For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சிளம் குழந்தைகள் அதிக நேரம் உறங்குவதற்கான காரணங்கள் என்னென்ன?

பச்சிளம் குழந்தைகளுக்கு அதிகப்படியான கவனமும் அன்பும் தேவை; பச்சிளம் குழந்தைகள் அதிகம் உறங்குவதற்கான காரணங்கள் என்னென்ன என்று இங்கு படிக்கலாம்.

|

குழந்தைகள் தாயின் கருவில் வளரும் பொழுதே அதிக நேரம் உறக்கம் கொள்ளும் பழக்கம் கொண்டு உள்ளபவர்களாக இருப்பார்கள்; அவர்கள் பிறந்த பின்னும் கூட மற்ற செயல்பாடுகளை விட குழந்தைகள் உறங்குவது தான் அதிகமாக இருக்கும். குழந்தைகள் பிறந்த பின் அவர்களுடன் கொஞ்சி விளையாட காத்து இருக்கும் பெற்றோர்கள், பிறந்தவுடன் குழந்தைகள் தூங்கி கொண்டு மட்டுமே இருக்கும் நிலை மற்றும் தூங்க விருப்பம் கொண்டு இருக்கும் நிலை பார்த்து ஏன் உறங்குகின்றனர்? எதற்காக? என்று எண்ணிக் கொள்வது உண்டு.

reasons for babies too much

குழந்தைகள் பிறந்த பின் எதற்காக அதிக நேரம் உறங்குகின்றனர்? என்ன காரணங்கள் என்பன குறித்து இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருவறையில் குழந்தை!

கருவறையில் குழந்தை!

குழந்தைகள் தாயின் வயிற்றில் பத்து மாதங்களும் ஒரு முழுமையான மனித உருவத்தை பெற படிப்படியாக வளர்ச்சி பெறுகின்றனர். அந்த காலகட்டத்தில் குழந்தைகள் அதிக நேர உறக்கமும், மிஞ்சிய மற்ற நேரங்களில் மனிதனுக்கான சாதாரண செயல்பாடுகளான அழுகை, கொட்டாவி, சிரித்தல் போன்றவற்றை புரிகின்றனர்.

உறக்கம் அவசியமா?

உறக்கம் அவசியமா?

ஏன் உறக்கம் மட்டும் அதிக நேரம் என்று பார்த்தால், குழந்தைகள் முழுமையான வளர்ச்சியை சரியாக அடைய உறக்கம் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது குழந்தையின் உடல் சரியான வளர்ச்சியை எட்ட உறக்கம் என்பது அவசியத்தேவை என்று கூறப்படுகிறது. வளர்ச்சியை கருவறையில் எட்டிய பின்னும் ஏன் பிறந்ததன் பின்னும் உறங்குகின்றனர் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் ஒரு சந்தேகமாக உள்ளது; அந்த சந்தேகத்திற்கு சரியான விடையை அடுத்தடுத்த பத்திகளில் பார்த்து படித்து அறியலாம்.

உடல் உறுப்புகள்!

உடல் உறுப்புகள்!

குழந்தை கருவில் இருந்த பொழுது அனைத்து உடல் உறுப்புகளும் உருவாகி மட்டுமே இருந்தன; அந்த உறுப்புகள் இயங்க தேவையான சத்துக்கள் அந்த உறுப்புகளில் இருந்ததா என்றால் அதன் விடை ஒரு கேள்விக்குறியே! குழந்தைகளின் உருவான உடல் உறுப்புகள் இயக்கத்திற்கான சக்தியை பெற சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அவசியம்; இந்த உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் உடலில் ஒட்டி அவர்களை பலப்படுத்தும் செயல் முறை நிகழ உறக்கம் கண்டிப்பாக அவசியம் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

மூளை வளர்ச்சி!

மூளை வளர்ச்சி!

குழந்தைகளின் வெளிப்புற உடல் உறுப்புகளை போலவே, உட்புற உறுப்புகள் மற்றும் மூளை நரம்புகள், செல்கள் மற்றும் அவ்வுறுப்புகளின் இயக்கம் போன்றவை சீராக செயல்பட சரியான வளர்ச்சி அவசியம். மூளை போன்ற உள்ளுறுப்புகளுக்கு சக்தியை வழங்க, குழந்தைக்கு உணவு வாயிலாக அளிக்கப்படும் சத்துக்கள் அவசியம். என்ன தான் உணவு அவசியமாக இருந்தாலும், உடல் ஓய்வு நிலையில் இருந்தால் மட்டுமே உடல் உறுப்புகள் மற்றும் உள்ளுறுப்புகளால், சீரான வளர்ச்சியை பெற முடியும்.

நரம்பு மண்டல வளர்ச்சி!

நரம்பு மண்டல வளர்ச்சி!

குழந்தைகளின் உடல் உறுப்புகள் சீராக செயல்பட தகவல்களை கடத்தி அடித்தளமாக அமைவது நரம்பு மண்டலம் தான். குழந்தைகளின் நரம்பு மண்டலம் சிறப்பான வளர்ச்சியை பெற குழந்தைகள் போதுமான அளவு உறங்க வேண்டும். குழந்தைகளின் உடலும் மனமும் கொள்ளும் போதுமான அளவு, தேவையான அளவு உறக்கம் மட்டுமே அவர்களின் உடலின் நரம்பு மண்டலத்தை முழுமையான வளர்ச்சி பெற உதவும்.

கற்றுக் கொள்கின்றனர்!

கற்றுக் கொள்கின்றனர்!

குழந்தைகள் சாதாரணமாக உறங்கி கொண்டு மட்டும் இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம் பெற்றோரே! நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும், நீங்கள் கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு பாடத்தையும் நிலைத்த மனதின் ஒருமுகத்தன்மையோடு கேட்டுக் கற்று கொண்டு இருக்கின்றனர். குழந்தைகள் தங்கள் நித்திரை காலம் முடிந்த பின் நீங்கள் சொல்லாமலே பல விஷயங்களை தானாக முன்வந்து செய்ய இது தான் காரணம்!

இந்த விஷயங்களை நீங்கள் அறிய வேண்டுமானால், குழந்தைகளை நன்கு கவனித்தல் வேண்டும்; எப்பொழுதும் உங்கள் பார்வை குழந்தையின் மீது இருந்து அகலாமல் இருக்க வேண்டும்.

கவனச்சிதறல் இருக்கக் கூடாது!

கவனச்சிதறல் இருக்கக் கூடாது!

குழந்தைகள் உறங்கும் இடம் மிகவும் அமைதியானதாக, கவனச் சிதறலை ஏற்படுத்தாததாக இருக்க வேண்டியது அவசியம். ஏன் சத்தம் இருக்கக் கூடாது எனில், குழந்தைகள் விரைவில் பயம் கொள்ள அதிக வாய்ப்புகள் உண்டு; இந்த பய உணர்வு அவர்களின் வளர்ச்சியினை பாதிக்க வாய்ப்பு உண்டு; மேலும் குழந்தைகளின் கற்றுக் கொள்ளும் நிலையில் இந்த சத்த நிகழ்வுகளால் இடையூறு நேர்ந்து குழந்தை குழம்பி விடலாம்.!

எனவே, குழந்தைகள் உறங்கும் பொழுது அமைதியான, எந்த வித ஒளி, இரைச்சல் என்ற எவ்வித தொல்லையும் இல்லாத சூழலை அமைத்துக் கொடுக்க முயலுங்கள்!

உறக்கமும் மாதமும்!

உறக்கமும் மாதமும்!

குழந்தைகள் பிறந்தது முதல் மூன்று மாதங்கள் வரை அவர்கள் ஒரு நாளைக்கு 14 முதல் 17 மணி நேரம் வரை உறங்குதல் வேண்டும்; கட்டாயம் குழந்தைகள் இத்தனை மணி நேரம் உறங்குவது அவர்களின் சிறப்பான வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும். பின்னர் குழந்தைகள் 4 முதல் 12 மாதம் வரையிலான கால கட்டத்தை அடையும் பொழுது, அவர்கள் 12 முதல் 16 மணி நேரம் வரையிலான காலம் உறக்கத்தை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்!

குழந்தைகள் 12 முதல் 35 மாத காலகட்ட வளர்ச்சியை அடையும் பொழுது குழந்தைகள் 11 முதல் 14 மணி நேரம் வரையில் கண்டிப்பாக உறங்க வேண்டும். குழந்தைகள் அந்தந்த வயதிற்கு ஏற்ப சரியான அளவு உறக்கத்தை மேற்கொள்ள பெற்றோர்கள் வழிவகை செய்ய வேண்டியது அவசியம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons For Babies Too Much Sleep

Reasons For Babies Too Much Sleep
Desktop Bottom Promotion