Just In
- 38 min ago
குரு-சனி உருவாக்கும் அகண்ட சாம்ராஜ்ய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 58 min ago
நீங்க டீ அல்லது காபியை சூடா குடிக்கிறீங்களா? அப்ப உங்களுக்கு இந்த புற்றுநோய் வர அதிக வாய்பிருக்காம்!
- 1 hr ago
சாணக்கிய நீதியின் படி உங்க வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால் கெட்ட நேரம் உங்களை நெருங்கிவிட்டதாம்...ஜாக்கிரதை
- 2 hrs ago
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
Don't Miss
- Finance
மோடி அரசின் அறிவிப்பால் 1 கோடி பேருக்கு லாபம்.. யாருக்கு இந்த ஜாக்பாட்..!
- Movies
விடுதலை ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்: உங்கிட்ட இருந்து எதாவது வாங்கணும்ல... தனுஷை வம்பிழுத்த இளையராஜா
- News
"இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும்.." மெசேஜ் வந்தால் என்ன செய்யணும்! புதுவித மோசடி.. நம்பாதீங்க
- Automobiles
இப்படியொரு சூப்பரான ஆடி கார் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கவே இல்ல!! ரூ.2 லட்சத்தில் புக் பண்ணிடலாம்!
- Sports
தரமான செய்கை இருக்கு.. ஹர்பஜனின் முக்கிய சாதனையை உடைக்கும் அஸ்வின்.. ஆஸி, தொடரில் பெரும் வாய்ப்பு!
- Technology
டிஜிட்டல் கேமராக்களுக்கு வேலை இருக்காது போலயே: சோனி கேமராவுடன் அறிமுகமான 2 புதிய Vivo போன்கள்.!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Budh Gochar 2022: தனுசு செல்லும் புதனால் டிசம்பர் 3 முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
நவகிரகங்களில் புத்திசாலித்தனம், நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் ஆகியவற்றைக் குறிக்கும் கிரகம் தான் புதன். இது கிரகங்களில் மிகவும் வேகமாக நகரும் கிரகம் ஆகும். வேத ஜோதிடத்தின் படி, புதன் புத்திசாலித்தனம், பகுத்தறிவு திறன் மற்றும் நல்ல தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
புதன் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 டிசம்பர் 03 ஆம் தேதி காலை 06.34 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து குரு ஆளும் தனுசு ராசிக்குள் நுழைகிறார். இப்போது 2022 டிசம்பர் 03 ஆம் தேதி தனுசு ராசிக்கு புதன் செல்வதால் டிசம்பர் 28 ஆம் தேதி வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது தர்மம், தந்தை, நீண்ட தூர பயணம், புனித யாத்திரை மற்றும் அதிர்ஷ்டத்தின் வீடாகும். எனவே இந்த புதன் பெயர்ச்சியானது தத்துவவாதிகள், ஆலோசகர்கள், ஆசிரியர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு அதை தொடர்பு வாய்ப்பு கிடைக்கும். மேலும் இந்த ராசிக்காரர்கள் தந்தையின் ஆதரவைப் பெறுவார்கள். அதே வேளையில் தந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தொலை தூர மற்றும் யாத்திரைகளுக்கு பயணம் மேற்கொள்ள இது சிறந்த காலம். உங்கள் இளைய சகோதரர்களின் ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது திடீர் நிகழ்வுகள், ரகசியம், அமானுஷ்ய ஆய்வுகள் ஆகியவற்றின் வீடாகும். எனவே இக்காலம் ஜோதிடம் அல்லது அமானுஷ்யம் படிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற காலம். ஆராய்ச்சித் துறையில் இருந்தாலும், உங்கள் கடின உழைப்பின் நேர்மறையான முடிவைப் பெற முடியும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று விழிப்போடு இருக்க வேண்டும். இக்காலத்தில் எதிர்பாராத செலவுகளுக்கு உங்களின் சேமிப்பை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது வாழ்க்கைத் துணை மற்றும் வணிக கூட்டாளியின் வீடாகும். எனவே இந்த புதன் பெயர்ச்சியால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. திருமணமான தம்பதிகள் தங்கள் துணையுடன் வலுவான பிணைப்பை உணர்வார்கள். வணிக கூட்டாண்மைக்கு இது மிகவும் நல்ல நேரம். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது எதிரிகள், ஆரோக்கியம், போட்டி, தாய் மாமன் ஆகியவற்றின் வீடாகும். எனவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் எதிரிகளுடன் பார்த்து கவனமாக பேசினால் சட்ட விஷயங்கள் எளிதில் தீரும். டிரேடிங், மார்கெட்டிங், வங்கி போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். இக்காலத்தில் தாய் மாமனின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது கல்வி, காதல் உறவுகள், குழந்தைகள், ஊகங்கள் மற்றும் பூர்வ புண்ணிய வீடாகும். இதனால் ஷேர் மார்க்கெட் அல்லது ஊக வணிகத்தில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள காலமாக இருக்கும். சில மாணவர்கள் உதவித்தொகையைப் பெறலாம். காதலிப்பவர்களின் உறவு வலுவடையும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் யோகம் உண்டு.

கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது தாய், குடும்ப வாழ்க்கை, வீடு, வாகனம், சொத்து ஆகியவற்றின் வீடாகும். எனவே இந்த புதன் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உங்கள் தாயின் ஆதரவு கிடைக்கும் மற்றும் அவருடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். சொத்து அல்லது வாகனம் வாங்க இது நல்ல நேரம். புதிய வேலையைத் தொடங்க சிறந்த காலம் இது.

துலாம்
துலாம் ராசியின் 3 வது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது உடன்பிறப்புகள், பொழுதுபோக்கு, குறுகிய தூரப் பயணம், தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றின் வீடாகும். இதனால் ஊடகம், எழுத்து துறை, ஆவணப்படுத்தல், ஆலோசனை, மார்கெட்டிங் போன்றவற்றில் இருப்பவர்கள் தங்கள் தகவல் தொடர்பு திறனால் மற்றவர்களை ஈர்த்து, எளிதில் சம்மதிக்க வைத்துவிடுவார்கள். உடன்பிறப்புகள் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் குறுகிய தூரப் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். உங்கள் தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது குடும்பம், சேமிப்பு, பேச்சு ஆகியவற்றின் வீடாகும். எனவே இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் திறம்பட மற்றவர்களுடன் பேசுவார்கள். உங்களின் பேச்சால் குடும்ப உறுப்பினர்களுடனான பிணைப்பு அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறுவார்கள். வியாபாரிகளுக்கும் இக்காலம் சிறப்பாக இருக்கும். ஜோதிடத்தின் மீது நாட்டம் உள்ள மற்றும் கற்றுக்கொள்ள விரும்பும் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் அதைத் தொடங்கலாம்.

தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கைக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்கும். விஞ்ஞானிகள், ஏற்றுமதி-இறக்குமதி, பேரம் பேசுபவர்கள், வங்கி, மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் இது. கூட்டுத் தொழில் மேம்படும் மற்றும் உங்கள் கூட்டாளியின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமான தம்பதிகள் தங்கள் மனைவியுடன் அமைதியான மற்றும் அன்பான உறவை அனுபவிப்பார்கள்.

மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது வெளிநாட்டு நிலம், தனிமைப்படுத்தப்பட்ட வீடு, மருத்துவமனை, செலவுகள், எம்என்சி போன்ற வெளிநாட்டு நிறுவனங்களைக் குறிக்கும் வீடு. எனவே இக்காலத்தில் மாணவர்களாகட்டும், பணிபுரிபவர்களாகட்டும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எம்என்சி நிறுவனங்களில் பணிபுரியும் அல்லது இறக்குமதி/ஏற்றுமதி தொழில்களில் ஈடுபடும் மகர ராசிக்காரர்கள் நல்ல நிலையில் இருப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிக செலவுகள் அல்லது பண இழப்பை சந்திக்க நேரிடும். எனவே பண விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது நிதி ஆதாயம், ஆசை, மூத்த உடன்பிறப்புகள், தந்தைவழி மாமன் ஆகியவற்றின் வீடாகும். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் மூத்த உடன்பிறப்புகள் மற்றும் தந்தைவழி மாமனின் ஆதரவு கிடைக்கும். திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்திற்காக கடந்த ஒரு வருடமாக செய்த கடின உழைப்பின் பலன்கள் இப்போது கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். காதலிப்பவர்கள் சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது தொழில் மற்றும் பணியிடத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் தொழில் வாழ்க்கையில் நற்பலன்கள் கிடைக்கும். இதனால் உங்களின் புகழும், அந்தஸ்தும் அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. வீட்டிற்கு புதிய வாகனம் அல்லது ஏதேனும் ஆடம்பரப் பொருட்களை வாங்க இது நல்ல காலமாக இருக்கும். வீட்டில் பூஜைக்காக செலவழிக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)