For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க இதுல எப்படி கையை மடங்குவீங்க-ன்னு சொல்லுங்க... உங்க பத்தி ஒரு விஷயத்தை சொல்றோம்...

நீங்கள் எங்கிருந்தாலும் சரியான உடல் மொழி பலவற்றில் வெற்றிபெற உதவும். உடல் மொழி என்று வரும்போது, கைகளை விட்டுவிட முடியுமா? நீங்கள் சாதாரணமாக அடிக்கடி கைகளை மடக்கும் விதம் உங்கள் ஆளுமையை மற்ற நபருக்கு வெளிப்படுத்தலாம்.

|

ஒருவரது பழக்கங்கள் அவர்களின் குணாதிசயங்கள், ஆளுமை மற்றும் நடத்தைகளை வெளிப்படுத்தக்கூடும். அதனால் தான் சிலர் பார்த்ததுதே ஒருவரது நடத்தை, குணாதிசயங்களை சரியாக கணித்து கூறுகிறார்கள். நமது உடல் மொழி நம் ஆளுமையை பெரிய அளவில் பாதிக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான ஆராய்ச்சி உள்ளது. உடல் மொழி ஒருவரை உருவாக்கலாம் அல்லது உடைக்கலாம்.

MOST READ: பாதத்தை வெச்சே நீங்க எப்படிப்பட்டவர்-ன்னு சொல்ல முடியும் தெரியுமா? உங்க பாதம் இதுல எந்த மாதிரி?

நீங்கள் எங்கிருந்தாலும் சரியான உடல் மொழி பலவற்றில் வெற்றிபெற உதவும். உடல் மொழி என்று வரும்போது, கைகளை விட்டுவிட முடியுமா? நீங்கள் சாதாரணமாக அடிக்கடி கைகளை மடக்கும் விதம் உங்கள் ஆளுமையை மற்ற நபருக்கு வெளிப்படுத்தலாம், இது நல்லது மற்றும் மோசமானது.

MOST READ: மூக்கை வைத்தே ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும் தெரியுமா? இதுல உங்க மூக்கு எந்த மாதிரி?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூன்று விதங்கள்

மூன்று விதங்கள்

கையை மடக்குவதில் மூன்று விதங்கள் உள்ளன. கீழே அந்த மூன்று விதங்களும், ஒவ்வொரு விதமும் எந்த மாதிரியான குணாதிசயங்களைக் குறிப்பிடுகின்றன என்பதும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து நீங்கள் எப்படி உங்கள் கையை மடக்குகிறீர்கள் மற்றும் உங்களின் குணாதிசயங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

விதம் #1

விதம் #1

நீங்கள் படத்தில் காட்டப்பட்டவாறு பெருவிரல் வெளியே இருக்கும் படி கைகளை மடக்குபவரானால், நீங்கள் மிகவும் மென்மையானவர், இரக்கமுள்ளவர், அக்கறை அதிகம் உள்ள மனிதர். மற்றவர்களிடம் இருந்து உங்களை தனித்துக் காட்டும் ஒரு குணம் என்றால் அது உணர்ச்சி ரீதியாக ஒருவரைப் புரிந்து கொள்ளும் திறமை ஆகும். மேலும் நீங்கள் எதையும் ஒழுங்காகவும், திட்டமிட்டும் செய்ய விரும்புவீர்கள். உங்களின் படைப்புத் திறனையும் வளர்த்துக் கொள்ள நினைப்பீர்கள். மறுபுறம், நீங்கள் ஒரு விஷயத்தைப் பின்தொடரும் போது, சற்று பொறுமையிழப்பீர்கள்.

விதம் #2

விதம் #2

நீங்கள் உங்கள் கையை படத்தில் காட்டியவாறு நான்கு விரல்களின் மேல் பெருவிரலை வைத்து மூடுபவரானால், நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை அறியாமலேயே வெளிப்படுத்துவீர்கள். மேலும் நீங்கள் செய்யும் விஷயங்களை எவ்வாறு அணுகலாம் என்பதில் மிகவும் கவனம் செலுத்துவீர்கள். மறுபுறம், உங்களுக்கு எதிரான ஒரு விஷயம் என்னவென்றால், மக்கள் உங்களை தவறாக புரிந்து கொண்டு தவறான வழியில் எதற்கும் தீர்ப்பளிப்பார்கள். ஆனால் இது அவர்களின் பிரச்சனையே தவிர, உங்களுடையது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விதம் #3

விதம் #3

இந்த மாதிரி கையை மடக்கும் நபர்கள், தங்கள் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். எப்போதும் சொந்தமாகவே எதையும் செய்ய விரும்புவார்கள். உங்களுக்கு எதிர்மறை அணுகுமுறை கொண்ட மக்களை பிடிக்காது மற்றும் அவர்களுடன் நட்புறவு கொள்ளமாட்டார்கள். அதற்கு பதிலாக நேர்மையான வழியில் நடப்பவர்களால் ஈர்க்கப்படுவார்கள். இவர்களை சாந்தப்படுத்தக்கூடிய ஓர் விஷயம் என்றால், அது அவர்களுக்கு மன அமைதியைத் தரும் அவர்கள் வசிக்கும் வீடு தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Way You Fold Your Wrist Reveals A Lot About You

Here is a simple way in which you can analyse a persons personality, just by looking at the way they fold their wrists. So go ahead and tell us how you close your wrist..
Desktop Bottom Promotion