For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் உடல் நலனை பாதுகாக்கும் இந்த பொடி பற்றி நீங்கள் அறிவீரா?

குழந்தைகள் சளித்தொல்லை, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படும் பொழுது இந்த ஓமப்பொடியை அளித்தால், அது மாயமந்திரம் போட்டது போல், குழந்தையின் நலனை உடனடியாக சரி செய்ய உதவும்.

|

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால், குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் நேரும் போதெல்லாம், நமது பாரம்பரிய பாட்டி வைத்தியத்தை மறந்து, அலோபதி முறையை பின்பற்றி, குழந்தைகளின் உடல் நலத்தை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்.

ajwain-omam health benefits for kids and toddlers in tamil

நமது இந்த பழக்கத்தை நிறுத்தி, நம் பாரம்பரிய பாட்டி மருத்துவ முறைகளை பின்பற்றினால் குழந்தைகள் உடல் மற்றும் மன நலத்துடன் பல்லாண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்வர். அவ்சகையில் குழந்தைகளுக்கு கண்டிப்பாக அளிக்க வேண்டிய ஒரு முக்கிய பாட்டி வைத்தியத்தில் கூறப்பட்ட பொடியை பற்றி தான் நாம் இந்த பதிப்பில் பார்க்கப் போகிறோம். வாருங்கள் அப்படி அத்துணை முக்கியத்துவம் வாய்ந்த பொடி எது என்று இப்பொழுது படித்தறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஜிக் பொடி!

மேஜிக் பொடி!

அஜ்வைன் என்று சொல்லக்கூடிய, Ajwain/Carom seeds/Omam/ thymol seeds/ bishops weed - என பலதரப்பட்ட பெயர்களால் அழைக்கப்படும் ஓமப்பொடி தான் அந்த மேஜிக் பொடி. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் ஏற்படும் இருமல், சளி, மலச்சிக்கல், சளித்தொல்லைகள், செரிமான பிரச்சனை என அனைத்துவித பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது.

முக்கியமாக குழந்தைகள் சளித்தொல்லை, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படும் பொழுது இந்த ஓமப்பொடியை அளித்தால், அது மாயமந்திரம் போட்டது போல், குழந்தையின் நலனை உடனடியாக சரி செய்ய உதவும்.

இந்த பொடியை குழந்தைகளுக்கு எப்படி கொடுப்பது? எந்த விகிதத்தில் அளிப்பது என்பன குறித்து இங்கே காணலாம்.

குழந்தைகளுக்கான அஜ்வைனின் மருத்துவ பயன்கள்:

குழந்தைகளுக்கான அஜ்வைனின் மருத்துவ பயன்கள்:

1. குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி, சளித்தொல்லைகள் போன்றவற்றை உடனடியாக குணப்படுத்தும் மேஜிக் மருந்து அஜ்வைன்; இந்த ஓம விதைகளை குழந்தைகள் நுகர்ந்து வந்தாலே உடல் உபாதைகள் தீரும், இல்லையேல் அஜ்வைன் தண்ணீர் அதாவது ஓம நீர் அளிக்கலாம்.

2. ஆஸ்துமா உள்ள குழந்தைகளை குணப்படுத்த அஜ்வைன் ஒரு சிறந்த மருந்து.

3. சாப்பிட அடம்பிடிக்கும், சாப்பிடவே தோன்றாமல் இருக்கும் குழந்தைகளின் பசிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது.

4.இது குழந்தைகளின் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை, வாயுத்தொல்லையை, அமிலத்தன்மையை குணப்படுத்த உதவுகிறது.

5. குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலுமாக குணப்படுத்த உதவுகிறது.

எத்தனை வயது குழந்தைக்கு கொடுக்கலாம்?

எத்தனை வயது குழந்தைக்கு கொடுக்கலாம்?

8 மாதங்கள் நிரம்பிய குழந்தைக்கு அஜ்வைனை அளிக்கலாம். அஜ்வைனை ஓம நீராக அளிப்பது மிகச்சிறந்தது. குழந்தைகள் சற்று வளர்ந்து எல்லாவித உணவுகளையும் உண்ணத் தொடங்கும் போது, ஓமம் கொண்டு தயாரித்த பரோட்டா, சப்பாத்தி, பூரி என உணவு மூலமாகவும் ஓமத்தை அவர்தம் உணவில் சேர்க்கலாம். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. பொதுவாக வேதித்தன்மை கலக்காத இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் ஓம விதையால் செய்யப்பட்ட பொடியை, ஆர்கானிக் விதையை பயன்படுத்துவது நல்லது.

எவ்வளவு ஓம நீர் கொடுக்கலாம்.?

ஒரு வயது நிரம்பாத குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 2-3 தேக்கரண்டி ஓம நீரை அளித்து வருதல் நல்லது. படிப்படியாக இந்த அளவை அதிகரிக்கலாம். மேலும் இந்த ஓம நீரையோ, விதைகளையோ வாரம் 2-3 முறை அளிப்பது சிறந்தது. ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 1/4 கப் ஓம நீரை அளிக்கலாம். வாரம் ஒன்றிற்கு 3-4 முறை அளிக்கலாம்.

ஓம நீர் தயாரிக்கும் முறை:

ஓம நீர் தயாரிக்கும் முறை:

இந்த நீருக்கு தேவையான பொருட்களை தயாரிக்க 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதை சமைத்து முடிக்க மேலும் 10 நிமிடங்கள் தேவை. ஆக இதைத் தயாரிக்க தேவைப்படும் ஒட்டுமொத்த நேரம் 20 நிமிடங்கள்.

ஓமப்பொடி மற்றும் ஓம நீர் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:

ஓம விதைகள் - 1/2 கப்

ஓமப்பொடி - 1/4 தேக்கரண்டி

நீர் - 1/2 கப்

சர்க்கரை/வெல்லம் - 1/2 தேக்கரண்டி

தயாரிக்கும் முறை:

1. ஓம விதைகளை தேவையான அளவு அளந்து, தூசி மற்றும் மண் ஏதும் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும்.

2. அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் சேர்க்காது இந்த ஓம விதைகளை வாணலியில் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்தெடுக்கவும். இதை தயாரிக்க 3-5 நிமிடங்கள் ஆகலாம்.

3. நன்கு வறுத்த பின், இந்த விதைகளை குளிர வைக்கவும்; சூடு ஆரிய பின், இந்த விதைகளை அரைத்து, பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

4. 1/2 கப் நீரினை சூடுபடுத்தி, கொதிக்கவிட்டு அதில் 1/4 தேக்கரண்டி ஓமப்பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.

5. பின் அதில் தேவையான அளவு வெல்லம் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி, ஆற வைக்கவும்.

இந்த அளவு நீரினை 2 பேர் அருந்தலாம்.

குறிப்புகள்:

குறிப்புகள்:

1. தகுந்த மருத்துவ ஆலோசனைக்கு பின் குழந்தைகளுக்கு இந்த பொடியை அல்லது நீரை அளிக்கவும்.

2. சிறிது சிறிதான அளவில் குழந்தைக்கு கொடுக்கவும்.

3. ஓம நீரை ஓம விதைகள் கொண்டு, அதை பொடி செய்யாது கூட தயாரிக்கலாம்.

4. ஓமப்பொடியை சிறிதாக குழந்தையின் உணவில் கூட சேர்த்து அளிக்கலாம்.

5. வேதிப்பொருட்கள் கலக்காத ஓம விதைகளை பயன்படுத்தவும்.

6. ஒரு வயது நிரம்பாத குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்க்காத ஓம நீரை அளிப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ajwain-omam health benefits for kids and toddlers in tamil

Ajwain water for Babies and Kids, Uses and Benefits
Story first published: Friday, July 20, 2018, 16:53 [IST]
Desktop Bottom Promotion