Latest Updates
-
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா?
Year Ender 2022: இந்த ஆண்டில் அதிகம் வைரலான முகம் சுளிக்க வைக்கும் சில வினோதமான உணவுகள்!
2022 ஆம் ஆண்டில் சில உணவுகள் அதிகம் வைரலாகியுள்ளன. குறிப்பாக அந்த உணவுகள் நாம் நினைத்துப் பார்க்காத சில உணவுகளுடன் சேர்த்து உருவாக்கப்பட்டவை.
2022 ஆம் ஆண்டில் இறுதி மாதத்தில் உள்ளோம். இந்த ஆண்டில் பல விஷயங்கள் நாம் மறக்க முடியாத வகையில் நடந்திருப்பதோடு, அவை மிகவும் வைரலாகியும் இருக்கும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் சில உணவுகள் அதிகம் வைரலாகியுள்ளன. குறிப்பாக அந்த உணவுகள் நாம் நினைத்துப் பார்க்காத சில உணவுகளுடன் சேர்த்து உருவாக்கப்பட்டவை. பலருக்கு இந்த உணவுகளின் பெயரைக் கேட்டாலே முகம் சுளிக்கும் வகையில் இருப்பதோடு, இப்படியும் சாப்பிடலாமா என்று யோசிக்க வைக்கும். கீழே 2022 ஆம் ஆண்டில் அதிகம் வைரலான அந்த வினோதமான உணவுகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பழ டீ
பலருக்கும் காலையில் ஒரு கப் சூடான டீயுடன் நாளைத் தொடங்கினால் தான், அந்நாளே சிறப்பான நாளாக இருக்கும். ஆனால் நீங்கள் குடிக்கும் டீயில் பழங்கள் இருந்தால் எப்படி இருக்கும்? நிச்சயம் பிடிக்காது தானே? ஆனால் குஜராத்தில் உள்ள சூரத்தில் ஒரு வித்தியாசமான பழ டீ விற்கப்படுகிறது.

குலாப் ஜாமூன் பராத்தா
காய்கறிகளால் ஆன பராத்தாவை சாப்பிட பலருக்கு பிடிக்கும். ஆனால் இந்த ஆண்டு சமூக ஊடகங்களில் குலாப் ஜாமூன் பராத்தா வைரலானது. இந்த பராத்தா பரிமாறப்படும் போது சர்க்கரை பாகுவில் நனைத்து கொடுக்கப்படுமாம்.

ஸ்ட்ராபெர்ரி சமோசா
இந்த ஆண்டு வைரலான மற்றொரு வித்தியாசமான உணவு தான் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி சமோசாக்கள். இந்த மாதிரியான சமோசா டெல்லியில் உள்ள ஒரு உணவு விற்பனை நிலையத்தில் விற்கப்படுகிறது. இந்த சமோசாக்கள் ஜாம், ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி நிரப்பட்டு விற்கப்படுகிறதாம்.

மொமோஸ் ஐஸ் க்ரீம் ரோல்
அனைவருக்குமே ஐஸ் க்ரீம் பிடிக்கும். அதேப்போல் மொமோஸும் நிறைய பேர் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு இவ்விரண்டையும் ஒரு ஒரு வித்தியாசமான ரெசிபி உருவாக்கப்பட்டு அதுவும் வைரலானது. இந்த ரெசிபியில் மொமோஸில் ஐஸ் க்ரீம் நிரப்பப்பட்டு ரோல்களாக விற்கப்படுகிறதாம்.

மசாலா தோசை ஐஸ்க்ரீம் ரோல்
ஐஸ்க்ரீம் மற்றும் மசாலா தோசையைக் கொண்டும் ஒரு வினோதமான ரெசிபி உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலானது. முக்கியமாக இந்த மசாலா தோசை ஐஸ்க்ரீம் ரோல் சட்னியுடன் பரிமாறப்பட்டது.
மேலே கொடுக்கப்பட்ட உணவுகள் அனைத்துமே பலரும் விரும்பி சாப்பிடும் உணவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. உங்களுக்கு இவற்றில் எவற்றை சுவைத்து பார்க்க ஆசையாக உள்ளது?



Click it and Unblock the Notifications
