For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனப்பெருக்கம் ஆரோக்கியமாக இருக்க தவிர்க்க வேண்டிய பானங்கள்!!!

By Ashok CR
|

சிலவகை பானங்களை பருகுவதால் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அதனால் இவ்வகை பானங்கள் பருகுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். அல்லது அவைகளை முழுமையாக தவிர்த்து விட வேண்டும். இல்லையென்றால் உங்கள் இனப்பெருக்க ஆரோக்கியம் நேரடியாக பாதிக்கப்பட்டு மலட்டுத் தன்மை உண்டாகும் இடர்பாடு ஏற்படும். குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தள்ளி வைக்க விரும்பும் பல ஆண்களுக்கு இனப்பெருக்க தன்மை அதிகமாக இருக்கும் போது அதற்காக அஞ்சுவார்கள். ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டால் அது வரை நீங்கள் ஆரோக்கியமாகவும் நேர்மறையான மனநிலையோடும் இருக்க வேண்டாமா? அப்படி இல்லையென்றால் இனப்பெருக்கம் செய்ய வேண்டிய நேரத்தில் சிக்கல்கள் உண்டாகும். மேலும் உங்களின் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்து தான் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் அமையும்.

ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படுத்தும் பானங்களில் மிகப்பெரிய திருடனாக பார்க்கப்படுவது மதுபானம். மதுபானம் அருந்தும் பெரும்பாலான ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் போது அந்த முயற்சியில் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்கின்றனர். அளவுக்கு அதிகமாக மதுபானத்தை பருகும் போது உங்கள் விந்துவின் வீரியமும் அதன் எண்ணிக்கையும் வெகுவாக குறையத் தொடங்கும். வோட்கா, ஜின் மற்றும் வெள்ளை ரம் போன்ற மதுபான வகைகள் மலட்டுத்தன்மையை உண்டாக்கும் சக்தி வாய்ந்த இயற்றிகளாகும். அதனால் எப்போதாவது வைன் குடிப்பதற்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.

மதுபானத்திற்கு பிறகு ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கும் பானங்களில் அடுத்த இடத்தை பெற்றுள்ளது காப்ஃபைன். ஆண்களில் பலர் காபி மற்றும் காப்ஃபைன் கலந்துள்ள எனெர்ஜி பானங்களை அதிகமாக குடிக்கின்றனர். காப்ஃபைன் உட்கொள்ளளவு ஒரு அளவை மீறும் பொது அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விடும். ஒரு ஆண் ஒரு நாளைக்கு 300 mg அளவுக்கு மேல் காப்ஃபைன் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. எவ்வளவுக்கு அளவு குறைவாக அதனை பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவுக்கு அளவு உடல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்துடன் விளங்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காபி

காபி

காலையில் நீங்கள் பருகும் ஒரு கப் காபியை நிறுத்த தேவையில்லை. ஆனால் ஒரு நாளைக்கு 200 மில்லிகிராமுக்கு மேல் கார்ஃபைன் பருகினால், அதாவது 1-8 அவுன்ஸ் கப் அளவில் பருகினால், அதனை கண்டிப்பாக நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். காப்ஃபைன் உட்கொள்ளளவு அதிகமாக இருக்கும் போது மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் உடலுறவில் ஈடுபடும் எண்ணிக்கையும் குறைந்து விடும். காப்ஃபைன் பருகுவதால் உங்கள் உடலில் இரும்புச்சத்து உட்கொள்ளுதல் பாதிப்படையும். மேலும் இதனை அதிகமாக பருகும் போது நீர்ச்சத்து குறைந்து போகும். அதனால் அதனை குறைப்பதே நல்லது.

அடிக்கடி மதுபானம் குடித்தல்

அடிக்கடி மதுபானம் குடித்தல்

நண்பர்கள் அழைத்தார்கள் என்பதற்காக அடிக்கடி பார்ட்டி போன்ற இடங்களுக்கு சென்று குடிப்பதை தவிர்க்கவும். அதுவும் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் வேளையில் கண்டிப்பாக இவைகளை தவிர்க்க வேண்டும். அப்படியே செல்லும்படி ஆனாலும் பேருக்கு சிறிதளவு மட்டும் பருகுங்கள். அளவுக்கு அதிகமாக மதுபானங்களை பருகினால் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் உண்டாகும். இதனால் உங்கள் விந்துவின் வீரியம் குறைவதோடு மட்டுமல்லாது உங்களது ஆண்மையும் குறையும்.

மதுபானம் போன்ற அல்கஹால்

மதுபானம் போன்ற அல்கஹால்

அளவுக்கு அதிகமாக மதுபானம் போன்ற அல்கஹால் பானங்களை குடிக்கும் போது உங்களின் டெஸ்டோஸ்டேரோன் அளவுகள் குறைந்து விந்துவின் வீரியமும் எண்ணிக்கையும் குறையும். மேலும் அது உங்களின் ஆண்மையை குறைத்து கடைசியில் ஆண்மையற்றவராக மாற்றி விடும். ஒரு ஆண் அளவுக்கு அதிகமாக குடிப்பதால் அவனுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் குறைந்து விடும். இருப்பினும் நீங்கள் குடிப்பதை குறைத்து விட்டால் இந்த நிலைமையை மாற்றலாம். மதுபானங்கள் உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்தை வேகமாக வெளியேற்றி விடும். அதனால் உங்கள் விந்துவின் வீரியம் பாதிப்படைகிறது. நீர்ச்சத்து அளவுக்கு அதிகமாக குறைவதால் உங்கள் உடலில் உள்ள உள் உறுப்புகள் மற்றும் திசுக்கள் பாதிப்படையும்.

எனர்ஜி பானங்கள் மற்றும் காற்று கலந்த பானங்கள்

எனர்ஜி பானங்கள் மற்றும் காற்று கலந்த பானங்கள்

இவ்வகை பானங்கள் நேரடியாக உங்கள் இனப்பெருக்க உறுப்புகளை பாதிப்பதில்லை. இருந்தாலும் அளவுக்கு அதிகமாக கோலா குடிப்பதாலும் ஆற்றலை அதிகரிக்க காப்ஃபைன் கலந்த எனர்ஜி பானங்களை குடிப்பதாலும் சில எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படுகிறது. காற்று கலந்த பானங்களை பருகினால் உங்களின் செரிமான உறுப்புகளில் எதிர்மறையான தாக்கத்தை அவை உண்டாக்கும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். மலச்சிக்கல் பிரச்சனை நீடித்துக் கொண்டே போனால் இரத்தத்தின் தரம் பாதிப்படையும். அதே போல் எனர்ஜி பானங்களை அதிகமாக குடித்தாலும் அதில் கலக்கப்பட்டுள்ள காப்ஃபைன் பல பாதிப்புக்களை உண்டாக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Drinks To Avoid For Better Reproductive Health

Reproductive health in men is highly affected by consumption of few drinks. You should take care in avoiding or limiting these drinks that directly affect your reproductive health and risk infertility.
Story first published: Monday, December 23, 2013, 19:45 [IST]
Desktop Bottom Promotion