For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சில டிப்ஸ்...

By Ashok CR
|

உங்கள் வீட்டிற்கு ஒரு மழலை செல்வம் வருகிறது என்றால், உங்கள் வீடே முழுமையான மாற்றத்தை பெறும். குழந்தைகளும், சிறு பிள்ளைகளும் இயற்கையாகவே ஆர்வத்துடனும், துறுதுறுவெனவும் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு தங்கள் வீட்டிலும் வீட்டிற்கு வெளியேவும் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்பதை பெற்றோர்கள் சரிப்பார்க்க வேண்டும்.

ஏதேனும் ஆபத்து வரும் வரை காத்திருக்காமல், வீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இங்கு குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், விபத்துக்களை தவிர்ப்பதற்காகவும் சில சிறந்த டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Tips To Ensure That Your Baby Is Safe

குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கார் இருக்கையை பயன்படுத்துதல்:

குழந்தைகளின் தலைக்கும் முதுகிற்கும் ஆதரவாக இருந்து, அவர்களுக்கு சொகுசை அளிக்க பிரத்யேகமாக கார் இருக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் காரை விட்டு சாலையில் செல்கையில், குழந்தைகள் இந்த கார் இருக்கையில் பாதுகாப்பாக இருப்பார்கள். அப்படி அந்த இருக்கையில் இருக்கும் போது, அவர்களுக்கு அதிகமாக சூடேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அவர்கள் மேல் மூடியிருக்கும் துணிகளை எடுத்து விடுங்கள். காரில் அதன் இருக்கையில் குழந்தைகள் தூங்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பயணிக்கும் போது குழந்தையை உடன் பயணிக்கும் ஒருவர் கண்டிப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

வீட்டை பாதுகாப்பாக வைத்திருத்தல்:

* வீட்டில் பெரும்பாலும் நடைபெறும் விபத்துகள் எல்லாம் குழந்தைகள் கீழே விழுவது தான். குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் போது, ஆபத்துகளை தவிர்க்க, அறையை விட்டு வெளியே செல்லாதவாறு பாதுகாப்பு தடுப்பை போட வேண்டும். காபி மேஜைகள் மற்றும் இதர மேசைகளின் நான்கு மூலையிலும் குஷன் போன்று பொருளால் மூடுங்கள். குழந்தைகள் கீழே விழுவதை தவிர்க்க முடியாது, ஆனால் காயங்களை குறைக்கலாம்.

* நுால் கயிறு இல்லாத திரைச்சீலைகளை தேர்ந்தெடுங்கள். அப்படி இருந்தால், அந்த நூல்கயிற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் முடிந்து விடுங்கள். அதே போல் பெரிய அளவிலான கண்ணாடி கதவுகள் இருந்தால் அவைகள் மீது வண்ணமயமான படங்களை ஒட்டி விடுங்கள். இதனால் அங்கே கதவு உள்ளது என அவர்களுக்கு தெரியும்.

* எலக்ட்ரிகல் சாக்கட்களை அதற்கான மூடியை கொண்டு பெற்றோர்கள் மூடி விட வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த துகள்களில் கையையோ அல்லது எலக்ட்ரிகள் சாதனங்களையோ விட்டு விட்டால் ஆபத்தில் முடியும். இருப்பினும் சாக்கட் மூடிகளை நாடுவதற்கு பதில், எலக்ட்ரிக்கள் சாதனங்களை குழந்தைகளுக்கு அருகில் வைக்காமல் இருப்பதே நல்லது. பேனா, கத்திரிக்கோல், ஸ்டேப்ளர், பேப்பர் கிளிப்ஸ் மற்றும் இதர கூர்மையான பொருட்களை பூட்டிய பெட்டியில் வைக்கவும்.

குழந்தைகளும்... செல்லப்பிராணிகளும்...

குழந்தைகள் என்றால் பல செல்லப்பிராணிகளும் பிடிக்க தான் செய்யும். ஆனாலும் கூட அதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை எண்ணி கவனமாக இருப்பது முக்கியமாகும். குறிப்பாக குழந்தைகள் தவழ மற்றும் நடக்க ஆரம்பிக்கும் நேரத்தில், குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர்கள் முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும்.

குழந்தைகள் இருக்கும் போது எப்போதுமே நாய்களின் மீது கண்காணிப்பு தேவை. செல்லப்பிராணி மீது என்ன தான் நம்பிக்கை இருந்தாலும் கூட, அதன் வாலை உங்கள் குழந்தைகள் நோண்டினாலோ அல்லது கண்களை குத்தினாலோ, அது தன் பொறுமையை இழக்கக்கூடும்.

தடுப்பு ஊசி அலர்ஜிகள்:

சில குழந்தைகளுக்கு உணவினால் ஏற்படும் அலர்ஜிகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அதற்கு காரணம் தடுப்பு ஊசிகளில் உள்ள சில உணவு புரதங்கள். 8% குழந்தைகள் உணவு அலர்ஜிகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் முட்டையால் தான் பல குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு போடப்படும் பல தடுப்பூசிகளில் முட்டை புரதம் அல்லது இதர பொருட்கள் சற்று அடங்கியிருக்கும். அதன் விளைவாக, தடுப்பூசி போட்டதால், உணவு அலர்ஜிகள் ஏற்படும் குழந்தைகளுக்கு அனாபிலாக்ஸிஸ் என்ற கடுமையான அலர்ஜி தாக்கம் ஏற்படலாம்.

Story first published: Saturday, October 11, 2014, 16:44 [IST]
Desktop Bottom Promotion