கருவிலேயே உங்கள் குழந்தை புத்திசாலியா இருக்கணுமா? இதோ சில டிப்ஸ்!!

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

உங்கள் கருவில் இருக்கும் குழந்தையை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தையும் இஞ்ச் பை இஞ்ச்சாகக் கவனித்துக் கொண்டிருக்கும் ஒரே நபர் கருவிலிருக்கும் உங்கள் குழந்தை தான். உங்களுடைய நல்ல மற்றும் கெட்ட குணங்கள் அனைத்தையும் அது தனக்குள்ளும் கிரகித்துக் கொண்டிருக்கும்.

கருவில் இருக்கும் போதே குழந்தைகள் தங்கள் தாயிடமிருந்து ஐ.க்யூ. என்னும் புத்திசாலித் திறனை சிறிது சிறிதாக வளர்த்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, உங்கள் நடவடிக்கைகளை எப்போதும் பாஸிட்டிவ்வாகவே வைத்துக் கொள்ளுங்கள்; உங்கள் உடம்பையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் குழந்தையும் அதிபுத்திசாலியாகப் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கருவிலேயே உங்கள் குழந்தை புத்திசாலியாக வளர்வதற்கான சில வழிகளை இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக ஃபோலேட் உணவுகள்

அதிக ஃபோலேட் உணவுகள்

ஃபோலிக் அமிலம் அதிகமுள்ள உணவுகளை நீங்கள் சாப்பிடுவதால், கருவில் உள்ள குழந்தையின் புத்திசாலித்தனம் மளமளவென்று வளர்கிறதாம். தினமும் 400 மைக்ரோகிராம் ஃபோலேட் உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வது முக்கியம். குழந்தை பிறப்பில் ஏற்படும் சில குறைபாடுகளைக் களைவதற்கும் இது மிகவும் உதவுகிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

கருவில் உள்ள குழந்தையின் புத்திசாலித்தனத்தை அதிகப்படுத்துவதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாக, டிஎச்ஏ (DHA) என்ற ஒருவகை ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தில் இதற்கான பவர் அதிகம் உள்ளதாம்.

கருவை வருட வேண்டும்

கருவை வருட வேண்டும்

கரு இருக்கும் வயிற்றுப் பகுதியை நீங்கள் அடிக்கடி லேசாக அழுத்தித் தடவிக் கொடுக்க வேண்டும். இதனால் கருவுக்குள் செல்லும் இரத்த ஓட்டம் சீராக அதிகரிக்கும்.

குழந்தையோடு பேசுங்கள்

குழந்தையோடு பேசுங்கள்

கருவில் இருக்கும் உங்கள் குழந்தையோடு நீங்கள் தினமும் பேச வேண்டும். கரு உருவான 15 வாரங்களில் குழந்தைக்குக் கேட்கும் திறன் வந்து விடுமாம். தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் உங்கள் குழந்தையோடு சத்தமாகப் பேசினால், அது கேட்டு தனக்குள் கிரகித்துக் கொள்ளுமாம்.

அதிகம் இசை கேளுங்கள்

அதிகம் இசை கேளுங்கள்

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இசை ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. நல்ல இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்குக் கற்றல் திறன் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

மன அழுத்தத்தைக் குறையுங்கள்

மன அழுத்தத்தைக் குறையுங்கள்

உங்களுக்கு ஏதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் அதை உடனே தூக்கி எறிந்து விடுங்கள். அதை நீங்கள் தக்க வைத்துக் கொண்டு எப்போதுமே சோகமாக இருந்தால், அது உங்கள் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியை மோசமாகப் பாதிக்க வாய்ப்புள்ளது.

நோ ஸ்மோக்கிங்

நோ ஸ்மோக்கிங்

நீங்கள் கருவைச் சுமந்து கொண்டிருக்கும் போது, கண்டிப்பாக புகைப்பிடிக்கக் கூடாது. கருவில் உள்ள குழந்தையின் மூளையையும் ஐ.க்யூ. திறனையும் உங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கடுமையாகப் பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips To Boost Your Baby's IQ In The Womb

A healthy lifestyle for mothers includes eating healthy and doing specific things that will consummate the growth of the foetus in the womb. Giving up unhealthy habits is also one of the important things. Let us go ahead and look at these tips to boost your baby's IQ in the womb.
Story first published: Thursday, November 6, 2014, 15:27 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter