ஆண்களின் விந்தணு ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணங்கள்

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

அனைவருக்கும் தனது குடும்பம் விருத்தியடைய வேண்டும். வீட்டில் ஒரு குழந்தை ஓடி விளையாட வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். இந்த ஆசைக்கு தடைக்கல்லாக இருப்பது கருவுறாமை.

கருவுறாமைக்கு காரணம் பெண்கள் மட்டுமே என்று பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சில காரணங்களால் ஆண்களும் கருவுறாமைக்கு காரணமாகின்றனர். ஆண்களின் கருவுறாமை பிரச்சனை எதனால் உண்டாகிறது, அதை எவ்வாறு குணமாக்கலாம், வராமல் தடுப்பது எப்படி என்பது பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விந்தணுக்கள் குறைபாட்டிற்கு காரணங்கள்

விந்தணுக்கள் குறைபாட்டிற்கு காரணங்கள்

1. புகைப்பிடித்தல்

2. மருந்துகளின் பயன்பாடு

3. மது அருந்துதல்

4. டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு

5. சேதமடைந்த விந்தணு திட்டுகள்

6. க்ளின்ஃபெல்டரின் சிண்ட்ரோம்

7. வைட்டமின் சி, இரும்பு சத்து, மற்றும் ஜிங்க் குறைபாடு

8. இறுக்கமான உள்ளாடைகளை

9. உடலின் நச்சுகள் வெளிப்பாடு

10. மன அழுத்தம்

இது போன்ற காரணங்களால் விந்தணுக்களின் வலிமை குறைகிறது.

விந்தணுக்களை வலிமையாக்க பயன்படும் சில மருந்துகள்:

விந்தணுக்களை வலிமையாக்க பயன்படும் சில மருந்துகள்:

1. க்ளோமிஃபேன் (Clomiphene)

க்ளோமிட்' என்று பிரபலமாக அறியப்படும் இந்த மருந்து, பெண்களில் அண்டவிடுப்பையும் தூண்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. குறைந்த விந்து எண்ணிக்கை கொண்ட ஆண்கள், விந்தணுக்கள் மேம்பட இதை உண்ணலாம்.

2. லேட்ரோசோல் (Letrozole)

2. லேட்ரோசோல் (Letrozole)

விந்தணு பிரச்சனையை குணமாக்க பிரபலமாக பயன்படுத்தப்படும் மற்றுமொரு மருந்து, லேட்ரோசோல் (Letrozole). இது உங்களது உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிப்பதன் மூலம், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

3. மனித மன தளர்ச்சி கோனாடோட்ரோபின் (Human Menopausal Gonadotropin) :

3. மனித மன தளர்ச்சி கோனாடோட்ரோபின் (Human Menopausal Gonadotropin) :

இது ஆண்களின் மலட்டுத்தன்மையை குணப்படுத்த உதவும் மருந்தாகும்.

4. புரோமோக்ரிப்டின் (Bromocriptine):

4. புரோமோக்ரிப்டின் (Bromocriptine):

இந்த மருந்து உங்கள் உடலில் உள்ள புரோலேக்ட்டின் அளவை நடுநிலையாக வைக்க உதவுகிறது.

5. நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் (Antibiotics And Anti-fungal Drugs)

5. நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் (Antibiotics And Anti-fungal Drugs)

சில வகையான தொற்றுக்கள் ஆணின் மலட்டுதன்மைக்கு காரணமாகின்றன. இவற்றிலிருந்து விடுபட இந்த மருந்துகள் உதவுகின்றன.

6. இமிபிரமைன் (Imipramine) :

6. இமிபிரமைன் (Imipramine) :

இந்த மருந்து ரெட்ரோரேஜ் விந்து சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த மருந்துகளை பயன்படுத்தலாமா?

இந்த மருந்துகளை பயன்படுத்தலாமா?

உங்களின் பிரச்சனைகளை பொருத்து இந்த மருந்துகளை பயன்படுத்தலாம். மருத்துவர் உங்களது பிரச்சனையை உணர்ந்து, அதற்கான மருந்துகளை பரிந்துரைப்பது நல்லது.

சிறந்த பலன்களை தருமா?

சிறந்த பலன்களை தருமா?

எதிர்பாராதவிதமாக, இந்த மருந்துகள் பெண்களை விட ஆண்களுக்கு குறைவான பலன்களை மட்டுமே தருகின்றன. ஆனால் இவை வேலை செய்யும். ஆயிரக்கணக்கான ஆண்கள் கருவுறாமை பிரச்சனைக்காக இந்த மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

இவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

இவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

மற்ற மருந்துகளை போலவே, ஆண்களின் கருவுறாமை பிரச்சனைக்கான இந்த மருந்துகளாலும், சில பக்கவிளைவுகள் உண்டாகும். அவை:

  • தற்காலிகமாக தெளிவற்ற பார்வை
  • மார்பகம் விரிவடைதல்
  • மார்பகங்களில் வலி
  • உடல் எடை அதிகரிப்பு
  • கல்லீரல் பாதிப்பு (அரிதாக)
தினசரி பழக்கங்களால் விந்தணுக்களை வலிமையாக்கலாம்

தினசரி பழக்கங்களால் விந்தணுக்களை வலிமையாக்கலாம்

ஆண்களின் கருவுறாமை பிரச்சனையை போக்க சில செயற்கையான மருந்துகள் இருந்தாலும், அவை பின்விளைவுகளை தருகின்றன. நமது வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் எவ்வாறு கருவுறாமை பிரச்சனையை தீர்க்கலாம் என பார்க்கலாம்.

1. நன்றாக சாப்பிட வேண்டும்

1. நன்றாக சாப்பிட வேண்டும்

ஆரோக்கியமான உணவு பழக்கம் வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை கொண்டு வரும். அனைத்து சத்துக்களும் உள்ளடங்கிய உணவுகளை சாப்பிடும் போது, உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாமல் போகிறது. இதனால் கருவுறுதலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உங்களுடைய உணவில் மினரல், விட்டமின்கள், இரும்பு சத்துக்கள் ஆகியவை இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

2. புகைப்பழக்கத்தை விடுங்கள்

2. புகைப்பழக்கத்தை விடுங்கள்

இது உங்கள் புகைப்பழக்கத்தை விட மிகச்சரியான நேரம். இது ஆண்களின் விந்தணுக்களுக்கு சேதத்தை உண்டாக்குகிறது. மேலும் உடல்நலத்திற்கும் புகைப்பிடித்தல் உகந்ததல்ல. எனவே இன்றே புகைப்பிடிப்பதை கைவிடுங்கள்.

3. மது பழக்கம்

3. மது பழக்கம்

மது அருந்துதல் ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு காரணமாக உள்ளது. எனவே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

4. அதிக வெப்பநிலை

4. அதிக வெப்பநிலை

நீங்கள் அதிக சூடான நீரில் குளிப்பவரா? இது உங்கள் உயிரணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும்.

5. இறுக்கமான ஆடை

5. இறுக்கமான ஆடை

இறுக்கமான ஆடைகள் உங்கள் தோற்றத்தை வேண்டுமானால் மேம்படுத்தி காட்டலாம். ஆனால் இது உங்களது உயிரணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. எனவே இறுக்கமான உள்ளாடைகள், ஜீன்ஸ் மற்றும் பேண்டுகள் அணிவதை தவிர்க்கவும்.

6. மன அழுத்தம் வேண்டாம்

6. மன அழுத்தம் வேண்டாம்

கருவுறாமைக்கு மன அழுத்தம் ஒரு காரணமாகிறது. எனவே நன்றாக தூங்குங்கள், பிரச்சனைகளை எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். தியானம் செய்யுங்கள்.

7. போதுமான ஊட்டச்சத்து உணவு

7. போதுமான ஊட்டச்சத்து உணவு

நிறைய சத்துக்கள் நிறைந்த உணவுகள் உங்களது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். விட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: pregnancy
English summary

how to treat male infertility

here are the some tips to treat male infertility