For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையை நினைத்து குற்ற உணர்வு கொள்வதற்கு காரணம் என்ன?

சமூகம் கட்டமைக்கும் எல்லா வளையத்திற்குள் இருக்கும் பெண்கள் மட்டுமே நல்லவர்கள், கற்புக்கரசி என்று போற்றப்படுவது.

|

பல பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையை நினைத்து கவலை கொள்வதாகவும், குற்ற உணர்வு கொள்வதாகவும், சங்கடமாகவும் உணர்வதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. பெண்களின் மீது இந்த சமூகம் கட்டமைத்திருக்கும் பல்வேறு காரணங்களால், இந்த உணர்வினை பெண்கள் பெறுகிறார்கள். பெண்கள் பல துறைகளில் சாதித்து எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றிருந்தாலும், அவரை ஒரு நெடியில் கீழிறக்க அவர்களின் நடத்தை இங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.

study-suggests-many-young-women-are-stressed-about-their-sex

சமூகம் கட்டமைக்கும் எல்லா வளையத்திற்குள் இருக்கும் பெண்கள் மட்டுமே நல்லவர்கள், கற்புக்கரசி என்று போற்றப்படுவது. இந்த பட்டத்தை எல்லா பெண்களும் பெற வேண்டும் என்று இந்த சமூகம் அவர்களை நிர்பந்திக்கிறது. அதை அவர்கள் மறுக்கும்போது, பொது சமூகத்தில் அவர்கள் மீது வைக்கப்படும் பார்வைகள் ஏராளம். எந்த வயது பெண்ணையும் குற்ற உணர்வு, சங்கடம், அதிருப்தி போன்றவை கொள்ள செய்ய இங்கு அவர்களின் பாலியல் வாழ்க்கை மீதுதான் கேள்வி எழுப்பப்படுகிறது. இக்கட்டுரையில் பெண்களின் பாலியல் வாழ்க்கை குறித்து ஆய்வு பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனிமனித விருப்பம்

தனிமனித விருப்பம்

இந்தியா உட்பட பல நாடுகளில் முறையான பாலியல் கல்வி முறை இல்லை. இங்கு பாலியல் குறித்தும் பாலியல் வாழ்க்கை குறித்தும் எவரும் சரியாக புரிந்துகொள்வதில்லை. பாலியல் விரும்பங்கள், ஆசைகள் என்பது அவரின் தனிப்பட்ட விஷயம். ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ யாருடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது. சொல்லபோனால், முழுமுடிவும் அவர்கள் மட்டுமே எடுக்கக்கூடியவர்கள். இது தனிமனிதனின் விருப்பம்.

MOST READ:ஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...!

புனிதமாக கற்பிக்கப்படுகிறது

புனிதமாக கற்பிக்கப்படுகிறது

பெரும்பாலான மேலைநாடுகளில் பாலியல் கல்வி அளிக்கப்படுகிறது. ஆதலால், அவர்களுக்கு செக்ஸ் பற்றிய புரிதல் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் மட்டும்தான், செக்ஸ் (உடலுறவு) என்பது குடும்ப கவுரவம், மானம், மரியாதை, சாதி கவுரவம், மத கவுரவம் என பார்க்கப்படுகிறது. இருவரின் விரும்பத்தின் பெயரில் உடலாலும், உள்ளத்தாலும் திருமணத்திற்கு முன்பு இணைவது இங்கு கொச்சைப்படுத்தப்படுகிறது. ஆனால், முன்பு பின் தெரியாதா யாரோ ஒருவருடன், யாரோ ஒருவர் குறித்துக்கொடுக்கும் தேதியில் உடலுறவு கொள்வது இங்கு புனிதமாக பார்க்கப்படுகிறது.

செக்ஸ் எப்படி பார்க்கப்படுகிறது

செக்ஸ் எப்படி பார்க்கப்படுகிறது

இந்தியாவை பொருத்தவரை செக்ஸ் என்பது திருமணத்திற்கு பின் என்ற கோட்பாடு உள்ளது. அது எந்தளவிற்கு உண்மை என்பது அனைவரும் அறிந்தது. சிலர் அதன் ஒழுக்கநெறியில் இறக்கிறார்கள். பலர் தங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தனிப்பட்ட தேர்வுகளை செய்துகொள்கிறார்கள். அப்படி, திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆண், பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது? என்பது இங்கு முக்கியமான கேள்வி. இந்த இடத்தில் ஆண்களுக்கு மட்டும் விதிவிலக்கு. இதில் ஒழுக்கங்கெட்டவலாக பெண் மட்டுமே சித்தரிக்கபடுவாள். "ஆயிரம் இருந்தாலும் அவன் ஆண், நீ பெரிய கலெக்டரா இருந்தாலும் பெண்" என்ற வசனத்துக்குள் அடங்கி இருக்கிறது பெண் அடிமைத்தனம்.

வேறுபடும் நீதி

வேறுபடும் நீதி

இந்த இடத்தில் விரும்பம் கொள்ளும் நபருடன் எல்லாம் செக்ஸ் வைத்துக்கொள்வதுதான் பெண் சுதந்திரமா? என்று சில முற்போக்கு அறிவுஜீவிகள் கேட்பார்கள். தவறு என்பது யர் செய்தாலும்தான். அது யார் செய்கிறார்கள் என்பதை பொறுத்து அந்ததவறு வரையறுக்கப்படுவதைதான் இங்கே தவறு என்று கூறுகிறோம். இந்த சமூகத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று சொல்கிற இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பற்றி நாம் நினைவில் வைத்துக்கொள்வதே இல்லை. ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதி என்றே காலம்காலமாக இந்திய சமூகம் பின்பற்றி வருகிறது.

MOST READ:விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியாத மர்மமான மனித நடத்தைகள் என்னென்ன தெரியுமா?

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். இதிலும், பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபரை மறந்துவிட்டு, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணைதான் குறைகூறும் இந்த சமூகம். டெல்லி நிர்பயா வழக்கு போன்று இன்னும் எவ்வளவோ சாட்சிகள் இருக்கின்றன. நிர்பயா ஏன் அர்த்த ராத்திரியில் வெளியே செல்ல வேண்டும் என்று அவள் மீதுதான் அதிக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பாலியல் கல்வியால் இங்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறைவாக வாய்ப்புள்ளது.

நோய்கள் ஏற்படுகின்றன

நோய்கள் ஏற்படுகின்றன

உலகெங்கிலும் உள்ள பல இளம் பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்கிறது சமீபத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வு. ‘செக்ஸ்' என்ற வார்த்தையும், பாலியல் செயல்களில் ஈடுபடுவதற்கான தேர்வும் பல நாடுகளில் வெறுக்கப்படுகின்றன. இது மக்களைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான உரையாடலைத் தடுக்கிறது. இதன் விளைவாக பாலியலால் பரவும் நோய்கள் (எஸ்.டி.டி) மற்றும் பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் (எஸ்.டி.ஐ) போன்றவை ஏற்படுகின்றன.

மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது

மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது

பெரும்பாலும், இளைஞர்களுக்கு திருமணத்திற்கு முன் பாலியல் உறவில் ஈடுபடுவது ஒழுக்கக்கேடானது அல்லது பல பாலியல் கூட்டாளர்களைக் கொண்டவர்கள் தங்கள் செயல்களைப் பற்றி வெட்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை இந்த சமூகம் கொடுத்துள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில், இளைஞர்கள், குறிப்பாக இளம் பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கை தொடர்பான மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை.

MOST READ:உங்க வீட்டை உடனடியாக மகிழ்ச்சியாக மாற்ற இந்த சின்ன விஷயங்களை செய்யுங்க போதும்...!

குற்ற உணர்வுகளை கொள்கின்றனர்

குற்ற உணர்வுகளை கொள்கின்றனர்

ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு இதை உறுதிப்படுத்துகிறது. ஆராய்ச்சியின் படி, 18 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்களின் பாலியல் நல்வாழ்வின் ஒட்டுமொத்தத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டது. இதில், கிட்டத்தட்ட பாதி இளம் பெண்கள் பாலியல் தொடர்பான தனிப்பட்ட துயரங்களை அனுபவிக்கின்றனர். சங்கடம், குற்ற உணர்வு மற்றும் பாலியல் அதிருப்தி போன்ற விஷயங்களை அனுபவிக்கிறார்கள்.

உருவம்

உருவம்

இளம் பெண்கள் அனுபவித்த பல பாலியல் துயரங்களில், குறைந்த பாலியல் சுய உருவமே பெண்களிடையே அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணின் குறைந்த பாலியல் சுய உருவம் திரைப்படங்கள் மற்றும் பத்திரிகை அட்டைகளில் கவர்ச்சியான பெண்களின் படங்களை பார்க்க வேண்டிய பாதுகாப்பின்மையிலிருந்து தோன்றியதால் இது இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது, அவளைப் வெகுவாக பாதிக்கும். அவற்றை பார்க்கும்போது, அவளுக்கு ‘போதுமானதாக இல்லை' என்று உணரக்கூடும். பாலியல் சுய உருவ செயலிழப்பு அதிக எடை, உடல் பருமன், கூட்டாளியுடன் சேர்ந்து வாழ்வது, திருமணமாகாதது, திருமணமானது மற்றும் தாய்ப்பால் கொடுப்பது ஆகியவற்றுடன் தொடர்புடையது.

MOST READ:வயதான காலத்திலும் உங்க செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இத ஃபாலோ பண்ணுங்க...!

பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்

பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்

கருவுறுதல் மற்றும் மலட்டுத்தன்மை என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், குறைந்த பாலியல் சுய உருவத்தைத் தவிர, பெண்கள் தூண்டுதல், புணர்ச்சி, ஆசை மற்றும் பதிலளிக்கக்கூடிய செயலிழப்பு ஆகியவற்றால் வலியுறுத்தப்படுகிறார்கள். மேலும் 9 சதவீதம், 7.9 சதவீதம், 8 சதவீதம், மற்றும் பதிலளித்தவர்களில் முறையே 3.4 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

நீங்கள் இந்தியா போன்ற ஒரு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால், அங்கு பாலியல் அல்லது உடல் ரீதியான நெருக்கம் என்ற தலைப்பில் எந்த விவாதமும் தடைசெய்யப்பட்டதாக கருதப்படுகிறது. பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாலும், பெண்களை தங்களை போன்ற உயிருள்ள பெண்ணாக பார்க்க மறுப்பதாலும்தான் பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. பெண்களை கடவுளாக வழிபடும் இந்தியர்களுக்கே இந்த பெருமை சேரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Study Suggests Many young women are stressed about their sex lives

According to studies, many young women are stressed about their sex lives.
Desktop Bottom Promotion