உண்மையாவே கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிடலாமா?... என்ன பிரச்னை வரும்னு தெரியுமா?

Subscribe to Boldsky

குங்குமப் பூ இது பொதுவாக ஜபரான், கேசர், கூங் அல்லது குங்குமப் பூ என்ற பல பேர்களில் அழைக்கப்படுகிறது. நிறைய உணவுகளில் நிறத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் இந்த பொருள் மருந்தாக கூட பயன்படுகிறது. அதிலும் கர்ப்ப கால பெண்கள் இதை சேர்த்துக் கொள்ளும் போது நிறைய நன்மைகளை பெறுகின்றனர்.

prganancy

இதன் மருத்துவ குணத்தால் சீரணிக்கும் தன்மை மற்றும் பசியை அதிகரித்து கர்ப்ப காலம் சிக்கல் இல்லாமல் இருக்க உதவுகிறது. இருப்பினும் இதை போதுமான அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதைப் பற்றிய ஏராளமான வதந்திகள் இருந்து வருகிறது. சரி வாங்க இந்த குங்குமப் பூவின் நன்மை தீமைகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குங்குமப் பூ

குங்குமப் பூ

குரோக்கஸ் சட்டிஸ் பூவின் உலர்ந்த மகரந்த முடிகள் தான் இந்த குங்குமப் பூ என்பது. இது அந்த பூவின் நடுப்பகுதியில் இருந்து பெறப்படுகிறது. ஒரு பூவிலிருந்து மூன்று குங்குமப் பூ முடிகள் மட்டுமே கிடைக்கின்றன. இந்த குங்குமப் பூ உலகளவில் விலை உயர்ந்த மருந்துப் பொருளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொருத்த வரை அதிகமாக காஷ்மீர் மலைப்பிரேசத்தில் இதை உற்பத்தி செய்கின்றனர். இவை தான் 'மசாலாக்களின் ராஜா' என்ற விலையுயர்ந்த பெயரை பெற்றுள்ளது. இதன் சிறப்பும் ஈடுயிணையற்று விளங்குகிறது.

பயன்கள்

பயன்கள்

குங்குமப் பூ பொதுவாக பிரியாணி, கீர், ஸ்வீட்ஸ் என்று சமையல் துறையிலும் பியூட்டி க்ரீம் போன்ற அழகுத் துறையிலும் என்று இதன் பயன்கள் எல்லாத் துறைகளிலும் தலைதூக்கி நிற்கிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கவும் இது உதவுகிறது.

ஆண்மை பிரச்சினைக்கு பயன்படுகிறது.

ஆஸ்துமா, விறைப்பு குறைபாடு, புற்றுநோய், வழுக்கை போன்று இதன் நன்மைகள் ஏராளம்.

ஆனால் இந்த பயன்களை கொடுக்கின்றன என்பதற்கு எந்தவொரு ஆராய்ச்சி ஆதாரமும் இல்லை. ஆனால் இதை காலம் காலமாக இதற்காக பயன்படுத்தி வரும் மக்கள் இதன் நன்மைகள் சாத்தியமே என்கின்றனர்.

குழந்தைக்கு பாதிப்பா?

குழந்தைக்கு பாதிப்பா?

கர்ப்ப கால பெண்கள் குங்குமப் பூவை எடுத்து வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று காலம் காலமாக குங்குமப் பூ பற்றி ஒரு மரபு இருந்து வருகிறது. ஆனால் இந்த மாதிரியான மரபுகளை முதலில் கண்மூடித்தனமாக நம்புவதை நிறுத்துங்கள். ஒரு நாளைக்கு 10 கிராமுக்கு அதிகமாக குங்குமப் பூ எடுத்து வந்தால் நீங்களும் கருவில் வளரும் குழந்தையும் மரண அடைய நேரலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதற்கு எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. நீங்கள் அளவுக்கு அதிகமாக குங்குமப் பூவை எடுத்து வந்தால் கருச்சிதைவு ஏற்படக் கூட நேரலாம்.

மரபணு

மரபணு

ஒரு குழந்தையின் நிறம் என்பது மரபணு சார்ந்ததாகவோ அல்லது பரம்பரை சார்ந்ததாகவோ மட்டுமே இருக்கும்.

பியூட்டி ஏஜெண்ட்

பியூட்டி ஏஜெண்ட்

சருமத்திற்கு அழகு சேர்ப்பதற்காக மட்டுமே இந்த குங்குமப் பூவை அழகுத் துறையில் பயன்படுத்துகின்றனர். இது கருவில் வளரும் குழந்தைக்கு எந்த விதத்திலும் நிறத்தை கொடுப்பதில்லை என்பதே உண்மை.

குங்குமப் பூ பால்

குங்குமப் பூ பால்

குங்குமப் பூவை சிறுதளவு பாலில் கலந்து கர்ப்ப காலத்தில் குடித்து வரலாம். ஏனெனில் இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன. பாலில் நிறைய கால்சியம் இருப்பதால் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அதனுடன் இரண்டே இரண்டு குங்குமப் பூக்களை போட்டு பருகுவதால் உங்கள் தசைகள் ரிலாக்ஸ் அடையும், சீரண சக்தியை மேம்படுத்தும், உடலில் உள்ள பிரச்சினைகளை ஆற்றும்.

இதர உணவுகள்

இதர உணவுகள்

இந்த குங்குமப் பூவை பாலுடன் மட்டுமல்லாது கீர், பிரியாணி, லசி போன்றவற்றிலும் சேர்த்து சுவைக்கலாம்.

அபாயம்

அபாயம்

நீங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ளும் போது கர்ப்ப பை சுருங்கி விரிதல் அதிகரித்து கர்ப்ப காலம் சிக்கலுக்கு உள்ளதாக மாறிவிடும். ஒரு நாளைக்கு 10 கிராம்க்கு மே் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது.

மனநிலை

மனநிலை

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடல் ரீதியாக ஹார்மோன் மாற்றம் நிகழும். இதனால் அவர்கள் சோர்வு, மன அழுத்தம் இவற்றை சந்திக்க நேரிடும். எனவே இந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் குங்குமப் பூவை எடுத்து வந்தால் மூளையில் உள்ள செரோடோனின் ஹார்மோனை தூண்டி உங்கள் சோர்வு மற்றும் மன அழுத்தத்தை நீக்கி உற்சாகமாக்கும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

பாலில் 3 - 4 குங்குமப் பூவை போட்டு கர்ப்ப காலத்தில் குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும். தசைகளை ரிலாக்ஸ் செய்து கர்ப்பபை செயல்பாட்டை தூண்டுகிறது.

சீரண சக்தி

சீரண சக்தி

கர்ப்ப காலத்தில் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு மந்தம் போன்றவை. எனவே இந்த குங்குமப் பூ நமது சீரண மண்டலத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. பாலைக் கூட எளிதாக சீரணிக்கும் சக்தி குங்குமப் பூவிற்கு உள்ளது.

காலை உபாதைகள்

காலை உபாதைகள்

கர்ப்ப காலத்தில் காலையில் எழுந்ததும் தலைசுற்றல், குமட்டல், சோர்வு போன்றவற்றை தினமும் அனுபவிப்பார்கள். எனவே இதற்கு ஒரு கப் குங்குமப் பூ டீ போட்டு குடித்தாலே போதும் எல்லாம் பிரச்சினைகளும் காணாமல் போகும்.

குணப்படுத்துதல்

குணப்படுத்துதல்

இயற்கையாகவே குங்குமப் பூ ஒரு வலி நிவாரணி ஆகும். இதில் ஆன்டி பேஸ்மோடிக் பொருட்கள் உள்ளன. இதனால் தசைகள் மற்றும் மூட்டுகளை ரிலாக்ஸ் செய்தல், வயிற்று வலியை குணப்படுத்துதல், மாதவிடாய் வலி போன்றவற்றிற்கு பை பை சொல்லி விடுகிறது.

அனிமியா

அனிமியா

குங்குமப் பூவில் இரும்புச் சத்து இருப்பதால் கர்ப்ப காலத்தில் உங்கள் ஹூமோகுளோபின் அளவை பராமரிக்க இது பயன்படுகிறது.

இதய நோய்கள்

இதய நோய்கள்

நீங்கள் கர்ப்ப காலத்தில் சீஸ், பர்கர், சாக்லேட், ஐஸ் கிரீம் போன்ற ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்து வந்தால் உங்கள் குழந்தையின் இதயம் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், குரோசிடின் உள்ள குங்குமப் பூவை எடுத்து வரும் போது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இரத்த குழாய்களில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உங்கள் பட்டு போன்ற குழந்தையின் பிஞ்சு இதயத் துடிப்பை காக்கிறது.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக சரியான தூக்கம் வராது. எனவே நீங்கள் படுப்பதற்கு முன் குங்குமப் பூ பால் அல்லது டீ பருகிச் சென்றால் நிம்மதியாக உறங்குவீர்கள்.

ஈறுகள்

ஈறுகள்

கர்ப்ப காலத்தில் உங்கள் உடல் மிகவும் உணர்வு திறனுடன் காணப்படும். இந்த மாதிரியான காலங்களில் பற்களின் ஈறுகளை காக்க இரண்டு குங்குமப் பூவை கொண்டு ஈறுகளை நன்றாக மசாஜ் செய்தாலே போதும்.

அழற்சி

அழற்சி

சில சமயங்களில் கர்ப்ப காலத்தில் அழற்சி ஏற்படலாம். முதல் கர்ப்பம் தரிப்பவர்கள் இந்த மாதிரியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குங்குமப் பூ பால் உங்கள் இருமல், ஆஸ்துமா, சலதோஷம் போன்றவற்றை சரியாக்குகிறது. சந்தன கட்டை பொடி மற்றும் குங்குமப் பூ கலந்து போட்டால் உங்கள் காய்ச்சல் கூட இயற்கையாகவே குணமாகிவிடும்.

முடி வளர்ச்சி

முடி வளர்ச்சி

. கர்ப்ப காலத்தில் சந்திக்கும் மற்றொரு பெரிய பிரச்சினை முடி உதிர்தல். கொஞ்சம் மதுபானம், பால் மற்றும் குங்குமப் பூ சேர்த்து முடி உதிர்தல் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

சரும பிரச்சினைகள்

சரும பிரச்சினைகள்

ஹார்மோன் சமநிலையின்மையால் முகத்தில் பருக்கள், கருமையான சருமம் போன்றவை ஏற்படும். குங்குமப் பூ இரத்தத்தை சுத்தப்படுத்தி இந்த சரும பிரச்சினைகளை எதிர்த்து போரிடுகிறது.

குழந்தையின் அசைவு

குழந்தையின் அசைவு

ஒரு டம்ளர் குங்குமப் பூ பால் குடித்தாலே போதும் உங்கள் குழந்தை அதன் விருப்பத்தை காட்ட ஆரம்பித்து விடும். குங்குமப் பூவால் உங்கள் உடல் வெப்பநிலை சற்று உயர்வதால் உங்கள் குழந்தையின் அசைவுகளை நீங்கள் உணரலாம். இருப்பினும் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.

இயற்கை ஆன்ட்ஆசிட்

இயற்கை ஆன்ட்ஆசிட்

குங்குமப் பூ இயற்கையிலேயே ஒரு ஆன்ட்ஆசிட் ஆகும். இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சினையை சரி செய்தல் போன்றவற்றையும் செய்கிறது.

ஊட்டச்சத்துகள்

ஊட்டச்சத்துகள்

இதில் தயமின், ரிபோப்ளவின், நியசின், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி, போலிக் அமிலம் போன்றவைகள் உள்ளன.

விளைவுகள்

விளைவுகள்

கருச்சிதைவு

மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு 10 கிராமிற்கும் அதிகமாக குங்குமப் பூவை எடுத்துக் கொள்ளும் போது நமது உடல் வெப்பநிலை அதிகமாகி கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தையின் அசைவில் எதாவது மாற்றம் தென்பட்டால் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

அழற்சி

அழற்சி

நீங்கள் குங்குமப் பூவை எடுத்த பிறகு வறண்ட வாய், பயம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவை தென்பட்டால் குங்குமப் பூவால் அழற்சி ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். எனவே உடனே அதை நிறுத்தி விடுங்கள்.

வாந்தி

வாந்தி

இது அமிலத் தன்மையை ஏற்படுத்தி உணவை எதுக்களித்தல், வாந்தி போன்றவற்றை உண்டாக்கும்.

அபாயமான கட்டம்

அபாயமான கட்டம்

மூக்கு, உதடு மற்றும் இமைகள் இவற்றில் இருந்து இரத்தம் வடிதல்,

உணர்வின்மை

சிறுநீர் மற்றும் மலம் வழியாக இரத்தம் வருதல்

சோர்வு, மயக்கம், தடுமாறுதல் ஏற்படுதல்

மஞ்சள் காமாலை

தேர்ந்தெடுத்தல்

தேர்ந்தெடுத்தல்

விலை உயர்ந்த இந்த குங்குமப் பூவை சரியாக தேர்ந்தெடுத்து வாங்குவதும் முக்கியம். கலப்படம் இல்லாத தரமான குங்குமப் பூவை பார்த்து வாங்கினால் தான் அதன் பயனை நம்மால் பெற இயலும்.

பேக்டு பொருள்

பேக்டு பொருள்

உங்களுக்கு அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் மற்றும் கடைகளில் பேக் செய்த வடிவில் இவைகள் கிடைக்கும். நல்ல பிராண்ட் மற்றும் ஐஎஸ்ஐ முத்திரை பதிக்கப்பட்ட குங்குமப் பூ பேக்குகளை வாங்குங்கள்.

லேபிள்

லேபிள்

கண்டிப்பாக பேக்கின் லேபிள்கள் மற்றும் காலாவதி தேதியை படிக்க மறந்துவிடாதீர்கள்.

அடர்ந்த சிவப்பு

அடர்ந்த சிவப்பு

வாங்கும் போது அதன் நிறத்தையும் கவனியுங்கள். அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். நிறம் அதன் உண்மை தன்மையை கூறுகிறது. ப்ரஷ்ஷாக இருக்கும் குங்குமப் பூவை வாங்கி பயன்படுத்துங்கள். குங்குமப் பூ பொடி போன்றவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் குறைந்து அதன் இயற்கை குணங்கள் குறைந்து காணப்படும். எனவே எப்பொழுதும் ப்ரஷ்ஷான ஒன்றை தேர்ந்தெடுங்கள்.

காற்று புகாத டப்பா

காற்று புகாத டப்பா

காற்று புகாத டப்பாக்களில் அடைத்து அலுமினியம் பேப்பரால் சுத்தி வைக்கப்பட்ட குங்குமப் பூவை நாடுங்கள். இவைகள் நீண்ட காலம் கெடாமல் அப்படியே இருக்கும்.

விலை

விலை

இந்த குங்குமப் பூ வளர்வதற்கு சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை நிலவ வேண்டும். இவை இந்தியாவில் காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் வளர்கிறது. 14000 குங்குமப் பூ துண்டுகள் 450 கிராம் ஆகும். இதற்காக 50000 - 75000 பூக்கள் அறுவடை செய்யப்படுகிறது. அப்படியானால் ஒரு கிலோ கிராமிற்கு 110,000 - 170,000 பூக்கள் தேவைப்படும். இதன் விலை தோராயமாக 300 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை இருக்கும்.

சாப்பிட வேண்டிய மாதம்

சாப்பிட வேண்டிய மாதம்

இந்த குங்குமப் பூவை நீங்கள் 4 அல்லது 5 ஆம் மாதங்களில் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஏனெனில் இந்த மாதங்களில் தான் குழந்தையின் அசைவை தாயால் உணர முடியும். எனவே குங்குமப் பூவை பாலில் கலந்தோ அல்லது இதர உணவுகளில் சேர்த்தோ பயன்படுத்தி மகிழலாம். என்னங்க! இனி குங்குமப் பூ பால் கொண்டு உங்கள் கர்ப்ப காலத்தை ஆரோக்கியமாக மாற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Saffron During Pregnancy – Uses, Benefits And Side Effects

    Saffron is the dried stigma of Crocus Sativus flower, i.e. the thread like part at the center which contains pollen.
    Story first published: Saturday, June 2, 2018, 14:50 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more