For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2019ஆம் ஆண்டு நடந்த மிக கொடூரமான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பற்றி தெரியுமா?

பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

|

பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகள் பட்டியலில் உலகிலேயே இந்தியாதான் முதல் இடத்தில் இருப்பதாக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. முன்பு இருந்ததை காட்டிலும் கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அதிகளவு நடைபெறுகின்றன. காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை சிறிய குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பலர் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

ten-horrific-rape-cases-that-have-happened-in-2019

கங்கை, யமுனை, காவிரி என்று ஓடும் நதிகளின் பெயர்களை பெண்களின் பெயராக வைத்துவிட்டு, பெண்களை நாங்கள் போற்றுகிறோம் என்று கூறிக்கொண்டுள்ளார். மேலும் பூமித்தாய் என்று இந்திய மண்ணையும், சாமியாக பெண்களை வழிப்படும் இங்குதான் பெண்கள் மீது திணிக்கும் கொடுமைகள் ஏராளம். பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. நடப்பாண்டில் இந்தியாவில் நடந்த கொடூரமான பாலியல் வழக்குகள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தெலுங்கான பாலியல் வழக்கு

தெலுங்கான பாலியல் வழக்கு

தெலுங்கான மாநிலம் மெஹபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா, கடந்த நவம்பர் 27ஆம் தேதி பணி முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மர்மநபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரியாங்காவிற்கு நீதி கேட்டு போராட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்றன. அதைதொடர்ந்து, இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 4 பேரையும், கடந்த 6ஆம் தேதி தெலுங்கான போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

உன்னாவ் பாலியல் வழக்கு

உன்னாவ் பாலியல் வழக்கு

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, உடல்ரீதியாக மட்டும் பயன்படுத்தியுள்ளார் அவரது காதலன். பின்னர், அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததுடன் தனது நண்பனின் பாலியல் விருப்பத்திற்கும் உடன்பட கட்டாயப்படுத்தியுள்ளார் அந்த நபர். அவற்றை படம்பிடித்து வைத்து மிரட்டல் விடுத்த நிலையில், இருவர் மீதும் கடந்த மார்ச் மாதம் அந்த பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அப்பெண்ணை மண்ணெய் ஊற்றி எறித்தனர். பலத்த தீக்காயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அப்பெண் அன்று இரவே உயிரிழந்தார்.

MOST READ:உடலுறவின்போது உங்களுடைய உச்சகட்ட இன்பத்தை அதிகரிக்க இத செய்யுங்க போதும்...!

கூட்டு பாலியல் வன்கொடுமை

கூட்டு பாலியல் வன்கொடுமை

கடந்த மார்ச் மாதம் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திய ஆறு பேர் கொண்ட கும்பல் அச்சிறுமியை 5 நாட்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி போலீசாரிடம் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர். 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது.

சகோதர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

சகோதர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

மத்தியப்பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 12 வயது சிறுமியின் தலை துண்டாக கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, சிறுமியின் இரண்டு சகோதரர்கள் மற்றும் மாமா ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனத் தெரியவந்தது. சொந்த வீட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இச்சம்பவத்தின்போது பேசப்பட்டது.

தந்தை முன்பே நடந்த கொடூரம்

தந்தை முன்பே நடந்த கொடூரம்

கடந்த பிப்ரவரி மாதம் பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 19 வயது பெண் அவரது தந்தை இருவரும் வீட்டில் இருந்தபோது, வீட்டிற்குள் நுழைந்து, அந்த பெண்ணையும் அவளுடைய தந்தையையும் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து அரை கி.மீ தூரத்தில் வெறிச்சோடிய இடத்திற்கு தூக்கிச்சென்றனர் ஆறு பேர் கொண்ட கும்பல். அப்பெண்ணின் தந்தையை ஒரு கயிற்றால் கட்டி, அவருக்கு முன்னால் இந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தந்தையின் முன்பே ஆறு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

MOST READ:தூக்கம் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

மும்பை, சாந்த் நகர் பகுதியில் இருக்கும் மேம்பாலத்தின் கீழ் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மும்பை போலீசாரால் ஒரு சமூக ஆர்வலர் கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணையும் விட்டுவைக்காமல், அதுவும் சமூக ஆர்வலராக இருந்து கொண்டு இவ்வாறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இணையத்தில் பதிவிட்ட வீடியோ

இணையத்தில் பதிவிட்ட வீடியோ

கடந்த மே மாதம் உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில் 17 வயது காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத சிறுமியை 3 ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அதை வீடியோ பதிவு செய்து, அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த ஒரு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வல்லுறவு செய்து, அதனை வீடியோ எடுத்து சில இளைஞர்கள் பணம் பறித்தததுதான் அந்த சம்பவம். அந்த வீடியோவில் பெண்கள் "அண்ணா என்னை விட்டுவிடுங்கள்" என்று கதறும்போது, அதை ரசித்து வீடியோ எடுத்து வந்துள்ளனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்திய இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

MOST READ:கள்ள உறவில் நீங்கள் இருக்கிறீர்களா? அப்ப கண்டிப்ப இத தெரிஞ்சிக்கோங்க...!

காஞ்சிபுரம் ரோஜா

காஞ்சிபுரம் ரோஜா

காஞ்சிபுரம் மாவட்டம் காரை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று இளம்பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உடல் முழுவதும் கீறப்பட்டும், சிகரெட்டால் சுடப்பட்டும், கத்தியால் அறுக்கப்பட்டும் சடலாமாக தூக்கில் தொங்கவிடப்பட்டியிருந்தார். ரோஜாவை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிய அவரது காதலன் தான் அவரை கொலை செய்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

ஏழு வயது சிறுமி

ஏழு வயது சிறுமி

கடந்த ஏப்ரல் மாதம் கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில், விளையாடச் சென்ற ஏழு வயது சிறுமியை, பக்கத்துவீட்டுக்காரர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். அவரை காவல் துறையின் கைது செய்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மத்திய பிரதேசம் முதலிடம்

மத்திய பிரதேசம் முதலிடம்

தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வின் படி, நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கையில் சராசரியாக 4,976 வன்கொடுமை சம்பவங்களுடன் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

MOST READ:இந்த கீரையை அதிகமா சாப்பிட்டா... சிறுநீரக கல் ஏற்படும்மா?... உஷரா இருங்க...!

இரண்டாம் இடத்தில் டெல்லி

இரண்டாம் இடத்தில் டெல்லி

மேலும், 1,870 சம்பவங்களுடன் தலைநகர் டெல்லி இரண்டாம் இடத்திலும், 1,706 சம்பவங்களுடன் சத்தீஸ்கர் மாநிலம் மூன்றாம் இடத்திலும், 78 சம்பவங்களுடன் அருணாச்சல பிரதேசம் நான்காம் இடத்திலும், சிக்கிம் மாநிலம் 40 சம்பவங்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பாயாவிற்கு நடந்த பாலியல் வன்கொடுமை இந்திய மக்கள் யாரும் இன்று வரை மறந்திருக்க மாட்டார்கள்.

தமிழகம் இரண்டாம் இடம்

தமிழகம் இரண்டாம் இடம்

தமிழகம் இரண்டாம் இடம்

மாநிலங்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி, குறைவான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதில் புதுச்சேரி 0.8 சதவீதத்துடன் முதலிடத்திலும், தமிழகம் 1.0 சதவீதத்துடன் இரண்டாமிடத்திலும், 1.7 சதவீதத்துடன் பீகார் மூன்றாம் இடத்திலும், 2.1 சதவீதத்துடன் நாகாலாந்து நான்காம் இடத்திலும், 2.2 சதவீதத்துடன் குஜராத் ஐந்தாம் இடத்திலும் உள்ளதாக என்.சி.ஆர்.பி.யின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

7சதவீதம்தான் தண்டனை

7சதவீதம்தான் தண்டனை

தமிழகத்தில் பெண்கள் மீதான கொலைகளில் 35 - 40 சதவிகிதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன்பின் நடந்த கொலைகளாகவே இருக்கின்றன. இதுபோன்ற பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நடத்தப்படுகிற கொலைகளில் 60 சதவிகிதம் 18 வயதிற்குட்பட்ட பெண்களாக இருக்கின்றனர். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தமிழ்நாட்டில் சராசரியாக 7 சதவிகிதம் தான் தண்டனைக் கிடைக்கிறது. இதனால்தான் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று சமூக செயற்பட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இங்கே கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்களுக்கு மேல் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன என்பது நிதர்சனம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Horrific Rape Cases That Have Happened In 2019

Here are Ten Horrific Rape Cases That Have Happened In 2019.
Story first published: Saturday, December 21, 2019, 17:58 [IST]
Desktop Bottom Promotion