For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Maha Shivratri 2020: மகா சிவராத்திரி 2020: சிவனை நினைத்து விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்...

மகா சிவராத்திரி நாளில் விரதமிருந்து சிவனை வணங்கினால் பாவங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும். மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்த

|

மாசி மாதம் அமாவாசைக்கு முந்தைய நாள் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. தேய்பிறை சதுர்த்தசி நாள் சிவராத்திரியாக சிவனுக்கு உகந்த நாளாக கடைபிடிக்கப்படுகிறது. நவராத்திரி அம்பிகைக்கு உகந்த நாள் அது ஒன்பது நாட்கள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. சிவ ராத்திரி சிவனுக்கு உகந்த நாள். இந்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Maha Shivratri Date And Time Fasting Benefits

சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். பல சதுர்யுகங்கள் முடிந்து, பல கல்பங்கள் முடிந்து, இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள். தொடர்ந்து 12 சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும் என்று சிவனடியார்கள் கூறியுள்ளனர்.

MOST READ: இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க நம் முன்னோர்கள் சாப்பிட்டது இந்த நாட்டு உணவுகளை தான்...

மகா சிவராத்திரியன்று கண் விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவராத்திரி விரத பலன்கள்

சிவராத்திரி விரத பலன்கள்

நூறு அசுவமேத யாகம் செய்வது, பலமுறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது. சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை சாப்பிடலாம். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோவிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

எமபயம் நீக்கும்

எமபயம் நீக்கும்

சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால் நோய்கள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், உருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம்.

நித்திய சிவராத்திரி

நித்திய சிவராத்திரி

ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் ஒரு மாதத்திற்கு இரண்டு சிவராத்திரிகள் ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள் அவை வளர்பிறை சதுர்த்தசி,தேய்பிறை சதுர்த்தசி ஆகும் இது நித்திய சிவராத்திரி ஆகும். தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே பட்ச சிவராத்திரி ஆகும்.

யோக சிவராத்திரி

யோக சிவராத்திரி

திங்கட்கிழமையன்று சதுர்த்தசி திதி பகலும், இரவும் 60 நாழிகைகள் சேர்ந்து வந்தால், அது யோக சிவராத்திரி ஆகும். இந்த சிவராத்திரியை இவ் வருடம் வருகிறது. அதாவது,யோகியர் மறந்திடாத சிவராத்திரி ஆகும். அனைவரையும் யோகிகளாக மாற்ற கூடிய சிவராத்திரி. மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவு தான் மகாசிவராத்திரி. இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும் மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என்கிறார் அகத்தியர்.

பாவங்கள் நீக்கும் விரதம்

பாவங்கள் நீக்கும் விரதம்

சிவராத்திரி பூஜையால் பெண்களுக்கு இழைத்த துரோகம், பெண்களுக்கு செய்த சாபம், பெண்களுக்கு இழைத்த கொடுமைகள் நீங்கும். அதே போல, ஒரு பெண் தனது கணவனுக்கு துரோகம் செய்திருந்தால், தவறை உணர்ந்து திருந்தி, இந்த சிவராத்திரி பூஜையைச் செய்தால் கணவனுக்கு செய்த துரோகம் மறைந்துவிடும் என சிவ மஹா புராணம் கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Maha Shivratri Date And Time Fasting Benefits

In this article, we are given maha shivratri date and time and fasting benefits. Read on to know more...
Desktop Bottom Promotion