Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
பெண்களுக்கு வரும் உடலுறவு கனவுகள் எப்படி இருக்கும் என உங்களுக்கு தெரியுமா?
பெண்களுக்கு வரும் உடலுறவு கனவுகள் பற்றிய உண்மைகள்
கனவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வரும். கனவுகளில் பல விதங்கள் உண்டு. ஆண்களுக்கு உடலுறவு பற்றிய கனவுகள் வருவது போலவே பெண்களுக்கும் உடலுறவு பற்றிய கனவுகள் வருவது உண்டு. பெண்களில் 37% சதவீதம் பேருக்கு இது போன்ற உடலுறவு பற்றிய கனவுகள் அடிக்கடி வருகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது பற்றி இந்த பகுதியில் சில சுவாரசியமான விஷயங்களை காணலாம்.

பெண்களுக்கு எப்படி?
பெண்களுக்கு உடலுறவு கொள்வது போன்ற கனவுகள், பகல் அல்லது இரவு என எந்த உறக்க நேரத்திலும் வரலாம். ஆண்களுக்கு உடலுறவு பற்றிய கனவுகளால் விந்தணுக்கள் வெளியேறுவது போல பெண்களுக்கும் பெண்ணுறுப்புகள் ஈரப்பதமாகின்றன. இது சாதாரணமாக நிகழும் ஒரு விஷயம் தான்.

எப்படி நடக்கிறது !
தூக்க நேரத்தில் பெண்களுக்கு உடலுறவு ரீதியான தூண்டுதல்கள் உண்டாகின்றன. இது யோனி பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலுறவு கொள்வது போன்ற ஒரு உணர்வை தருகின்றன. இது பெண்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும் கூட, இந்த கனவுகளை வேண்டி பெற முடியாது.

எது சார்ந்து இருக்கும்?
இந்த கனவுகள் உடலுறவு சார்ந்தும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இந்த கனவின் போது பெண்களின் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இந்த கனவின் முடிவில் பலருக்கு விழிப்பு வந்துவிடும்.

எத்தனை முறை வரும்?
இந்த உடலுறவு சார்ந்த கனவுகள் பெண்களுக்கு ஒரு வருடத்தில் பல முறைகள் வரலாம். அல்லது ஒரே இரவில் பல தடவைகள் கூட வரலாம்.



Click it and Unblock the Notifications
