For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையும், அதன் பின்விளைவுகளும்...ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு

இந்தியா இப்போது உலகின் மிகவும் முக்கியமான அணுசக்தி நாடாக வளர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை என்பது சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்கு பின் பல்வேறு சவால்களுக்கு பிறகே செய்யப்பட்டது.

|

இந்தியா இப்போது உலகின் மிகவும் முக்கியமான அணுசக்தி நாடாக வளர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை என்பது சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்கு பின் பல்வேறு சவால்களுக்கு பிறகே செய்யப்பட்டது. 1974 ஆம் ஆண்டு இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை ராஜஸ்தானின் பொக்ரானில் வெற்றிகரமாக நடத்தி இந்திய வரலாற்றில் முக்கிய மைல்கல்லை எட்டியது.

Things Need to Know About Indias First Nuclear Test at Pokhran in Tami

இரண்டாம் உலகப் போரிலேயே அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்தியா தன்னுடைய முதல் அணுகுண்டு சோதனையை செய்யவே கால் நூற்றாண்டுக்கு மேல் தேவைப்பட்டது. ஏனெனில் அந்த சாதனையை நிகழ்த்த இந்தியா பல தடைகளை தாண்ட வேண்டியிருந்தது. இந்த பதிவில் இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிரிக்கும் புத்தர்(Smiling Buddha)

சிரிக்கும் புத்தர்(Smiling Buddha)

இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை திட்டத்திற்கு Smiling Buddha என்று பெயரிடப்பட்டது. Smiling Buddha மூலம் அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு அணுகுண்டை வெற்றிகரமாகச் சோதித்த உலகின் ஆறாவது அணு சக்தி நாடாக இந்தியா ஆனது.

யார் தலைமையில் நடத்தப்பட்டது?

யார் தலைமையில் நடத்தப்பட்டது?

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) அப்போதைய இயக்குநர் ராஜா ராமண்ணாவின் மேற்பார்வையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனை நடத்தப்பட்டது. 1974 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி இந்தியாவும் புத்த பூர்ணிமாவைக் கொண்டாடியது, இதன் காரணமாக அதன் முதல் அணுகுண்டு சோதனைக்கு சிரிக்கும் புத்தர் என்று பெயரிடப்பட்டது. ராஜா ராமண்ணா, பி.கே. ஐயங்கார், ராஜகோபால சிதம்பரம் மற்றும் பலர் தலைமையிலான 75 விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழு 1967 முதல் 1974 வரை வேலை செய்தது.

எங்கு நடத்தப்பட்டது?

எங்கு நடத்தப்பட்டது?

இந்த திட்டத்தின் கீழ் ராஜஸ்தானின் ஜெய்சாலமீரில் உள்ள பொக்ரான் என்னுமிடத்தில் தெர்மோநியூக்ளியர் சாதனம் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் சுமார் 8-12 கிலோடன்கள் TNT வெடிமருந்து பயன்படுத்தப் பட்டதாக செய்திகள் கூறுகிறது.

MOST READ: இந்த சர்வாதிகாரியின் பிணத்தை கூட மக்கள் கல்லால் அடித்தார்களாம்...இவரால்தான் ஹிட்லர் தற்கொலை செஞ்சுக்கிட்டாராம்

சர்வதேச கவனம்

சர்வதேச கவனம்

இந்த அணுகுண்டு சோதனை மூலம் இந்தியா உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த வெற்றிகரமான சாதனை இந்தியாவின் மணிமகுடத்தில் வைரமாக மாறியது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களான சீனா, ரஷ்ய கூட்டமைப்பு, பிரான்ஸ், யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காத் தவிர கவுன்சிலுக்கு வெளியே உள்ள அணுகுண்டு சோதனை நடத்திய முதல் நாடாக இந்தியா மாறியது.

சோதனைக்கு பின் நடந்தவை

சோதனைக்கு பின் நடந்தவை

இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்த பிறகு, டாக்டர் ராமண்ணா, அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு போன் செய்து, "புத்தர் சிரித்தார்(The Buddha has smiled" என்று கூறினார். ஆபரேஷன் Smiling Buddha இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றியாக இருந்தது, ஏனெனில் அணுசக்தி சோதனையை நடத்துவதற்கு முன்பு அமெரிக்கா மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளால் சோதனையை பற்றி எதையும் அறிய இயலவில்லை.

பொருளாதாரத்தடை

பொருளாதாரத்தடை

அணுகுண்டு சோதனையின் விளைவாக அமெரிக்கா எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அணுசக்தி சங்கத்திற்குள் நுழைந்து இந்தியாவைக் குற்றம் சாட்டியது, மேலும் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் இந்தியா மீது சில கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. மேலும் அதற்கு அவர்கள் கூறிய காரணம், பொக்ரானில் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனைகள் அணுசக்தி பெருக்கத்திற்கு வழிவகுக்கும். இதனால் இந்தியாவுக்கான உதவியைத் தடுத்து, பல பொருளாதாரத் தடைகளை விதித்தது.

MOST READ: இந்த 4 ராசிகள் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ரொம்ப பிடித்த ராசிகளாம்... இந்த அதிர்ஷ்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா?

எப்போது தொடங்கப்பட்டது?

எப்போது தொடங்கப்பட்டது?

இந்தியாவிற்கான அணுசக்தி திட்டம் 1944 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. Smiling Buddha திட்டத்திற்கான, இந்த நடவடிக்கை செப்டம்பர் 7, 1972 இல் தொடங்கப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அணுசக்தி சாதனத்தை சோதனை செய்ய விஞ்ஞானிகளுக்கு அதிகாரம் அளித்தார். ஆபரேஷன் Smiling Buddha-க்குப் பிறகு, 1998 இல், நாடு ஐந்து அணுசக்தி சோதனைகளையும் நடத்தியது, அதில் மூன்று மே 11 அன்று நடத்தப்பட்டது, மற்ற இரண்டு மே 13 அன்று நடத்தப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Need to Know About India's First Nuclear Test at Pokhran in Tami

Check out the important things need to know about India's first nuclear test at Pokhran in 1974.
Desktop Bottom Promotion