For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருச்செந்தூர் முருகனுக்கு சுக்கு வெந்நீர் நிவேதனம் ஏன் தெரியுமா?

|

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை. சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பார்கள். எனவேதான் இரவு பகலாக கடல் காற்று வீற்றும் திருச்செந்தூரில் மூலவராக அருள்பாலிக்கும் சுப்ரமணியருக்கு இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூரில் மிகவும் பிரபலமானது சுக்கு கருப்பட்டி தான். திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதை வாங்காமல் செல்வதில்லை மணமும் சுவையும் கொண்டது சுக்கு கருப்பட்டி. மருத்துவ குணம் கொண்டது.

வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவரும் குடித்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதில்லை. விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை குடித்து வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும். சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.

சிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி எனப்படும் பனைவெல்லம் ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம். சுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே தாக்குவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரமில்லாத நிவேதனம்

காரமில்லாத நிவேதனம்

திருச்செந்தூர் ஆலயத்தில் மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.

சுக்கு வெந்நீர் நிவேதனம்

சுக்கு வெந்நீர் நிவேதனம்

உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள். இத்திருக்கோவிலுக்கு வருபவர்கள் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் சுத்தான்னம் எனப்படும் வெறும் வெள்ளைச் சோற்றுக் கட்டிகளை தானமாக வழங்குவர். இக்கட்டிகள் பிரசாதமாக கோவில் பிரகாரங்களில் கிடைக்கும். இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.

சுக்கு கருப்பட்டி

சுக்கு கருப்பட்டி

இதன்காரணமாகவே கோவில் கடைகளில் சுக்கு கருப்பட்டியை விற்பனை செய்கின்றனர். திருச்செந்தூரில் மிகவும் பிரபலமானது சுக்கு கருப்பட்டி தான். திருச்செந்தூருக்கு சுப்ரமணியரையும் சண்முகரையும் தரிசிக்க வரும் பக்தர்கள், இங்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் கருப்பட்டி, சுக்கு கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி, புட்டுக்கருப்பட்டி ஆகியவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதனாலேயே திருச்செந்தூர் வெல்லத்துக்கு பெயர் பெற்று விளங்குகிறது.

ஆரோக்கியம் தரும் சுக்கு கருப்பட்டி

ஆரோக்கியம் தரும் சுக்கு கருப்பட்டி

மணமும் சுவையும் கொண்டது சுக்கு கருப்பட்டி. சில்லுக்கருப்பட்டி. இந்த கருப்பட்டி வகைகள் அனைத்தும் நீண்ட நாள்களுக்கு கெட்டுப்போகாமல் இருப்பதுடன் ருசியாகவும் இருக்கும். பலகாரங்கள், தேநீர் தயாரிப்பவர்கள் இந்த சுக்கு கருப்பட்டியை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உளுந்த களி செய்பவர்கள் இந்த சுக்குக்கருப்பட்டியை பயன்படுத்துவார்கள்.

மருத்துவ குணம்

மருத்துவ குணம்

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்... இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கருப்பட்டியில் சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. காபிக்கு கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். சூரசம்ஹாரம் பார்க்க திருச்செந்தூர் போறவங்க மறக்காம சுக்கு கருப்பட்டி வாங்கிட்டு வாங்க,

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tiruchendur Soorasamharam: Sukku with hot water Tiruchendur murugan

Soorasamharam 2020 is on November 20 friday On the day of Soorasamharam, in the Tiruchendur Murugan Temple, the divine act of victory of Lord Murugan. Murugan temple is located in Tiruchendur near Thoothukudi district, It is also famous for karupatti mittai and chillu karupatti.