Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
புரட்டாசியில் சைவம் மட்டுமே கண்டிப்பாக சாப்பிடணும் - அறிவியல் உண்மைகள்
புரட்டாசி மாதம் பிறக்கப் போகிறது. அசைவம் கடைகளில் காற்றாடும். காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விடும் மக்கள் விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெரும
புரட்டாசி மாதம் புதன்கிழமை பிறக்கப்போகிறது. இந்த மாதத்தில் ஆடு மாடு கோழிகள் எல்லாம் சுதந்திரமாக உற்சாகமாக விளையாடும். புரட்டாசியில் பெரும்பாலான மக்கள் அசைவ உணவை தவிர்த்து விட்டு சைவ உணவை மட்டுமே சாப்பிடுவார்கள். எனவே இந்த மாதத்தில் அசைவ கடைகளில் காற்றாடும். காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதுவதால் விலை உச்சத்தை தொடும். புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.
புரட்டாசி மாதம் என்பது புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்றும் புதனைக் கூறுவார்கள். செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர், புதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால், அது உப்பு சப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. பெருமாளுக்கும் சைவ உணவுதான். புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம் தான் புதனுக்கு வரும். அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது.

புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் மேலும் பூமியின் இயக்கத்து படி நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.

முன்னோர்கள் விரதம்
ஏகாதசி விரதம், புரட்டாசி விரதம், சனிக்கிழமை விரதம் என பல தினங்களுக்கு முன்னோர்கள் காரணம் இல்லாமல் விரதம் இருந்ததில்லை. எதற்கும் ஒரு காரணம் காரியம் உண்டு. புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போய் துளசி தீர்த்தம் குடிக்கச் சொல்வார்கள். இதற்கு ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் நன்மை தரும் பல காரணங்கள் உள்ளன.

கன்னி ராசியில் சூரியன்
மேஷம் ராசியில் உச்சம் பெறும் சூரியன் துலாம் ராசியில் நீசமடைகிறார். கன்னி ராசியில் இருக்கும் சூரியன் படிப்படியாக தனது வலிமையை இழக்கத் தொடங்குவார். சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும். எனவேதான் சாத்வீகமான உணவுகளை சாப்பிட வேண்டும். அசைவ உணவு சாப்பிட்டால் நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்படும் கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்க்க வேண்டும் என்றும் உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.

மழை மாதம் - உடல் சூடு
புரட்டாசியில் மழை அதிகம் பெய்யும். பூமி குளிர பெய்யும் மழையால் வெப்பம் குறையும். அதே நேரம் பூச்சிகள், கிருமிகள் அதிகரிக்கத் தொடங்கும். இந்த மாதத்தில் ஆன்மீக விசயங்கள் அதிகம் நடைபெறும். பெருமாள் விரதத்தோடு அம்மனுக்கு உகந்த நவராத்திரி பண்டிகைகளும் கொண்டாடப்படும் மாதம் புரட்டாசி மாதம். பலவகையான சுண்டல்கள் செய்து பிரசாதமாக கொடுத்து மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வார்கள்.

சைவ உணவு விரதம்
புரட்டாசியில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை கெடுத்துவிடும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கி விட்டு சைவ உணவுகளை சாப்பிட்டு நம் முன்னோர்கள் விரதம் இருந்தனர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி தீர்த்தம் - பெருமாள் கோவில்
பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் தருவதையும் நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். துளசி தெய்வீக மூலிகை பெருமாளுக்கு பிடித்தமானது. வயிறு தொடர்பான பிரச்சினைகள், சளி தொந்தரவுகளை துளசி கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. எனவே அசைவ உணவுகளைத் தவிர்த்து விட்டு விரதம் இருப்பதன் மூலம் இறைவனின் அருளோடு நோயற்ற வாழ்க்கையும் வாழலாம்.



Click it and Unblock the Notifications