For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கான சில சிம்பிளான வழிகள்!!!

By Maha
|

இன்றைய காலத்தில் திருமணமானவுடன் குழந்தைப் பெற்றுக் கொள்வதை விட, வாழ்க்கையில் செட்டில் ஆனப் பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் தம்பதிகள் தான் அதிகம். ஆனால் வாழ்க்கையில் செட்டில் ஆவதற்குள் 30 வயதிற்கு மேல் ஆகிவிடுகிறது. இப்படி 30 வயதிற்கு மேல் கருத்தரிக்க முயற்சித்தால், அது முடியாத காரியமாகிவிடுகிறது.

ஏனெனில் வயதாக ஆக கருத்தரிக்கும் திறன் குறைவதால், 30 வயதிற்கு மேல் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, 30 வயதிற்கு மேல் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதற்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள் வளர்தல் மற்றும் கருப்பையின் அகத்திரை கடினமாதல் போன்றவையும் தடையை ஏற்படுத்துகின்றன.

Simple Ways To Increase Fertility After 30

இருப்பினும் 30 வயதிற்கு மேல் பலர் கருத்தரித்து குழந்தைப் பெற்றுள்ளனர் என்பதால், முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அதற்கு ஒருசில செயல்களை சரியாக பின்பற்ற வேண்டும். இதனால் எளிதில் கருத்தரிக்க முடியும். இப்போது அவை என்னவென்று பார்ப்போம்.

* கருத்தரிக்க முயற்சித்து முடியாவிட்டால், அப்போது உடனே பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்ளாமல், உண்ணும் உணவை சற்று கவனியுங்கள். ஏனெனில் ஒருசில உணவுகளை உண்பதன் மூலம், கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து, அவரது ஆலோசனையின் படி உணவுகளை உட்கொண்டு வாருங்கள்.

* வயதானால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். குறிப்பாக பெண்கள் தான் அதிகமான எடையைப் பெறுவார்கள். ஆகவே உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொண்டு, கருத்தரிக்க முயற்சிக்க வேண்டும்.

* வயதானால் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும். ஆகவே குழந்தைப் பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டால், மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். அதற்கு யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

* தினமும் உடலுறவு கொண்டால், கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே தினமும் உடலுறவு கொள்ள வேண்டும்.

* தற்போது பெண்கள், ஆண்கள் என வேறுபாடு இல்லாமல், அனைவரும் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது என இருக்கின்றனர். ஆனால் தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ள நினைப்போர், ஆரம்பத்திலிருந்தே, இத்தகைய பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பிற்காலத்தில் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.

மேற்கூறியவற்றையெல்லாம் நம்பிக்கையுடன் பின்பற்றினால், நிச்சயம் அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

English summary

Simple Ways To Increase Fertility After 30

A woman's fertility level tends to decrease after the late thirties. This can happen due to various reasons like irregular menstrual cycle, uterine fibroids, thickening of the uterine lining etc. But there has been found a nuber of ways in which the fertility level can be increased even at this age, naturally. Let us have a look at the simple ways to increase fertility level after the age of 30.
Story first published: Tuesday, November 19, 2013, 18:09 [IST]
Desktop Bottom Promotion