For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதுப்பெண்ணை ஏன் வலது காலை எடுத்து வச்சு உள்ளே வா என்று சொல்கிறார்கள் தெரியுமா?

|

நீங்க கோடீஸ்வரர் ஆக ஆசைப்படுறீங்களா? ரொம்ப சிம்பிள் உங்க பாதங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்க. பாத சுத்தம் ஆரோக்கியம் மட்டுமல்ல அன்னை மகாலட்சுமியை உங்களிடம் வசியப்படுத்தும். வலது பாதத்தில் நாராயணன் சகிதமாக அன்னை மகாலட்சுமி குடியிருக்கிறார் எனவேதான் தம்பதி சகிதமாக வீட்டிற்குள் இருவரும் நுழைய வேண்டும் என்று புதுப்பெண்ணை வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா என்று அழைக்கின்றனர்.

Shocking Facts About Goddess Lakshmi No One Knows

லட்சுமி என்றாலே அழகு என்று தான் பொருள். எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். நிறைந்து நிற்கும் நெல் வயல், சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், மகிழ்ச்சியான வீடு என இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் எல்லாம் அன்னை இருக்கும் இடங்கள்தான். சுத்தமான பாதத்திலும் அன்னை மகாலட்சுமி வசிக்கிறார். எனவேதான் பசுவிற்கு பூஜை செய்வது போல பாதங்களுக்கும் பூஜை செய்கின்றனர்.

என் சாண் உடம்பிற்கு சிரசே தலைமை என்றாலும் பாதமே பூஜையை பெரும் சிறப்பு பெற்றதாகும், இந்த பாதம் மூவுலகையும் அளந்த பெருமையும். பாதம் உலகை ஆண்ட பெருமையும் புராணங்களில் படித்திருப்போம், ஆக இந்த பாதத்திற்கு இவ்வளவு மரியாதை ஏனெனில் அதுவே செல்வம் தரும் யோகம் தரும் மகாலட்சுமி குடிகொள்ளும் பாகமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலது கால் ரகசியம்

வலது கால் ரகசியம்

திருமணம் ஆன உடன் புதுமணப்பெண் புகுந்த வீட்டிற்கு வரும் போது தலைவாயிற் படியில் படி நெல்லை வைத்து கையிருக்க காலால் உள்புறமாக தட்டி நெல்லை தரையில் கொட்ட வைத்து உள்செல்லும் பழக்கமும் உள்ளது, ஏன் இதை கையால் தட்டக் கூடாதா கால்களால் ஏன் உதைத்து தட்ட வேண்டும் அது நல்லதா? இப்படி செய்யலாமா என்று கேட்கலாம். உடலில் பாதமே மிகுந்த மரியாதையானது அதுவே மகாலட்சுமி பாகம் என்பதால் காலால் உதைத்து நெல்லை கொட்ட வைக்கின்றனர்.

லட்சுமி குடியேறுவாள்

லட்சுமி குடியேறுவாள்

பசுவாய் இருந்தாலும் அதன் பாதத்தில் லட்சுமி குடி கொள்கிறாள், புதுமனை கிரஹ பிரவேஷத்தின் போது பசுவின் பாதம் படவே முதலில் இல்லத்திற்கு பசு கன்றை அழைத்து வருவார்கள். லட்சுமி நடையான மெல்ல சத்தமின்றி பூமிக்கு அழுத்தமின்றி நடப்பதால் அதிஷ்டம் குடிகொள்ளும்,

ஐஸ்வர்யம் பெருகும்

ஐஸ்வர்யம் பெருகும்

யாரையும் தலையை தொட்டு வணங்கினால் அவமதிப்பு செய்வதாக எண்ணுவார்கள், அதுவே குனிந்து காலை தொட்டு வணங்கும்போது அவர்கள் உடனே குனிந்து நம்மை எழுப்பி மனப்பூர்வமாக நம்மை ஆசீர்வதிப்பார்கள், ஆக பாதமே மரியாதையான லட்சுமி ஸ்தானமாகும், அதன் சுத்தத்திலே தான் செல்வம் உள்ளது, அதன் பணிவான நடையில்தான் ஐஸ்வர்யம் உள்ளது, சக்தி நடையான அதிர்ந்து நடப்பது தரித்திரம் பீடிக்கும்.

கால் சுத்தம் அவசியம்

கால் சுத்தம் அவசியம்

பூமியை அதிர்ந்து உதைக்கவோ நடக்கவோ கூடாது என்பார்கள், குறிப்பாக குதிக்கால் மிக முக்கிய யோகலட்சுமி வாழும் இடமாகும், இதனால் பூமியை யார் உதைத்தாலும் நிச்சயம் உடனே தரித்திரம் பிடிக்கும், எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டிய பகுதி நம் குதிக்கால் (பின்னங்கால்) ஆகும், காலை கழுவும் போது குதிக்காலை விட்டு மற்ற இடங்களை மட்டும் கழுவினால் தரித்திரம் பிடிக்கும், இதை பயமுறுத்தியாவது காலை சுத்தமாக கழுவச் செய்ய நம் முன்னோர்கள் ஒரு பயமுறுத்தலான தகவலை கொண்டு வந்தார்கள்.

குதிகால் சுத்தம் அவசியம்

குதிகால் சுத்தம் அவசியம்

அதாவது பின்னங்காலை கழுவவில்லை எனில் சனிஸ்வர பீடை பிடித்து விடும், பாத சனி பாடாய் படுத்தும், என்றெல்லாம் பயமுறுத்தி காலை சுத்தமாக வைத்துக் கொண்டு லட்சுமி அருளை பெற வேண்டும் என்ற நோக்கில் கூறியிருக்கிறார்கள். இன்று இதையாரும் கண்டுகொள்வதில்லை, அதனால்தான் செல்வமும் தங்குவதில்லை . குடும்பத்தில் திருமணம் காலா காலத்திற்கு நடப்பதில்லை, பல சங்கடமான பலன்களை எல்லாம் அனுபவிக்கிறார்கள், காரணம் லட்சுமி ஸ்தானங்களை அறிந்து அதை சுத்தமாக வைத்துக் கொள்ளாததே முக்கிய காரணமாகும்.

லட்சுமி அருள்

லட்சுமி அருள்

லட்சுமியை பற்றிய விஷயம் அறிந்தவர்கள் யார்மீதும் எதன்மீதும் உதாசீனமா தன் கால் படாதவாறு நடந்து கொள்வார்கள், அதே போல் அனாவசியமாக தன் பாதங்களை இன்னொருவர் தொட்டு வணங்க அனுமதிக்க மாட்டார்கள், தன் அதிஷ்டம் அவர்களுக்கு போய்விடுமோ என்ற அச்சமும் அதற்கு முக்கிய காரணமாகும். ஞானியர் கூட பிறரை தன்பாதத்தை தொட அனுமதித்ததில்லை காரணம் சுத்தமான மகாலட்சுமி ஸ்தானத்தை பாவப்பட்ட மனிதன் தொட்டு விட்டால் அதன் புனிதம் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவ்வாறு கடைபிடித்துள்ளார்கள்.

செல்வம் பெருகும்

செல்வம் பெருகும்

பாதம் தானே என உதாசினமாய் இருக்கக் கூடாது .நம் முழு உடல் எடையும் தாங்கி முன்னோக்கி நடத்தி செல்லும் முக்கிய உறுப்பே பாதம் தான். அதுவே வணங்குதற்குரிய ஸ்ரீ லட்சுமி பாதமாகும் எனவே சுத்தமாக இருப்பது அவசியம். வெளியில் சென்று வந்தாலே சுத்தமாக கால்களை கழுவியே உள்ளே செல்வார்கள், திருஷ்டிக்கு சுற்றிப்போட்டதை கால்களால் மிதிக்க மாட்டார்கள், காலே படாதவாரே நடந்து செல்வார்கள், ஒரு காலை கொண்டு இன்னொரு காலை தேய்க்க மாட்டார்கள், அனாவசியமாக கால்மேல் கால் போட்டு ஆட்டமாட்டார்கள், இவைகளெல்லாம் நாமும் பின்பற்றினால் மிக உயர்ந்த செல்வ சந்தோஷ நிலைக்கு உயரலாம்.

பெருமாள் பாதம்

பெருமாள் பாதம்

பெருமாளின் ஆலயங்களில் இன்றும் பாதுகாவை கொண்டே ஆசீர்வாதம் செய்கிறார்கள், இதைக்கூற காரணம் பாதத்தின் பெருமையை நாம் உணர்ந்து செயல்படவேண்டும் என்பதற்காகவே. பாதங்களில் வலது பாதம் லட்சுமி நாராயணன் ஆவார்கள், தம்பதி சமேதராய் உள்ள பாதத்தையே முதலில் அடி எடுத்து வைத்து வர முக்கியத்துவம் கொடுப்பார்கள், இடது பாதம் லட்சுமியும் மூதேவியும் குடி கொள்ளும் இடமாகும், கால் பதிக்கும் இடம் பாவம் நிறைந்ததாகவோ சுத்தமற்றதாகவோ இருந்தால் முதலில் மூதேவியே இறங்கி அவ்விடத்தில் குடிகொண்டு ஆசீர்வதித்து விடுவார்கள்.

லட்சுமி நாராயணன்

லட்சுமி நாராயணன்

அந்த பயத்திலேயே யாவரும் வலது காலை எடுத்து வைத்து வர விரும்புகிறார்கள். இன்று கால போக்கில் ஏன் என்று அறியாமலேயே பழகி போன நல்ல பழக்கமாக உள்ளது . புராணங்களில் பாத மகிமையை பற்றி பல தகவல்கள் உள்ளன.மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பது போல இருப்பதற்கு என்ன காரணம் நீங்கள் யோசித்தது உண்டா? மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? மகாவிஷ்ணுவும், லட்சுமிதேவியும் அன்பான ஒரு சிறந்த தம்பதிகள். ஆனால் கோவிலில் இவர்களின் சிற்பங்கள் ஏன் காலை பிடித்து இருப்பது போன்று உள்ளது என்பதற்கான ரகசியத்தை நமது முன்னோர்கள் மறைத்தே வைத்துள்ளனர்.

கால் பிடித்து விடுவதன் ரகசியம்

கால் பிடித்து விடுவதன் ரகசியம்

ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்குகீழ் வருகின்றது. அதேசமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டது என்று முன்னோர்கள் ஜோதிட ரீதியாக கூறியுள்ளார்கள். ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால் வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இப் பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும் கோடீஸ்வர யோகம் தேடி வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shocking Facts About Goddess Lakshmi No One Knows

Goddess Lakshmi is the deity of wealth, which brings ego into any soul. Lakshmi represents matter or material wealth of this world.The real bond between God and any soul is only master and servant as per Madhva. As per the old tradition, the wife serves her husband like a servant serving the master.
Story first published: Thursday, December 19, 2019, 18:36 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more