For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி?

கொரோனா பெருந்தொற்று குழந்தையின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனாலும் உங்கள் குழந்தையை இந்த கொடிய வைரஸிடமிருந்து பாதுகாப்பது மிக முக்கியம்.

|

கொரோனா பெருந்தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்தில் உங்கள் வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறந்திருந்தாலோ அல்லது கைக்குழந்தை இருந்தாலோ மிகவும் கவனமாக அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் இல்லத்தில் அல்லது உங்கள் இல்லத்தின் அருகாமையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தாலும், உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தையை தகுந்த பாதுகாப்புடன் கவனித்துக் கொள்வது அவசியமாகிறது.

How To Keep Your Baby Safe During The COVID-19 Pandemic

கொரோனா பெருந்தொற்று குழந்தையின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனாலும் உங்கள் குழந்தையை இந்த கொடிய வைரஸிடமிருந்து பாதுகாப்பது மிக முக்கியம்.

MOST READ: ஒருவருக்கு கொரோனா வந்துட்டா, இந்த பிரச்சனையை வாழ்நாள் முழுக்க சந்திக்க வாய்ப்பிருக்காம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெருந்தொற்று காலத்தில் உங்கள் குழந்தையை பாதுகாப்பது குறித்த முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

பெருந்தொற்று காலத்தில் உங்கள் குழந்தையை பாதுகாப்பது குறித்த முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

முன்னெப்போதும் விட இந்த கொரோனா தொற்று காலத்தில் உங்கள் குழந்தை மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து உங்களுக்குள் கவலை ஏற்படுவது பொதுவானது. ஆனால் பயம் வேண்டாம். சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில நிலைகளை பின்பற்றுவதால் உங்கள் குழந்தையை கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும்.

சுகாதாரமான பழக்கங்களை பின்பற்றுங்கள்:

சுகாதாரமான பழக்கங்களை பின்பற்றுங்கள்:

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைப்படி, சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அல்லது ஆல்கஹால் அடிப்படை கொண்ட கிருமிநாசினி கொண்டு 20 நொடிகள் உங்கள் கைகளைக் கழுவ வேண்டும். குழந்தையை தூக்கும் போது உங்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு அவர்களின் வாய், மூக்கு போன்ற பகுதிகளை தொடாமல் இருப்பது நல்லது.

சமூக விலகல் வழிகாட்டுதலை பின்பற்றுங்கள்:

சமூக விலகல் வழிகாட்டுதலை பின்பற்றுங்கள்:

நோய் கட்டுப்பாடு நிறுவனம் மற்றும் அரசு வழிகாட்டுதல் படி, சமூக விலகலை கடைபிடிப்பது மிகவும் அவசியம். உங்கள் வீட்டில் புதியவரவான குழந்தையை காண்பதற்கு உங்கள் உறவினர்கள் மிகவும் ஆவலாக இருப்பார்கள். ஆனால் அப்படி காண வருபவர்கள் தகுந்த இடைவெளியில் அமர்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். அல்லது காணொளி காட்சி வழியாக அவர்களிடம் உங்கள் குழந்தையை காண்பிக்கலாம். தற்போது உள்ள நிலவரப்படி கொரோனா தொற்று பாதிப்பில் 45% எந்த அறிகுறியையும் கொள்வதில்லை.

குழந்தைக்கு தேவையானவற்றை இருப்பில் வைத்துக் கொள்ளுங்கள்:

குழந்தைக்கு தேவையானவற்றை இருப்பில் வைத்துக் கொள்ளுங்கள்:

அடுத்த சில வாரங்களுக்கு உங்கள் குழந்தைக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்களை இருப்பில் வைத்துக் கொள்வது நல்ல யோசனை. இதனை பின்பற்றுவதால் அடிக்கடி வெளியில் சென்று வரும் வாய்ப்பு குறையும். வெளியில் யார் கிருமியை சுமந்து வருகிறார் என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால் குழந்தைக்கு தேவையான உணவு, மருந்துகள், தெர்மாமீட்டர் மற்றும் இதர வீட்டுக்கு தேவையான பொருட்களான சோப்பு, டாய்லெட் பேப்பர், டயப்பர் போன்றவற்றை இருப்பில் வைத்துக் கொள்வது நல்லது.

குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்:

குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்:

உங்கள் வீட்டில் அதிகமாக பயன்படுத்தும் இடங்களை சுத்தம் செய்வதோடு கூடுதலாக குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு பொம்மைகள் போன்றவற்றை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவுவது அவசியம் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது. மேலும் குழந்தை பயன்படுத்தும் பாட்டில், பிளாஸ்டிக் பொருட்கள், மெத்தை விரிப்பு மற்றும் ஆடைகள் போன்றவற்றையும் சுத்தம் செய்ய மறக்க வேண்டாம்.

தாய்ப்பால் கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்:

தாய்ப்பால் கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்:

குறிப்பாக இந்த காலகட்டத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம் என்று பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஒரு புதிய ஆய்வை வெளியிட்டுள்ளது. மேலும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தொற்று அறிகுறி ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இல்லையேல் அது அவர்கள் குழந்தையை பாதிக்கக்கூடும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் உங்கள் கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைக்கு பால் கொடுக்கும்போது மாஸ்க் அணிந்து கொள்வது அவசியம். குழந்தைக்கு பால் புகட்டும் பாட்டிலை தொடுவதற்கு முன் உங்கள் கைகளை சுத்தமாக கழுவவும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறும் அறிவுரைகளை பின்பற்றுவதால் உங்கள் குடும்பத்தில் குறிப்பாக உங்கள் குழந்தைக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Keep Your Baby Safe During The COVID-19 Pandemic

Want to know how to keep your baby safe during the COVID-19 pandemic? Read on...
Desktop Bottom Promotion