குழந்தையின் தூக்கத்தைப் பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!

Posted By:
Subscribe to Boldsky

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஓய்வு என்பது தேவை. அவரவர் வயதிற்கு ஏற்றார் போல கட்டாயமாக மூளைக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்.

பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்குவார்கள் என்று அறிந்திருப்போம். அவர்கள் தூக்கத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஒருமணி நேரம் :

ஒருமணி நேரம் :

குழந்தைகள் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரையில் தான் தூங்கும். நேப்பிங் என்று சொல்லப்படுகிற குட்டி தூக்கத்தில் இருப்பதால் தான் தூக்கதிலிருந்து நடுவில் முழிக்கும் போது குழந்தையை தட்டிக் கொடுத்தாலோ அல்லது அரவணைத்தாலோ மீண்டும் தூங்கிவிடுகிறது.

தூக்கத்தில் பாதி நேரம் :

தூக்கத்தில் பாதி நேரம் :

குழந்தைகள் தூங்கும் நேரத்தில் பாதி நேரம் வரை விழிப்புடன் தான் இருப்பார்கள். அவர்களது மூளை செயல்பட்டுக் கொண்டேயிருக்கும். டீப் ஸ்லீப் செல்ல அதிக நேரம் எடுக்கும்.

குழந்தைகள் தூக்கத்தில் சிரிப்பது இதனால் தான். தூக்கத்திலிருந்து குழந்தைகள் முழித்தாலோ அல்லது தூங்கவே அடம்பிடித்தாலோ அந்த சூழ்நிலையை மாற்றிடுங்கள்.

ஆழ்ந்த தூக்கம் :

ஆழ்ந்த தூக்கம் :

குழந்தை தூங்கி குறைந்தது 20 நிமிடங்கள் கழித்து தான் அவர்கள் ஆழ்ந்த தூக்கத்திற்கே செல்வார்கள். அரை மணி நேரத்தில் குழந்தை முழித்துக் கொண்டால் குழந்தை டயர்ட் ஆகவில்லை அதனால் தான் தூங்கவில்லை என்று தவறாக நினைக்க வேண்டாம்.

மாறாக குழந்தை ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லவில்லை என்று புரிந்து கொள்ளுங்கள்.

சரியான நேரம் :

சரியான நேரம் :

பகலில் குழந்தை தொடர்ந்து ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை தூங்குவது ஆரோக்கியமானது. மூன்று மணி நேரம் கழித்து குழந்தை முழித்துக் கொண்டால் மீண்டும் தூங்க வைக்க முயலாதீர்கள். போதுமான ஓய்வு கிடைத்துவிட்ட பிறகு குழந்தை மீண்டும் தூங்காது.

மாதங்கள் :

மாதங்கள் :

மூன்று முதல் ஆறு மாதத்தின் போது தான் குழந்தை முழிப்பு, தூக்கம் என்ற இருவேறுபாடுகளை அறியும். இந்த மாதங்களில் தான் குழந்தைக்கு டீப் ஸ்லீப் துவங்கும்.

இரவுகளில் முழிக்கும் :

இரவுகளில் முழிக்கும் :

பெரும்பாலான குழந்தைகள் இரவானால் முழித்துக் கொள்ளும் என்று சொல்வதுண்டு. இது பயப்படும்படியான பிரச்சனை இல்லை. ஸ்லீப்பிங் டைம் வேறுபடுவதாலும், எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம் என்பதாலும் நேர இடைவேளி சரியாக பின்பற்றப்படுவதில்லை இதனாலேயே குழந்தைகள் இரவுகளில் தூங்காமல் முழித்திருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Infant Sleep Facts Every Parents Should Know

Infant Sleep Facts Every Parents Should Know
Story first published: Wednesday, August 30, 2017, 18:08 [IST]
Subscribe Newsletter