் தான்.. உடலுறவுக்கு முதலில் மனது ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியமாகும். உங்களது மனதில் உள்ள கவலைகள், மன அழுத்தங்கள், பிரச்சனைகள் கூட இந்த விறைப்பு தன்மை இல்லாமல் போவதற்கு காரணமாக அமையலாம். எனவே அது எந்தவிதமான பிரச்சனை என்பதை கண்டறிந்து அதற்குரிய தீர்வை காண வேண்டியது அவசியமாகும்.

மனைவியுடன் பிரச்சனையா?

மனைவியுடன் பிரச்சனையா?

மனைவியின் மீது ஈர்ப்பு இல்லாமல் போவது, மனைவியின் மீதான வெறுப்புகள் கோபங்கள் போன்றவையும் விரைப்பு தன்மை இல்லாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும். எனவே இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அதற்கு தீர்வு காண வேண்டியது அவசியம். இது போன்ற மன பிரச்சனைகளுக்கு உங்களால் சுயமாக தீர்வு காண முடியவில்லை என்றால் நீங்கள் மனநல மருத்துவரின் உதவியுடன் தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

இதை செய்யவும்!

இதை செய்யவும்!

உங்களுக்கு இதை எல்லாம் தாண்டியும் விரைப்பு தன்மையில் பிரச்சனை இருந்து வந்தால் நீங்கள், தினசரி கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டியதும் உடல் எடையை குறைக்க வேண்டியது அவசியமாகும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அதனை கண்டிப்பாக கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகிறது. கண்டிப்பாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டியதும் மிக மிக அவசியமானதாகும்.

மாத்திரைகள்

மாத்திரைகள்

மேற்கண்டவற்றை எல்லாம் செய்தும் கூட இந்த பிரச்சனையானது சரியாகவில்லை என்றால் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும். இந்த மாத்திரைகளை கண்டிப்பாக மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

மருத்துவ முறை கர்ப்பம்

மருத்துவ முறை கர்ப்பம்

இவ்வாறு எல்லாம் செய்தும் கூட ஒருவரால் தானாக விரைப்பு தன்மையை அடைய முடியவில்லை என்றால் இனி மருத்துவ சிகிச்சையின் மூலமாக மட்டுமே ஒரு பெண்ணை கர்ப்பமடைய வைக்க முடியும். இதற்கு என்று சில படிநிலைகள் உள்ளன.

விந்து உள்செலுத்துதல்

விந்து உள்செலுத்துதல்

விந்துவை உள்செலுத்துதல் முறை மூலமாக ஒரு பெண்ணை கர்ப்பமடைய வைக்கலாம். இதனை கர்ப்பத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ள அண்டவிடுப்பு காலத்தில் செய்வார்கள். இதற்கு முதலில் பெண் தேவையான ஸ்கேன் பரிசோதனைகளை செய்ய வேண்டியது அவசியமாகும்.

விந்துவை பிரித்தல்

விந்துவை பிரித்தல்

பெண்ணின் கணவனிடம் இருந்து, நல்ல செயல் திறன் மிக்க விந்துக்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்து பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துவார்கள். இதனால் கணவனுக்கு விரைப்பு தன்மை குறைபாடு இருந்தாலும் கூட ஒரு பெண்ணை கர்ப்பமடைய வைக்க முடிகிறது.

ஏலக்காய்

ஏலக்காய்

ஏலக்காய்தூளானது மிகச்சிறந்த அருமருந்தாகும். இது விரைப்பு தன்மையை தூண்டுவதற்கு பயன்படுகிறது. ஏலக்காய் தூளை பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் நரம்புகள் வலுவடையும். விரைப்பு தன்மை எளிமையானதாகும்.

ஓரிதழ்தாமரை

ஓரிதழ்தாமரை

ஓரிதழ்தாமரையின் இலையை அதிகாலையில் மென்று சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதேபோல், ஓரிதழ் தாமரையின் சமூலத்தையும் (வேர் முதல் பூ வரை) உண்டு வரலாம். இதனால் உங்களுக்கு நல்ல பலன் விரைவிலேயே கிடைக்கும்

பூண்டு

பூண்டு

பூண்டு ஒரு மிகச்சிறந்த ஆணுறுப்பை பெரிது படுத்தும் பொருளாகும். இதில் அலிசின் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது விறைப்பு தன்மையை நீண்ட நேரத்திற்கு தக்கவைக்க உதவியாக உள்ளது.

பாதாம்

பாதாம்

பாதமில் ஜிங்க், சிலினியம், விட்டமின் இ ஆகியவை உள்ளன. இது பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் ஆணுறுப்பை பெரிதுபடுத்த இது உதவுகிறது.

 வெங்காயம்

வெங்காயம்

வெங்காயம் ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது உடலுறவின் வீரியத்தை அதிகரிக்க உதவுகிறது. இது ஆணுறுப்பை பெரிதுபடுத்த மிகச்சிறந்த வீட்டு மருத்துவ குறிப்பாகும்.

கேரட்

கேரட்

கேரட் ஆண்களின் ஆண்மை மற்றும் விந்தணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவுகிறது. இது கருமுட்டையை நோக்கி விந்தணுக்கள் வேகமாக செல்ல தேவையான சக்தியை விந்தணுக்களுக்கு தருகிறது.

ஃபேட்டி ஆசிட் உணவுகள்

ஃபேட்டி ஆசிட் உணவுகள்

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உணவுகள் ஆண்களின் திறனை இயற்கையாகவே அதிகரிக்க உதவுகின்றன. இவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. இது உச்சமடைதலுக்கும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to get pregnant if male partner is having Erectile Dysfunction

How to get pregnant if male partner is having Erectile Dysfunction