For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுடன் விமானத்தில் பயணிக்கும் பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை!

குழந்தை வளர்ப்பு என்னும் விஷயம் அனைத்து பெற்றோரும் முழுதாக அறிந்திருக்க வேண்டிய ஒரு விஷயம்; குழந்தைகளுடன் விமானத்தில் பயணிக்கும் பொழுது பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி இந்த பதிப்பில

|

குழந்தை வளர்ப்பு என்னும் விஷயம் அனைத்து பெற்றோரும் முழுதாக அறிந்திருக்க வேண்டிய ஒரு விஷயம்; குழந்தைகளுடன் விமானத்தில் பயணிக்கும் பொழுது பெற்றோர்கள் தங்களை அறியாமல் செய்த தவறால் குழந்தைகள் உயிர் இழந்து உள்ளனர். சமீபத்தில், ஏன் இன்று கூட இது போன்ற சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்து உள்ளது. அமெரிக்காவில் இருந்து குழந்தையுடன் விமானத்தில் பயணித்த தம்பதியர் கட்டார் வழியாக ஹைதராபாத்தை அடைந்து உள்ளனர்;

Flying With Baby: All You Need To Know

ஹைதராபாத்தில் இறங்கிய பின் குழந்தையின் உடல் நிலை சீராக இல்லை என மருத்துவ பரிசோதனை செய்த போது, மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறி உள்ளனர். எதனால் குழந்தை இறந்தது? என்ன நடந்தது? தவறு யாருடையது போன்ற கேள்விகளுக்கான விடையையும், குழந்தைகளுடன் விமானத்தில் பயணிக்கும் பொழுது பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தையுடன் பயணிக்கலாமா?

குழந்தையுடன் பயணிக்கலாமா?

குழந்தைகளுடன் விமானத்தில் நிச்சயமாக பயணிக்கலாம்; அதில் எந்த வித தவறும் இல்லை. அதனால் எந்த ஒரு அபாயமும் நேரப்போவதும் இல்லை. குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை! பெற்றோர்கள், குழந்தைகளுடன் விமானத்தில் பயணிக்கும் பொழுது என்ன நடக்க வாய்ப்பு உள்ளது, பயணத்தின் பொழுது என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி அறிந்து செயல்பட வேண்டும்.

விழிப்புணர்வு இல்லை..

விழிப்புணர்வு இல்லை..

இந்த ஹைதராபாத் சம்பவம் மட்டும் அல்ல, இதற்கு முன்னும் கூட ஒரு தம்பதியர் தங்களின் குழந்தையை விமான பயணத்தின் பின் இழந்து உள்ளனர். இது போன்ற சம்பவம் முன்னாலும் நடந்து உள்ளது; இப்போதும் நடந்து வருகிறது. இதை பற்றிய விழிப்புணர்வு பெற்றோருக்கு இல்லாததனால் தான் இந்த குழந்தைகள் பரிதாபமாக தங்கள் உயிரை இழந்து உள்ளனர்.

எதனால் இறப்பு நேர்கிறது?

எதனால் இறப்பு நேர்கிறது?

குழந்தைகளுக்கு விமான பயணத்தின் பொழுது தாய்மார்கள் பாலூட்டும் பொழுது, அல்லது உணவு ஊட்டும் பொழுது சரியான முறையை கடைபிடிக்காததால் தான் பெரும்பாலுமான நேரங்களில் இந்த மாதிரியான குழந்தைகளின் உயிர் இழப்பு ஏற்படுகிறது.

சாதாரண நிலையில் சாப்பாடு அளிப்பதற்கும், அதாவது தரையில் இருந்து சாப்பாடு அளிப்பதற்கும் - ஆகாயத்தில் பறக்கும் பொழுது சாப்பாடு ஊட்டுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. இந்த வித்தியாசத்தை பெற்றோர்கள் அறிய தவறியதால் தான் இந்த குழந்தைகள் உயிர் இழந்து உள்ளனர்.

சரியான முறை எது?

சரியான முறை எது?

விமான பயணத்தில், விமானம் டேக் ஆஃப் நிலையில் இருக்கும் பொழுதோ, லேண்டிங் ஆகும் பொழுதோ, சரியற்ற உயரத்தில் மாறி மாறி பறந்து செல்லும் பொழுதோ குழந்தைக்கு உணவு ஊட்ட கூடாது; மீறி ஊட்டினால், குழந்தையின் உடலில் உணவை ஏற்றுக் கொள்வதில், செரிப்பதில் என பல பிரச்சனைகள் ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்.

மேலும் படிக்க: ஆண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

படுக்க வைப்பதால்..

படுக்க வைப்பதால்..

குழந்தைக்கு உணவு அழுத்த பின், உடனே உங்கள் மேல் அல்லது சீட்டில் குழந்தைகள் படுத்து கொள்வதால் அல்லது குழந்தையை நீங்கள் படுக்க வைப்பதால் குழந்தையின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஏற்கனவே உணவு ஊட்டியதால் ஏற்பட்ட ஆபத்து மேலும் தீவிரமடைகிறது. இது போன்று தரையில் இருக்கும் பொழுது குழந்தையை சாப்பிட்ட பின் உடனடியாக படுக்க வைத்தால் கூட குழந்தையின் உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும்.

முன்னோர் வாக்கு!

முன்னோர் வாக்கு!

இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிந்து தான் நம் முன்னோர்கள் குழந்தைக்கு உணவு ஊட்டிய பின் அது ஏப்பம் விடும் வரையில் நிமிர்த்தி வைத்து இருந்து, குழந்தை ஏப்பம் விட்ட பின் தான் அதனை படுக்க வைக்க வேண்டும் என்று அன்றே கூறி சென்றுள்ளனர்; இதையே தான் இன்று ஆய்வாளர்களும் குழந்தைகளை பரிசோதித்து விட்டு கூறியுள்ளனர்.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் ஏனோ தானோ என்று எதையும் சரியாக செய்யாமல் இருந்தால், செய்ய தவறினால் இது போன்ற இழப்புகள் நேரிடலாம்.

SIDS - காரணம்!

SIDS - காரணம்!

SIDS என்னும் திடீர் குழந்தை இறப்பு என்னும் பிரச்சனைக்கு கூட இந்த உணவு ஊட்டிய பின் நடக்கும் நிகழ்வுகள் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சந்தேகின்றனர். குழந்தைகளை சாப்பிட்ட பின் உடனடியாக படுக்க வைப்பது நுரையீரல் மற்றும் இருதயத்தில் அழுத்தத்தை குடுக்க காரணம் ஆகும்.

இதனால் குழந்தையின் இருதயம் மற்றும் நுரையீரல் அழுத்தத்தை சந்திக்கிறது. இந்த விளைவுகளால் குழந்தையின் உடல் நிலை மேலும் தீவிரமடையலாம். குழந்தை தாயின் மார்பில் பால் குடித்தாலும் கவனமாக இருக்க வேண்டும்; பாட்டிலில் பால் அளித்தால் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

என்ன செய்வது?

என்ன செய்வது?

குழந்தைகளின் தேவையற்ற உயிர் இழப்புகளை தவிர்க்க, பெற்றோர் தங்கள் தவறை திருத்தி கொள்ள விமான பயணத்தில் சில விதிகளை கடைபிடிக்க வேண்டும். பயணம் குறுகிய நேரம் கொண்டதாக இருந்தால், கிளம்பும் முன் அல்லது பயணம் முடிந்த பின் குழந்தைக்கு உணவு அளிக்கும் வகையில் ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும்; நெடிய பயணமாக இருந்தால் விமானம் ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்து, அந்த உயரத்திலேயே கொஞ்ச நேரம் பயணிக்கும் என்று உறுதி செய்து கொண்ட பின் குழந்தைக்கு உணவு ஊட்டலாம்

இவ்வாறு ஊட்டிய பிறகும் ஊட்டிய உணவு குழந்தையின் வயிற்றை அடைந்து செரிமானம் ஆகும் வரை குழந்தையை உயர்த்தி பிடித்து, குழந்தை ஏப்பம் விட்டதும் அதனை உட்காரவோ படுக்கவோ வையுங்கள்!

மேலும் படிக்க: "நான் அலுவலகத்தில் இருக்கும் பொழுதே என் பனிக்குடம் உடைந்து விட்டது" - போராட்ட பிரசவம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Flying With Baby: All You Need To Know

Flying With Baby: All You Need To Know
Story first published: Tuesday, October 9, 2018, 16:34 [IST]
Desktop Bottom Promotion