For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா? அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...

கடவுள்கள் நமக்கு அளிக்கும் வரத்தினையே தடை செய்யும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர்கள் நமது பித்ருக்கள். ஆகவே, நாம் பித்ருக்களின் சாபத்திற்கோ, கோபத்திற்கோ ஆட்படாமல் இருப்பது நமக்கும் நமது சந்ததிக்கும் நல்லது.

|

தை அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் நல்லாசியால் அளவற்ற நன்மைகள் உண்டாகும். பித்ரு கடன்களை நிறைவேற்றினால் நன்மைகள் பெருகும் என்று சிவபெருமானே ஸ்ரீராமபிரானிடம் கூறியிருக்கிறார். சிவபெருமான் கூறியதைக் கேட்ட பின்பே, ஸ்ரீராமர் தன்னுடைய தந்தை தசரத சக்ரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள் தண்ணீரால் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார்.

Thai Amavasai 2020: Make pithru tharpanam to our Ancestors

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதி என்பது முன்னோர்களை வழிபட சிறந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை என்பது மிகவும் விஷேசமான நாளாக கருதப்படுகிறது. அதனால் தான், நம் முன்னோர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாளையும், ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பையும் புண்ணிய காலங்களாக கொண்டாடி வருகிறார்கள்.

MOST READ: தெய்வீக மூலிகை மருதாணிக்கு சீதை கொடுத்த வரம் என்ன தெரியுமா?

நாம் செய்யும் தர்ப்பணத்தை ஏற்றுக்கொள்வதற்காகவே, தக்ஷிணாயன கால தொடக்க மாதமான ஆடி மாத அமாவாசை நாளில், பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருகின்றனர். நாம் செய்யும் தர்ப்பணத்திற்காக ஒவ்வொரு அமாவாசை திதியன்றும் நம் வீட்டிலுள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிதுர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை

பிதுர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை

ஒரு வருடத்தை இரண்டு பருவங்களாக நம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலத்தை தட்சிணாயன காலம் என்றும், தை முதல் ஆனி மதம் வரை உள்ள காலம் உத்தராயண காலம் என்றும் பிரித்து வைத்துள்ளனர். இதன் காரணமாகவே, உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாத அமாவாசை திதியையும், தட்சிணாயன கால தொடக்க மாதமான ஆடி மாத அமாவாசை திதியை பிதுர் வழிபாட்டிற்கு மிக உகந்த தினம் என சாஸ்திர நூல்கள் தெளிவாக கூறியுள்ளன.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அதிலும், சூரியன் தன்னுடைய வடதிசை பயணம் துவக்கும் உத்தராயண மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை திதி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. காரணம், அந்த நாளில் தான் நம்முடைய முன்னோர்கள் நாம் செய்யும் தர்ப்பணத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் பித்ரு லோகம் செல்லும் நாளாகும். தை அமாவாசை நாளில், கடற்கரை, ஆறு போன்ற நீர் நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்குவது, இந்துக்களாக பிறந்த ஒவ்வொருவரின் மிக முக்கிய ஆன்மீகக் கடமையாகும்.

பிதுர் காரகன், மாத்ரு காரகன்

பிதுர் காரகன், மாத்ரு காரகன்

சூரியனை பூமியும், அதன் துணைக் கோளான சந்திரனும் சுற்றி வருகின்றன என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. தை மாத தொடக்கத்தில் மகர ராசியில் நுழையும் சூரியனும், பூமி மற்றும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் தினமே தை அமாவாசை நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. சூரியன், ஆண்மை, ஆற்றல், வீரம் ஆகியவற்றை தரக்கூடியவர். சந்திரன் நம்முடைய மனதுக்கு அதிபதியானவர். மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம் ஆகியவற்றை தரக்கூடியவர். இதனால் தான் சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாத்ரு காரகன் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பித்ருக்களின் நல்லாசி

பித்ருக்களின் நல்லாசி

சூரியனையும், சந்திரனையும் தந்தை தாயாக மதித்து வழிபடும் தெய்வங்களாக கருதி வழிபடுகின்றனர். இத்தனை பெருமைகளை உடைய சூரியன் மற்றும் சந்திரனை, தாய் தந்தையை இழந்த அனைவருமே, அமாவாசை திதியில் வழிபடுவது பண்டைய காலம் தொட்டு பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும். தை மாதத்தில் அம்பாளையும், முருகனையும் போற்றி வழிபடும் மாதமாக இருந்தாலும், தை அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் நல்லாசியால் அளவற்ற நன்மைகள் உண்டாகும்.

ஸ்ரீராமருக்கு சிவபெருமானின் அறிவுரை

ஸ்ரீராமருக்கு சிவபெருமானின் அறிவுரை

நீத்தார் கடனை சரியாக முறையாக செய்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். பித்ருக்களுக்கு திதி தருவது பிண்டம் வைத்து வழிபடுவது போன்ற கடன்கள் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும் என சாஸ்திரங்களும் ஜோதிட நூல்களும் தெரிவிக்கின்றன. இவ்வாறான கடன்களை முறையாக நிறைவேற்றி விட்டாலே போதும், நம்முடைய சந்ததிகளின் வாழ்க்கை வளம்பெற்று மென்மேலும் சிறக்கும். பித்ரு கடன்களை நிறைவேற்றினால் நன்மைகள் பெருகும் என்று சிவபெருமானே ஸ்ரீராமபிரானிடம் கூறியிருக்கிறார். சிவபெருமான் கூறியதைக் கேட்ட பின்பே, ஸ்ரீராமர் தன்னுடைய தந்தை தசரத சக்ரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள்ளால் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார்.

பித்ருக்கள் பூலோகம் செல்ல அனுமதி

பித்ருக்கள் பூலோகம் செல்ல அனுமதி

ஸ்ரீராமபிரான் பித்ரு கடனை பூர்த்தி செய்த உடனே, சிவபெருமான் ஸ்ரீராமபிரான் முன்பு தோன்றி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்ததால், அனைத்து பாவங்களும் நீங்கப்பெற்று, அனைத்து நன்மைகளும் தேடி வரும் என புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆடி அமாவாசை திதியன்று, நமது பித்ருக்களை பூலோகம் செல்ல எமதர்மன் அனுமதி தருவார். எம தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார்கள். பித்ருக்களும் அவரவர் சந்ததியினர்களின் இல்லத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மனம் குளிரும் பித்ருக்கள்

மனம் குளிரும் பித்ருக்கள்

அப்போது, பித்ருக்கள் தங்களின் வாரிசுகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியுடனும் வருவார்கள். அதனால் தான் அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியமாகும். அதிலும் தை அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து வழிபட்டால், அவர்களின் மனம் குளிர்ந்து, நம்முடைய குடும்பத்தில் கெட்ட சம்பவங்கள் எதுவும் நிகழாமல் காப்பாற்றுவார்கள். தை அமாவாசை நாளில் நாம் பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்காமல் விட்டுவிட்டால், நமது பித்ருக்கள் மிகுந்த வருத்தத்துடன் பித்ரு லோகம் செல்வார்கள்.

தெய்வத்தால் கூட கருணை காட்ட முடியாது

தெய்வத்தால் கூட கருணை காட்ட முடியாது

வருத்தத்துடன் பித்ரு லோகம் செல்லும் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள், கோபப்பட்டு நமக்கு சாபம் அளித்துவிடுவார்கள். பித்ருக்கள் சாபம் இட்டுவிட்டால், தெய்வத்தால் கூட கருணை காட்டவும் உதவி செய்யவும் முடியாது என்று கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சாபமானது, தெய்வத்தின் அருளையே கட்டுப்படுத்தி தடை செய்யும் வலிமை கொண்டதாக மாறிவிடும். கடவுள்கள் நமக்கு அளிக்கும் வரத்தினையே தடை செய்யும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர்கள் நமது பித்ருக்கள். ஆகவே, நாம் பித்ருக்களின் சாபத்திற்கோ, கோபத்திற்கோ ஆட்படாமல் இருப்பது நமக்கும் நமது சந்ததிக்கும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Thai Amavasai 2020: Make pithru tharpanam to our Ancestors

On the day of Thai Amavasai, we have to make Pithru Tharpanam to our Pitru (Ancestors). Which will have immeasurable benefits. Lord Siva has told to Sri Rama that the benefits of Pitru Tharpanam will be enhanced if the debt is fulfilled. After hearing what Lord Siva had said, Sri Rama offered Pithru Tharpanam to his father Dasaratha and Jadayu.
Story first published: Tuesday, January 21, 2020, 11:58 [IST]
Desktop Bottom Promotion