Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கபே காபி டே நிறுவனர் உடல் ஆற்றின் ஓரம் கண்டெடுப்பு... இறப்புக்கு காரணம் என்ன?
காபி டே நிறுவனர் சித்தார்த் இறந்து ஆற்றில் கிடந்து கண்டெடுக்கப்பட்டதன் காரணங்களைத் தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
காதலியுடன் தனிமையில் சந்திக்க வேண்டும், பிசினஸ் மீட்டிங், டென்ஷனா இருக்கு கொஞ்சம் ரெப்ஃரஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தாலே நம் நினைவுக்கு வருவது காபி டே தான்.

ஆனால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அந்த காபி டேயின் நிறுவனர் சித்தார்த் சில நாட்களுக்கு முன் இறந்திருக்கிறார். அவருடைய உடல் நேத்ராவதி ஆற்றங்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுடிருக்கிறது. அது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

உடல் கண்டெடுப்பு
மங்களூரில் உள்ள ஹோய்ஹி பஜாருக்கு அருகில் இருக்கிற நேத்ராவதி ஆற்றின் ஒரு ஓரப்பகுதியில் இருந்து நேற்று கபே காபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடல் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட போது, ஒட்டுமொத்த கர்நாடகாவே அதிர்ச்சிக்கு உள்ளானது.

அரசியல் மாற்றம்
கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தான் கபே காபி டே நிறுவன நிறுவனர் சித்தார்த். இவர் இதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார். சமீபத்தில் இவர் பிஜேபிக்கு மாறியிருந்த சமயத்தில் திடீரென இவருடைய வீட்டை வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தியது.

திடீர் மாயம்
இந்நிலையில் காரை எடுத்துக்குக் கொண்டு தன்னுடைய டிரைவரை ஓட்டச் சொல்லி சிக்மங்களூருக்கு சென்றிருக்கிறார். அதன்பின் டிரைவரை மங்களூருக்குச் செல்லும்படி கூறியிருக்கிறார். டிரைவரும் சென்றிருக்கிறார். அப்போது நேத்ராவதி ஆற்றுப்பாலத்தின் அருகே வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு போனில் பேசிக்கொண்டே நடந்து சென்றிருக்கிறார். டிரைவரும் காரின் அருகிலேயே காத்திருந்திருக்கிறார். வெகுநேரம் ஆகியும் காணவில்லை என்று போன் செய்திருக்கிறார். ஆனால் சித்தார்த்தின் போன் ஸ்விட்ச் ஆஃப். இப்படி திடீர் மாயம் ஆகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இறப்பு உறுதியானது
மாயமானவரை தேடிக்கொண்டிருந்த நிலையில் தான் அவருடைய உடல் ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எழுதிய கடிதம்
இந்நிலையில் அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கப்பட்டிருந்தது. அதில் அவர் தான் ஏராளமான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அதிலிருந்து விடுபட முடியாமல் சிரமப் படுவதுபோலவும் குறிப்பிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இவருடைய கடிதம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாக அரசியல் மற்றும் தொழில் அதிபர்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். தொழிலில் தான் தோற்றுவிட்டேன் என்று அவர் எழுதியிருப்பது பெரிய ஷாக்காக தொழிலதிபர்களுக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

என்ன காரணம்?
இப்படி நடந்ததற்கு காரணம் என்னவென்று சரியாகத் தெரியாத காரணத்தினால், தொழில் மற்றும் அரசியல் காரணங்கள், வருமான வரித்துறை வரி ஏய்ப்பு சம்பந்தப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட மன உளைச்சலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதனால் அவர் தற்கொலை கூட செய்திருக்கக்கூடும் என்று செய்திகள் வருகின்றன. எது எப்படியோ மன அழுத்தத்துக்குத் தீர்வு தற்கொலை ஆனாது என்பதை மன அழுத்தம் மற்றும் இறுக்கத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications