Just In
- 46 min ago
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- 1 hr ago
பெற்றோர்களே! உங்க குழந்தை காலையில் சீக்கிரம் எழுந்திருக்காம இருக்கா? அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க!
- 1 hr ago
தம்பதிகளே! உங்க உறவில் நம்பிக்கையையும் நெருக்கத்தையும் உருவாக்க நீங்க என்ன பண்ணணும் தெரியுமா?
- 1 hr ago
ஆயுர்வேதத்தின் படி உங்க நகங்களில் அறிகுறிகள் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் ஆபத்தில் இருக்காம்... ஜாக்கிரதை!
Don't Miss
- Finance
இந்தியர்களுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு.. ரஷ்யாவின் புதிய கோல்டன் விசா..!
- News
மீண்டும் வண்டியை ஈரோட்டுக்கு விட்ட ஈபிஎஸ்.. உங்க பூத்ல நிலவரம் என்ன? பொறுப்பாளர்களுடன் மீட்டிங்!
- Sports
ஆஸி.யை வீழ்த்த 2 செய்தால் போதும்.. ரோகித் படைக்கு முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் அறிவுரை
- Movies
தரமான சம்பவத்திற்கு ரெடியான சிம்பு.. பத்து தல படத்தின் முக்கிய அப்பேட்.. மகிழ்ச்சியில் ஃபேன்ஸ்!
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
சுக்கிர பெயர்ச்சியால் டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் உஷாரா இருக்கணும்...
ஜோதிட சாஸ்திரத்தில் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவரது காதல் வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வார். அதுவே சுக்கிரன் மோசமான நிலையில் அல்லது தீய கிரகத்துடன் இணைந்திருந்தால், அது அசுப பலன்களைத் தரும். இத்தகைய சுக்கிரன் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 டிசம்பர் 05 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்கிறார்.
சுக்கிரன் தனுசு ராசிக்கு மாறும் போது, ஏற்கனவே இந்த ராசியில் புதன் பயணித்து வருவார். இதனால் தனுசு ராசியில் புதன் சுக்கிர சேர்க்கை நிகழும். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால், 4 ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், பிரச்சனைகளைக் குறைக்க செய்ய வேண்டிய பரிகாரங்களையும் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் இப்பெயர்ச்சியின் போது 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். வாழ்வின் பல பகுதிகளில் சவால்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அலட்சியமாக இருந்தால் பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகளை தான் சந்திக்க நேரிடும். நிதி விஷயங்களில் எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்க வேண்டாம். எதிரிகளிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள். தவறான பழக்கங்களையும், தொடர்புகளையும் கட்டுப்படுத்துங்கள்.

கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் கடக ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். மன ரீதியான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் ரகசிய எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். எனவே சற்று கவனமாக இருங்கள். நிதி நிலையில் பிரச்சனைளை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதால், உங்கள் பட்ஜெட் பாதிக்கப்படும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டுங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் பல சிக்கல்களை சுக்கிரன் ஏற்படுத்துவார். முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். தேவையற்ற வேலைகளில் உங்கள் நேரத்தை செலவிடுவதைத் தவிர்த்திடுங்கள். இக்காலத்தில் நண்பர்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பின் பலனை இக்காலத்தில் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களால் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள்.

மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். எனவே இந்த பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பரத்திற்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எலும்பு பிரச்சனைகளைக் கொண்டவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரிடும். காரணமின்றி மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு குறையும். வேலை அழுத்தம் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.

சுக்கிரனுக்குரிய பரிகாரங்கள்
* சுக்கிரனின் அருளைப் பெற வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருங்கள்.
* சுக்கிரனின் ஆசியைப் பெற லட்சுமி தேவியை வணங்குங்கள்.
* வெள்ளிக்கிழமைகளில் தானம் செய்வது சுக்கிரனின் அருளைப் பெற உதவும். அதுவும் சுண்டல், தயிர், வெள்ளி, அரிசி மற்றும் மசாலாப் பொருட்களை தானம் செய்வது நல்லது.
* ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களுக்கான மற்றொரு முக்கியமான பரிகாரம் மந்திரங்களை சொல்வது. அதில் சுக்கிரனுக்கு 'ஓம் த்ரம் ட்ரீம் த்ரௌம் ஸஹ சுக்ராய நமஹ்' என்ற சுக்கிர பீஜ மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லுங்கள். தினமும் வெள்ளி ஆபரணங்களையும், வாசனை திரவியங்களையும் அணிந்திருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)