For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா?

நேர்மறையான சூழலில் மக்களின் முன்னேற்றமும், உற்பத்தி திறனும் இருமடங்கு அதிகமாக இருக்கும். நேர்மறையான சூழல் அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கும்.

|

வாழ்க்கையில் எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் நாம் நம்முடைய நேர்மறை எண்ணங்களை மட்டும் விட்டுவிடக்கூடாது. ஏனெனில் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் நேர்மறை எண்ணங்களை கொண்டு கடந்து விடலாம். நமது மனதிற்கு எப்படி நேர்மறை எண்ணங்கள் பாதுகாப்பானதோ அதேபோல நமது வீட்டிற்கு நேர்மறை ஆற்றல்கள் பாதுகாப்பானதாகும்.

Vastu tips to bring positive energy at home

நேர்மறையான சூழலில் மக்களின் முன்னேற்றமும், உற்பத்தி திறனும் இருமடங்கு அதிகமாக இருக்கும். நேர்மறையான சூழல் அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கும். இந்த நேர்மறை ஆற்றலை உங்கள் வீட்டில் செய்யும் சில மாற்றங்களின் மூலம் அதிகரிக்கலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் வீட்டில் இருக்கும் நேர்மறை சக்திகளை அதிகரிக்கும் எளிய வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெரிசலை குறைக்கவும்

நெரிசலை குறைக்கவும்

வீட்டிலிருந்து தேவையற்ற பொருட்களை அகற்றுவது மிகவும் அவசியமாகும். பழைய செய்தித்தாள்கள், உடைந்த மற்றும் ஓடாத கடிகாரங்கள், எழுதாத பேனாக்கள், அட்டைப்பெட்டிகள், தேவையற்ற ஆவணங்கள் போன்றவற்றை உடனுக்குடன் வீட்டில் இருந்து அகற்றி விட வேண்டும். தேவையற்ற பொருட்கள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். பயன்பாட்டில் இல்லாத பொருட்களை உடனடியாக அகற்றுவது உங்கள் இல்லத்தின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

தூங்கும் திசைகள்

தூங்கும் திசைகள்

தனக்கு பிடித்த திசையில், நிலையில் தூங்குவது அவர்களுக்கு இருக்கும் தூக்கப் பிரச்சினைகளை சரி செய்ய உதவும். இது நேர்மறை ஆற்றலை உறிஞ்சுவதற்கும், எதிர்மறை ஆற்றலை நிராகரிப்பதற்கும் உதவுகிறது. இதன்மூலம் நீங்கள் நிம்மதியான தூக்கத்தை உணருவீர்கள்.

MOST READ: உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...!

சூரிய ஒளி

சூரிய ஒளி

வாஸ்து சாஸ்திரத்தில் சூரிய ஒளி மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. வாஸ்துவின் படி கட்டிடம் கட்டும்போது அதில் சூரிய ஒளி படும்திசை முக்கியமான ஒன்றாகும். சூரிய ஒளி படும் இடம், சூரியன் உதிக்கும் நேரம், மறையும் நேரம் என அனைத்தையும் வாஸ்து ஆய்வுக்கு உட்படுத்துகிறது. உங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க சூரிய ஒளி அதிகம் உள்ளே வர வேண்டியது அவசியமாகும். இது உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டும்.

படுக்கையறை கண்ணாடி

படுக்கையறை கண்ணாடி

ஓய்வெடுக்கவும் நமது மனஅழுத்தத்தை போக்கும் இடமாகவும் படுக்கையறை உள்ளது. வாஸ்து படி, ஒரு படுக்கை அறைகளில் முக்கியமாக ஒரு படுக்கையின் முன்புறத்தில் கண்ணாடி இருக்கக்கூடாது. அதேசமயம் கண்ணாடி படுக்கையறைக்கு பக்கவாட்டிலும் இருக்கக்கூடாது. இவ்வாறு வைக்கும்போது அது உங்கள் குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்படலாம். முடிந்தவரை உங்கள் படுக்கையறையில் கண்ணாடி வைப்பதை தவிர்க்கவும்.

MOST READ: இந்த ராசிக்காரர்களின் இரத்தத்தில் நேர்மை என்பதே இருக்காதாம்... ஜாக்கிரதையாக இருங்கள்...!

நேர்மறை எண்ணங்கள்

நேர்மறை எண்ணங்கள்

நேர்மறை எண்ணங்கள் என்பது காட்டுத்தீ போன்றதாகும். ஏனெனில் இது மிகவும் பரவக்கூடியதாகும். நேர்மறை உங்களைச் சுற்றி அமைதியான சூழலை உருவாக்கும். நேர்மறை ஆற்றலில் அதிக கவனம் செலுத்த உங்கள் மனதைப் பயிற்றுவிய்யுங்கள். எவ்வளவு பெரிய பிரச்சினை இருந்தாலும், நேர்மறை எண்ணங்கள் எப்போதும் ஒரு நல்ல தீர்வைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: vastu tips வாஸ்து
English summary

Vastu Tips to Bring Positive Energy at Home

Here are the simple vastu tips to bring positive energy at home.
Story first published: Tuesday, September 17, 2019, 17:55 [IST]
Desktop Bottom Promotion