For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரத சப்தமியும் ஏழு எருக்கம் இலை குளியலும் - என்ன பயன்கள்?

|

சூரிய பகவானை வணங்கும் பண்டிகையான ரத சப்தமி நாளை சனிக்கிழமை வழிபடப்படுகிறது. உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி விரதம். தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். சூரியன் வட திசை நோக்கி தனது பயணத்தை தொடங்குகிறார். அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைபிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். இந்த தினத்தை சூரிய ஜெயந்தியாகவும் அழைக்கின்றனர்.

MOST READ: நாக தோஷத்தால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் தெரியுமா?

சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும். அமாவாசைக்கு பிறகான 7வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரத சப்தமி என்று போற்றப்படுகிறது. நாளை பிப்ரவரி 1ஆம் தேதி சனிக்கிழமையன்று ரத சப்தமி கடைபிடிக்கப்படுகிறது.

MOST READ: செல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்?

ரத சப்தமி அன்றுதான் சூரியன் வட திசையில் இருந்து ஆறு மாத காலத்திற்கு உலகிற்கு ஒளி தருவார். ரத சப்தமி நாளையொட்டி கங்கை உள்ளிட்ட புண்ணிய ஆறுகள், தீர்த்தங்களில் ஏராளமானோர் புனித நீராடி சூரிய பகவானை வழிபடுவார்கள். இன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரிய உதயத்தில் குளியல்

சூரிய உதயத்தில் குளியல்

ரத சப்தமி நாளில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று நீராடுவது சிறப்பு. அப்படி போக முடியாத சூழ்நிலையில் இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி குளிக்க வேண்டும். ரத சப்தமியன்று காலையில் குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்க இலைகளை ஏழு எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை வைக்க வேண்டும். ஆண்கள் அதனுடன் விபூதியும், பெண்கள் அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இந்த இலைகள் அடுக்கைத் தலைமீது வைத்து குளிக்க வேண்டும்.

நோய்கள் தீரும்

நோய்கள் தீரும்

அதிகாலையில் குளிக்கும் போது எருக்கம் இலைகளை கால்களில் இரண்டு, கண்களில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்று என எருக்கம் இலைகளை வைத்து, தண்ணீர் விட்டுக் கொள்ளவேண்டும். பெண்கள், தலையில் எருக்கம் இலையுடன் மஞ்சள் கலந்த அட்சதையையும் ஆண்கள் அட்சதையை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும், நோய்களையும் நீக்குகிறது.

ஆரோக்கியம் அதிகமாகும்

ஆரோக்கியம் அதிகமாகும்

ரத சப்தமி நாளில் முறைப்படி நீராடி, சூரிய வழிபாடு செய்தால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். வீட்டில் உள்ள தரித்திர நிலை மாறும். தேக ஆரோக்கியம் கூடும் என்பது ஐதீகம். கணவனை இழந்த பெண்கள், தந்தையை இழந்த ஆண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன், பச்சரிசி, கருப்பு எள் ஆகியவற்றை தலையில் வைத்து நீராட வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்! கணவனை இளம் வயதிலேயே பறிகொடுத்தவர்கள், இந்த வழிபாட்டைச் செய்வதால், அடுத்த பிறவியில் இது போன்ற துன்பங்கள் வராது என்பது ஐதீகம்

சூரியனை வணங்குவோம்

சூரியனை வணங்குவோம்

ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணை பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உடைய மலர்கள் பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்யலாம். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம்.

பாவங்கள் விலகும்

பாவங்கள் விலகும்

ரத சப்தமியன்று தொடங்கும் தொழில் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்த நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கும் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். இந்த ஆண்டு முதல் ரத சப்தமி முதல், அதிகாலையே எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ரத சப்தமி நாளில்ஆதித்ய ஹ்ருதயம் முதலான ஸ்லோகங்கள் படிப்பது கூடுதல் பலன்களைத் தரும். அதாவது ரத சப்தமி நாளில், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்து, சூரியனாரை வணங்கினால், ஏழேழு ஜென்ம பாவங்களும் விலகும். ஏழு தலைமுறை சந்ததியினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்

ஆரோக்கியம் அதிகமாகும்

ஆரோக்கியம் அதிகமாகும்

கண்ணுக்குத் தெரிகின்ற கடவுளான சூரியனை ரத சப்தமி தினத்தில் வழிபடும்போது, சூரியனை நோக்கி, 'ஓம் நமோ ஆதித்யாய... ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா!" என்று சொல்லி வணங்கலாம்.

ஸப்தி ப்ரியே தேவி ஸ்பத லோகைக பூஜிதே

ஸ்பத ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸ்பதமி ஸத்வரம்!

என்னும் துதியை ரத சப்தமி அன்று சப்தமி திதியின் அதிபதியான தேவியிடம் பிரார்த்தித்து வணங்கினால், ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை. சூரியனாருக்கு உகந்த தானியம் கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது உத்தமம். அவருக்குப் பிடித்த செந்தாமரை மற்றும் செந்நிற மலர்களால் அர்ச்சித்து அவரை வழிபடுவது விசேஷம். ஆலயங்களுக்குச் சென்று சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் வழங்கி தரிசித்தால், பாவமெல்லாம் பறந்தோடிவிடும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ratha Saptami 2020: Importance Of Sun Worship And Prayer

The first and the most significant ritual to be performed on the eve of Ratha Saptami is to wake up early and observe a holy bath.
Story first published: Friday, January 31, 2020, 14:44 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more