Just In
- 2 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தா...அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!
- 6 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வரவிற்கு மேல் அதிகமாக செலவு செய்ய நேரிடும்..
- 16 hrs ago
Pizza dosa recipe : பிட்சா தோசை
- 16 hrs ago
உங்க முடி நீளமா கருகருனு அடர்த்தியா வளர எலுமிச்சை சாறை இந்த 5 வழிகளில் யூஸ் பண்ணா போதுமாம்!
Don't Miss
- Finance
1160 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. 6% உயர்வில் டாக்டர் ரெட்டி..!
- Sports
மும்பைக்கு ஆதரவு அளிக்கும் கோலி.. மைதானத்திற்கு நேரில் செல்வோம் என குசும்பு.. ரோகித் காப்பாத்துப்பா
- Movies
12th Man movie Review...மோகன்லாலின் மிரட்டல் நடிப்பில் 12th man எப்படி இருக்கு?
- News
பாலியல் தொழிலாளர்களும் மனிதர்கள் தானே..! ஆதார் கார்ட் கொடுங்க.. அதிரடி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்..!
- Automobiles
350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு... போட்டிக்கு யாருமே இல்ல...
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரிஷப ராசியில் புதன் அஸ்தமனமாவதால் அடுத்த 17 நாட்கள் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் உஷாரா இருக்கணும்..
வேத ஜோதிடத்தில் தகவல் மற்றும் அறிவை புதன் குறிக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் வலுவான நிலையில இருந்தால், அவர் அறிவாளியாகவும், தகவல் தொடர்புகளில் புத்திசாலியாகவும், வலுவான தீர்ப்பு மற்றும் பகுப்பாய்வு சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார். அதுவே புதன் பலவீனமான நிலையில் இருந்தால், அவர் புத்திசாலித்தனம் மற்றும் படிப்பில் மோசமானவராக பகுப்பாய்வு இல்லாதவராக இருப்பார். ஆகவே ஒருவரது ஜாதகத்தில் புதன் இருக்கும் நிலையைப் பொறுத்து தான் ஒருவருக்கு கிடைக்கும் பலன்கள் உள்ளன.
இப்படிப்பட்ட புதன் தற்போது ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். ஆனால் இவர் 2022 மே 13 ஆம் தேதி மதியம் 12.56 மணிக்கு ரிஷப ராசியில் அஸ்தமனமாகி, 2022 மே 30 ஆம் தேதி மீண்டும் உதயமாவார். பொதுவாக கிரகங்கள் அஸ்தமன நிலையில் அதன் நற்பலன்களை வழஙகும் சக்தியை இழக்கும். ஆனால் புதன் ஏற்கனவே சூரியனுக்கு சற்று அருகில் இருப்பதால் அதன் விளைவு கடுமையாக இருக்காது. இதனால் பாதிப்பு ஓரளவாகவே இருக்கும். இப்போது ரிஷப ராசியில் அஸ்தமனமாகும் புதனால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் உங்கள் வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், பலன்களையும் பெறுவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். காதல் உறவைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் சிறப்பான நிலையில் இருப்பீர்கள். தொழில் வாழ்க்கையில் பெயரும், புகழும் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதியைப் பொறுத்தவரை, வரவு செலவு என இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர இணக்கம் இருக்கும். காதலிப்பவர்கள், காதல் உறவில் நேர்மறை உணர்வை அனுபவிப்பார்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் தொழில் ரீதியாக, இக்காலத்தில் சில சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் சராசரியாகவே இருக்கும். பெரிய வணிக ஒப்பந்தங்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை வாழ்க்கைத் துணையுடன் தகராறு அல்லது வாக்குவாதங்கள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், அமைதியாக இருங்கள் மற்றும் விஷயங்களை புத்திசாலித்தனமாக தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் தொழிலில் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். அதே வேளையில் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் மற்றும் இழப்பு என இரண்டுமே கலந்திருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உறவுகளில் நல்லிணக்கம் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி போன்ற பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் வேலை மாற்றம் அல்லது இடமாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. வணிகர்கள் கடுமையான போட்டி மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஆணவம் அல்லது ஈகோ பிரச்சினைகள் காரணமாக துணையுடன் வாக்குவாதங்கள் அல்லது மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில் குடும்ப நிலைமை மோசமாக வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் நீங்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வணிகர்கள் புதிய வணிக தொடர்புகளைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் சாதகமாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை முடிப்பதில் சில தடைகளை சந்திக்க நேரிடும். அதோடு சில சவால்களும், இலக்குகளும் உங்களுக்கு வழங்கப்படும். வணிகர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொண்டை வலியால் அவதிப்படலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அதே போல் சில கடினமான சூழ்நிலைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். வணிக கூட்டாளருடனான உறவில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, இது உங்கள் வணிகத்தின் உற்பத்தித்திறனில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் பணியிடத்தில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அதே போல் சில கடினமான சூழ்நிலைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். வணிகர்கள் விரும்பிய லாபத்தைப் பெற முடியாமல் போகும். உங்கள் வாழ்க்கை துணையுடன் ஈகோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் தொழிலில் சில சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க நீங்கள் சரியாக திட்டமிட வேண்டும். சொந்தமாக தொழில் செய்து கொண்டிருந்தால், சில பின்னடைவுகளால் இக்காலத்தில் உங்கள் தொழிலை விரிவுபடுத்த முடியாது. குடும்ப பிரச்சனைகள் காரணமாக உங்கள் உறவில் ஏற்ற தாழ்வுகளை காணலாம். முக்கியமாக மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் தொழிலில் சராசரி மற்றும் பயனுள்ள முடிவுகளைப் பெறுவீர்கள் வியாபாரிகளுக்கு இக்காலத்தில் லாபமோ, நஷ்டமோ என எதுவும் இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் திட்டங்களை ஒழுங்கமைப்பது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த காலத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தவறான புரிதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பாத வலியை சந்திக்கலாம்.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் வேலையில் மாற்றத்தைக் காணலாம். வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட குறைவான லாபத்தை நீங்கள் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் சில பிரச்சினைகள் ஏற்படலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் அமைதியாக இருந்து விஷயங்களைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, குறைவான நோயெதிர்ப்பு சக்தியினால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.