For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாந்திமுகூர்த்தம் நடக்கும் முன் மரணமடைந்த கணவன்... மனைவிக்காக எமனை முறைத்த சிவன்...

இன்றைய காலகட்டம் போல் இல்லாமல், திருமணம் முடிந்த 4ஆவது நாளில் சாந்தி முகூர்த்தம் நடத்துவது சம்பிரதாயம். திரேதாயுகாவும் அந்நாளுக்காக காத்திருந்தாள்.துரதிருஷ்டவசமாக திருமணமான 3ஆவது நாளிலேயே மரணித்தான்.

|

அன்னை பார்வதியின் பக்தையான திரேதாயுகாவின் கணவர் உயிரைப் பறித்த எமனை சிவபெருமான் ஒரு பார்வை பார்த்தார். அதனால் பயந்துகொண்டு எமன் திரேதாயுகாவின் கணவருக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அதன் பின்னர் அன்னை பார்வதியும் சிவபெருமானும் இணைந்து திரேதாயுகாவுக்கும் அவள் கணவருக்கும் தரிசனம் கொடுத்தனர். அந்த நாளே திருவாதிரை நாளாக கொண்டாடப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதத்தில் சைவ சமயத்தினர் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகை இந்த பண்டிகை பற்றி பல்வேறு புராண கதைகள் இருந்தாலும் இந்த புராண கதையை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

Thiruvathirai Special: Margazhi Arudra Darisanam Purana Story

நாம் அன்றாடம் கோவிலுக்கு சென்று இறைவன் முன்பு நின்று சாமி தரிசனம் செய்யும்போது, அவரிடம் எந்தவிதமான வேண்டுதலையும் வைக்காமல், அவரின் அன்பு ஒன்றே போதும் நினைத்தாலே, அவர் நம்மிடம் ஓடோடி வருவார் என்பது நிச்சயம். சாதாரண மனிதர்கள் எப்படி உண்மையான அன்புக்கு கட்டுப்படுவார்களோ, அது போலவே தெய்வங்களும் உண்மையான அன்புக்கும் தூய்மையான பக்திக்கும் கட்டுப்பட்டு தரிசனம் தருவதுண்டு.

MOST READ: சனிபகவான் இந்த ராசிக்காரங்களுக்கு தான் அதிக பண பிரச்சனையை தருவாராம்...

தன் காலடியே கதி என்று சரணடைந்த மார்கண்டேயரின் தூய்மையான பக்திக்கு கட்டுப்பட்டு, சிவபெருமான் ஓடோடி வந்து அவரைக் காப்பாற்றி எமனை காலால் எட்டி உதைத்தார். அதே சிவபெருமான் தான், உண்மையான நட்புக்கு கட்டுப்பட்டு சைவ சமயக்குறவர்களில் ஒருவரான சுந்தரரின் காதலுக்கு தூதும் சென்றார். திருவாசகம் அருளிய மாணிக்கவாசகப் பெருமானுக்காக மதுரையில் பிட்டுக்கு மண்ணும் சுமந்து அதற்காக சிலம்படியும் பட்டார். அவருடைய திருவாசகத்தை தானே தன் கைப்பட ஏட்டில் எழுதி கையொப்பமும் இட்டுக்கொடுத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புராண கதை

புராண கதை

அன்னை பார்வதியின் உண்மையான பக்தை ஒருவருக்காக எமனை தண்டித்தார் சிவபெருமான். இது நிகழ்ந்தது ஒரு மார்கழி மாதம் திருவாதிரை திருநாளில் என்கிறது புராண கதை. அதை இந்த ஆருத்ரா தரிசன நாளில் படிப்பது ரொம்ப புண்ணியம். முன்பு ஒரு காலத்தில் அன்னை பார்வதியின் மீது சிறு வயது முதலே உண்மையான பக்தி செலுத்தி வந்தாள் திரேதாயுகா என்ற பெண். திருமண வயது வந்த உடனே பெற்றொரும் உற்றாரும் சேர்ந்து திரேதாயுகாவுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

மரணமடைந்த கணவன்

மரணமடைந்த கணவன்

இன்றைய காலகட்டம் போல் இல்லாமல், திருமணம் முடிந்த 4ஆவது நாளில் தான் சாந்தி முகூர்த்தம் நடத்துவது சம்பிரதாயம். திரேதாயுகாவும் அந்த நாளுக்காக காத்திருந்தாள். ஆனால் துரதிருஷ்டவசமாக திருமணமான 3ஆவது நாளிலேயே அவளின் கணவன் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டான். இதனால், அலறித் துடித்த திரேதாயுகா, தான் வணங்கும் அன்னை பார்வதியின் திருவடியை சரணடைந்தாள்.

சிவ பக்தி

சிவ பக்தி

சிறுவயது முதலே உன்னை நினைத்து உன் மீது பக்தி செலுத்தும் உன்னுடைய பக்தையான என்னை தாங்கள் இப்படி சோதிப்பது எந்த விதத்தில் நியாயம், இத்தனை ஆண்டு காலம் உன் மீது பக்தி செலுத்தியதற்காக, தாங்கள் எனக்கு அளிக்கும் பரிசு இது தானா தாயே! என்று கூறி கதறி கண்ணீர் விட்டாள் திரேதாயுகா. தன்னுடைய உண்மையான பக்தையின் அவலக் குரல் கைலாயத்தில் இருந்த அன்னை பார்வதியின் காதுகளுக்கு எட்டியது.

மனைவிக்கு கட்டுப்பட்ட சிவன்

மனைவிக்கு கட்டுப்பட்ட சிவன்

அப்போது அன்னை பார்வதி தேவி எம்பெருமான் ஈசனுடன் அமர்ந்திருந்தார். தன் பக்தையின் கதறலைக் கேட்டு துடித்த அவர், திரேதாயுகாவின் கணவருக்கு உயிர் பிச்சை அளிக்க சபதம் மேற்கொண்டார். அன்னை பார்வதியின் சபதத்தை கேட்ட சிவபெருமான், அதிர்ந்து போனவராக உடனடியாக எமலோகத்தை எரித்துவிடுவது போல் பார்த்தார்.

எமனை முறைத்த சிவன்

எமனை முறைத்த சிவன்

சிவபெருமானின் எறிக்கும் பார்வையை கண்டு பதறித் துடித்த எமன், அந்த நொடியிலேயே திரேதாயுகாவின் கணவருக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அதோடு, அன்னை பார்வதி தேவியும், சிவபெருமானுடன் இணைந்து திரேதாயுகாவுக்கும் அவள் கணவருக்கும் காட்சி கொடுத்து ஆசியளித்தனர்.

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம்

சிவபெருமானும், அன்னை பார்வதியும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவருக்கும் காட்சி கொடுத்த நாள் மார்கழி மாத வளர்பிறையில் வரும் சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நன்னாள் ஆகும். அந்த நாளையே இந்துக்கள் அனைவரும் திருவாதிரை தினமாகவும், ஆருத்ரா தரிசன நாளாகவும் கொண்டாடுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Thiruvathirai Special: Margazhi Arudra Darisanam Purana Story

Yama Dharma, a devotee of Lord Mother Parvathi, who had taken the life of the husband of Threthayuga, suddenly Lord Siva looked an angry gaze. Fearful, Yama Dharma resurrected Threthayuga's husband. Thereafter, Lord Mother Parvathi and Lord Siva accompanied the darshan to Threthayuga and her husband. That day is celebrated as Thiruvathirai Day.
Story first published: Wednesday, January 8, 2020, 13:24 [IST]
Desktop Bottom Promotion