மூக்கில்லாமல் பிறந்த அதிசய குழந்தை இரண்டு வயதில் பரிதாப மரணம்

Written By: Lakshmi
Subscribe to Boldsky

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் அழகு தான். நமக்கு எத்தனை கவலைகள் சோகங்கள் இருந்தாலும் குழந்தைகளை பார்க்கும் போது மனம் லோசாகி, அவர்களுடன் விளையாட தோன்றும். குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகு..! எதை செய்தாலும் அழகு..!!

பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சில வழிமுறைகள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலி தாம்சன்

எலி தாம்சன்

அந்த வகையில் இரண்டு வயதே ஆன எலி தாம்சன் அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட ஒரு அழகிய குழந்தை. எப்போது பார்த்தாலும் சிரித்துக்கொண்டே இருக்கும் இவன் தெரியாதவர்களிடம் கூட நட்புடன் நடந்து கொள்வானாம்.

மூக்கு இல்லாமல் பிறந்த குழந்தை

மூக்கு இல்லாமல் பிறந்த குழந்தை

இவன் மற்ற குழந்தைகளை போன்று இல்லை. இந்த குழந்தை பிறக்கும் போதே மூக்கு இல்லாமல் பிறந்தது. நேரில் பார்த்தவர்கள் மற்றும் பேஸ் புத்தகத்தில் பார்த்தவர்கள் என இந்த குழந்தையை தெரிந்த அனைவருக்குமே இவன் செல்லப்பிள்ளை. தினமும் காலையில் தனது குழந்தை பாசையில் பிஸ்கட் வேணும் என்று வேண்டி விரும்பி சாப்பிடுவானாம்.

அர்கினியா

அர்கினியா

அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட இந்த குழந்தை எதிர்பாராத விதமாக தனது இரண்டாவது வயதிலேயே இறந்துவிட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 4-ம் தேதியன்று மூக்கு இல்லாமல் இந்த குழந்தை பிறந்தது. இந்த நிலைக்கு பெயர் 'அர்கினியா' இது மிகவும் அரிதானது. 197 மில்லியனில் ஒரு குழந்தை மட்டுமே இவ்வாறு பிறக்கும்.

மனம் விரும்பும் குழந்தை

மனம் விரும்பும் குழந்தை

எலி தாம்சனை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. இந்த குழந்தையை பற்றி மற்றவர்கள் சொல்வதை கேட்டாலே இவனை விரும்ப ஆரம்பித்துவிடுவார்கள்.

பிஸ்கட்டை விரும்பி சாப்பிடும் இந்த குழந்தைக்கு டே கேரில் குக்கி மான்ஸ்டர் என்ற விருதே கொடுத்துவிட்டார்களாம். எலி தாம்சனுக்கு உள்ள குறைபாடு அரிதானது எனினும், அவனுக்கு தன்னைப் போலவே உள்ள இரண்டரை வயது மதிப்புடைய டிஸ்ஸா எவன்ஸை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இறப்பு

இறப்பு

ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் எலி தாம்சனின் நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் மரணமடைந்தான்.

சில நாட்களே வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக பூத்துக்குலுங்கி அனைவரது மனதையும் கொள்ளை கொண்டு மடியும் பூக்களை போல இந்த சிறுவன் மகிழ்ச்சியாக வாழ்ந்து அனைவரது மனதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டு இறந்துவிட்டான்.

Image courtesy : Facebook

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

very friendly Child without a nose dies at age two

this content about very friendly Child without a nose dies at age two
Story first published: Tuesday, June 13, 2017, 12:40 [IST]