For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவனுக்கு திங்கள்கிழமை விரதம் இருந்தால் ஏன் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது? வேறு என்ன சாப்பிடலாம்?

|

இந்து மாதமான 'சாவன்' அல்லது 'சிராவண மாதம்'வட இந்தியாவில் ஜூலை 17ம் தேதி தொடங்கி, ரக் ஷா பந்தன் கொண்டாட்டத்தோடு ஆகஸ்ட் 15ம் தேதி முடிவடைகிறது.

Shravan Month 2019

தென்னிந்தியாவில் 2019 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரைக்கும் இம்மாதம் அனுசரிக்கப்படுகிறது. இந்து நாள்காட்டியின் சாவன் மாதம் வழக்கமாக ஜூலை - ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் வரும். இது இந்துக்களுக்கு விசேஷித்த மாதமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சோம வார விரதம்

சோம வார விரதம்

சிராவண மாதத்தில் சிவ பக்தர்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் மோட்ச பேறு அடையவும் இறைவனை வேண்டுவர். சிராவண மாதத்தில் திங்கள்கிழமை தோறும் அநேகர் 'சிராவண சோம வார விரதம்' என்னும் விரதத்தை கடைபிடிப்பர். இவ்விரதத்தை கடைபிடிப்பவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்; சிவபெருமானின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

விரத முறைகள்

விரத முறைகள்

சிலர் கண்டிப்பாக சைவ உணவு பழக்கத்தை கடைபிடிப்பர். சிலரோ நாளுக்கு ஒருவேளை மட்டுமே உண்பர். இன்னும் சிலர் உப்பு, பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை உணவில் சேர்க்க மாட்டார்கள். சிலரோ சாப்பிடாமல் இருப்பர்.

MOST READ: இன்னைக்கு வெட்டிச்செலவு வரப்போகும் ராசிக்காரர் யார்? தெரிஞ்சிக்கங்க... ஜாக்கிரதையா இருங்க...

நன்மைகள்

நன்மைகள்

உண்ணாமல் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியத்தை மேம்படுதல், மூளையின் செயல்பாட்டை தூண்டப்படுதல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் உடலுக்குக் கிடைக்கிறது.

என்ன சாப்பிடலாம்?

என்ன சாப்பிடலாம்?

காலையில் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒன்று அல்லது இரண்டு குவளை வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். இது காலையில் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும்.

MOST READ: நவகிரகங்களை அடக்க நினைத்த ராவணன் - விளையாடிய சனியின் காலுக்கு நேர்ந்த கதி

காலை உணவு

காலை உணவு

காலை உணவாக ஆப்பிள் அல்லது வாழைப்பழ மில்க் ஷேக் அருந்தலாம். இது வயிறு நிறைந்த திருப்தியை தரும்.

இடைவேளையில் 5 வாதுமை அல்லது 2 வால்நட் பருப்புகள் சாப்பிடலாம். இதுபோன்ற பருப்புகள் அதிக கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து அடங்கியவை. ஆரோக்கியமான உணவாகிய இவை, மதிய உணவு வேளை வரைக்கும் பசியை அடக்க உதவும்.

மதிய உணவு

மதிய உணவு

மதிய உணவாக ஒரு கிண்ணம் நிறைய சாலட் அல்லது ஜவ்வரிசி கிச்சடி சாப்பிடலாம். ஜவ்வரிசி உடலுக்கு ஆற்றலும் உத்வேகமும் அளிக்கக்கூடியது.

மாலை வேளையில் கிரீன் டீ மற்றும் சிங்காரா எனப்படும் நீர்கொம்பு செடி கொட்டை மாவில் செய்யப்பட்ட ரொட்டி உண்ணலாம். சிங்காரா மாவில் கார்போஹைடிரேட் அதிகம் உள்ளது. துத்தநாகம் (ஸிங்க்), பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து (கால்சியம்), இரும்பு சத்து ஆகியவையும் அடங்கியுள்ளன.

MOST READ: நடிகர் குணால் கெமு இவ்ளோ ஃபிட்டா இருக்க என்ன செய்றார் தெரியுமா? இத ட்ரை பண்ணுங்க...

இரவு உணவு

இரவு உணவு

இரவு உணவாக காய்கறிகள் சேர்த்து 2 சப்பாத்திகள், பருப்பு (டால்), சூப் மற்றும் தயிர் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

புனிதமாக கருதப்படும் சிராவண மாதத்தில் கத்தரிக்காயை சாப்பிட வேண்டாம். பழைய ஆகமங்கள் படி, கத்தரிக்காய் சுத்தமானதல்ல. ஆகவே, மக்கள் அதை சாப்பிடமாட்டார்கள். அறிவியல்பூர்வமாக, கத்தரிக்காயில் அநேக பூச்சிகள் உள்ளன; ஆவே, அது சாப்பிட ஏற்றதல்ல.

சாவன் மாதத்தில் விரதம் இருப்போர் பால் அருந்தக்கூடாது. ஆயுர்வேதத்தின்படி, பருவ மழைக்காலத்தில் பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் வாதம், பித்தம், கபம் என எல்லா வகையிலும் உடலின் சமநிலையை கெடுக்கும்.

மது அருந்தக்கூடாது. மீன், முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவுகளையும் இம்மாதத்தில் சாப்பிடக்கூடாது.

மழைக்காலத்தில் இலைதழை உணவுகளில் பூச்சிகள் இருக்கும். கீரை வகைகளை சாப்பிடுவதால் அதிக பித்தநீர் சுரக்கும் ஆகவே, அவற்றை சாப்பிட வேண்டாம்.

MOST READ: காதல் தோல்வியால் ஒரு மாதம் குளிக்காமல் காதலி வீட்டின்முன்பே தங்கியிருந்த காதலன்

கவனத்தில் கொள்ள வேண்டியவை

கவனத்தில் கொள்ள வேண்டியவை

பீன்ஸ் மற்றும் இலை தழை உணவுகளை தவிர்ப்பதோடு, பழங்கள், ஏனைய காய்கறிகளையும் அதிக அளவில் உண்ணக் கூடாது. தினமும் எட்டு முதல் பத்து குவளை (தம்ளர்) நீர் அருந்தவேண்டும். பொறித்த, மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளையும் சாப்பிடக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shravan Month 2019: What Foods To Eat And What Foods To Avoid

The Hindu month of Sawan or Shravan has started on 17 July 2019 and will end on 15 August 2019 with the celebration of Raksha Bandhan, in North India, and will start on 1 August 2019 and end on 30 August 2019 in South India.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more