Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், நமக்கு மோட்சம் கிட்டுவதோடு, வைகுண்டத்திலேயே இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Vaikunta Ekadasi 2023: ஏகாதசி விரதம் இருந்து கண் விழித்து, பெருமாளை தரிசித்தால், நம்முடைய சகல பாவங்களும், தோஷங்களும் நீங்குவதோடு, நிலையான செல்வ வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், நமக்கு மோட்சம் கிட்டுவதோடு, வைகுண்டத்திலேயே இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சுக்குக்கு மிஞ்சுன மருந்துமில்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சுன கடவுளுமில்லை என்பது போல், விரதத்திலேயே சிறந்த விரதமாக கடைபிடிக்கப்படுவது ஏகாதசி விரதமாகும். இந்த ஏகாதசி விரதம் என்பது மஹாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமான விரதமாகும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு பின் 11ஆவது நாள் வருவது ஏகாதசி. ஒவ்வொரு மாதமும் 2 ஏகாதசி என்று கணக்கிட்டால் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசி திதிகள் வரும். அதில், மார்கழி மாதம், வளர்பிறையில் 11ஆம் நாள் வருவதைத் தான் இந்துக்கள் அனைவரும் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடிவருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசி விழா
வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக பகல் பத்தின் முதல் நாள் 2023 ஜனவரி 01ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 01 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக பகல் பத்தின் முதல் நாள் 2023 ஜனவரி 01ம் தேதி தொடங்குகிறது.

மார்கழி மாதம்
மனிதர்களாகிய நமக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு 1 நாள் என்பது கணக்கு என வேதங்கள் சொல்கின்றன. அந்த கணக்கின்படி, மார்கழி மாதம், தேவர்களுக்கு விடியற்காலை நேரமாகும். மஹாவிஷ்ணுவும் இந்த மாதத்தில் தான் யோக நித்திரையில் இருந்து கண் விழிக்கும் மாதம். இதனால் தான் மார்கழி மாதம் சிறப்பு பெற்று விளங்குகிறது. கிருஷ்ணபரமாத்மாவும் மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் குறிப்பிட்டுள்ளார்.

கீதா ஜெயந்தி
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில், மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை வைகுண்ட ஏகாதசி திருநாளாக கொண்டாடி வருகிறோம். மஹாபாரதப் போர் நடைபெற்ற நாட்களில், மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி நாளில் தான் கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசம் செய்தார். அதனாலேயே வடமாநிலங்களில் ஏகாதசியை கீதா ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.

ஏகாதசி விரதம்
இந்த நாளில் இந்துக்கள் அனைவரும் விரதமிருந்து உண்ணாமல், உறங்காமல் அந்த பரந்தாமனையே நினைத்து, அவரின் புகழினைப் பாடி, அவரின் பராக்கிரம கதைகளை படித்து வரவேண்டும். மஹாவிஷ்ணு குறித்த ஆன்மீக சொற்பொழிவையும், பஜனை பாடல்களையும் பாட வேண்டும்.

தோஷங்கள் நீங்கும்
ஏகாதசி விரதம் இருக்கும் போது விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். காரணம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதால், மஹாவிஷ்ணுவை அதி தேவதையாக கொண்ட புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்களும், சனி பகவானால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி, நிலையான செல்வமும், நற்பலன்களும் கிடைக்கும். மேலும், திதி சூன்யம், பித்ரு தோஷம் ஆகியவையும் நீங்கும்.

மோட்சம் கிடைக்கும்
அதிகாலையில், குளிர்ந்த நீரில் குளித்து முடித்து அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று. பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும் போது, நாமும் அதன் வழியாக சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும். அப்படி செய்தால் நமக்கு மோட்சம் கிடைப்பதோடு, நிச்சயம் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பகல்பத்து ராப்பத்து விழா என 20 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கம் போல திருமலை திருப்பதியிலும் இந்த விழா நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர். அன்றைய தினம் ரங்கநாதரையும் ஏழுமலையானையும் தரிசிப்பது சிறப்பு.



Click it and Unblock the Notifications
