Just In
- 3 hrs ago
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தமாக ஏதேனும் தகராறு ஏற்படலாம்...
- 10 hrs ago
ஆண்களை விட பெண்கள் எப்படி வித்தியாசமாக கள்ள உறவில் ஏமாற்றுகிறார்கள்? ஏன் ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?
- 12 hrs ago
மாம்பழ பூரி
- 15 hrs ago
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
Don't Miss
- Movies
கமல் - உதயநிதியை இணைத்தவர்.. விக்ரம் வெற்றிக்கு காரணமானவர்.. யார் இந்த மகேந்திரன்!
- News
தேர்தல் ஆணையம், சுப்ரீம் கோர்ட்.. ஓபிஎஸ் கோஷ்டியின் பாய்ச்சல்..எதுவும் நடக்காதோ பீதியில் ஈபிஎஸ் அணி!
- Sports
சாவு பயத்தை காண்பித்த அயர்லாந்து.. கடைசி ஓவரில் உம்ரான் மாலிக் அசத்தல்.. இந்தியா த்ரில் வெற்றி
- Finance
வேலை நேரம், விடுமுறையில் என்ன மாற்றம் வரலாம்.. புதிய தொழிலாளர் சட்டம் சொல்வதென்ன?
- Automobiles
பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?
- Technology
100 கோடி இருந்தா மட்டும் 5G ஏலத்திற்கு வாங்க.. இல்லையா நோ-என்ட்ரி! யார் சொன்னது தெரியுமா?
- Travel
இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பிரச்சனை அதிகரிக்கப் போகுது.. உஷாரா இருங்க!
ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுகின்றன. அதில் சுக்கிரன் மகிழ்ச்சி, ஆடம்பரம், வசதி, அமைதி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சி நிறைந்து செழிப்பாக இருப்பார். அதுவே மோசமான நிலையில் இருந்தால், வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்த வகையில் 2022 ஜூன் 18 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் ஜூலை 13 ஆம் தேதி வரை இருப்பார். இந்த காலத்தில் சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

மிதுனம்
சுக்கிர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் என்பதால் இக்காலத்தில் நிதி விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை தவிர்க்கவும். வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் விரும்பிய முடிவுகளைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். இக்காலத்தில் குடும்பத்துடனான ஒற்றுமை மோசமடையக்கூடும். நோய் ஏதேனும் இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு செய்ய விரும்பினால், இக்காலத்தில் மிகவும் கவனமாக செய்யுங்கள். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் உங்கள் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். வேலை செய்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். வேலையை மாற்ற விரும்பினால், அதில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். இக்காலத்தில் அவர்களுக்கு நீங்கள் நிதி உதவி செய்வீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி கலவையானதாக இருக்கும். இக்காலத்தில் பொழுதுபோக்கிற்காக அதிக பணம் செலவிடுவீர்கள். அதே வேளையில் வேலை தேடுபவர்களுக்கு இக்காலம் சவாலானதாக இருக்கும். கடினமாக உழைத்தால் வெற்றி பெறுவீர்கள். பெண்கள் தங்கள் பணியிடத்தில் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் உங்கள் இமேஜ் பாழாகலாம். சிலருக்கு ஆரோக்கியம் தொடர்பான, அதுவும் கை மற்றும் தோள்பட்டையில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

சுக்கிரனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கான பரிகாரங்கள்:
சுக்கிர தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும். மேலும் வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை வழிபடுவதனால் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் மற்றும் பொருள் செல்வம் கிடைக்கும். சுக்கிர தோஷம் நீங்குவதற்கு வைரம் அணியலாம். ஏழு முக ருத்ராட்சம் அணிவதால் சுக்கிரனால் ஏற்படும் தடைகளும் நீங்கும். சுக்கிர தோஷத்திற்கான மற்றொரு பரிகாரம் லட்சுமி தேவியை வழிபட்டு லட்சுமி துதி அல்லது துர்கா சாலிசாவை சொல்ல வேண்டும்.