For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகா சிவராத்திரி 2020: உங்க குலதெய்வத்தை வீட்டில் தங்க வைக்க இதை கண்டிப்பாக செய்யுங்க...

மகா சிவராத்திரி திருநாள் இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 21ஆம் தேதியன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் சிவராத்திரி திருநாள் கொண்டாடப்பட்டாலும், அதிகம் கொண்டாடுவது தங்கள் குலதெ

|

குல தெய்வம் என்பது நம்முடைய முன்னோர்களால் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து பின்பற்றி வரும் வழிபாட்டு முறையாகும். குலதெய்வம் என்பது பெரும்பாலும் நாம் வசிக்கும் இடத்தில் இல்லாமல், காடுகளிலும், வயல்வெளிகளிலுமே இருக்கும். அதுவும் ஆடம்பரமாக இல்லாமல், எந்த உருவமும் இல்லாமல், கல்லாகவும், மரமாகவும் தான் காட்சியளிக்கும். இதைத்தான் நம்முடைய முன்னோர்கள் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். நம்முடைய குல தெய்வம் நம் வீட்டோடு தங்குவதற்கு சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.

Maha Shivratri 2020: How To Bring Our Home God To Our House

சந்தனம், குங்குமம், சுத்தமான விபூதி, சாம்பிரானி தூள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் விரலி மஞ்சள் துண்டு, அதோடு அடுப்புக்கரி என இந்த 6 பொருட்களையும் ஒன்று சேர்த்து ஒரு புத்தம் புதிய சிவப்பு துணியில் சிறிய மூட்டையாக கட்டி புதிய சிவப்பு நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். அந்த மூட்டையை நமது தலைவாசலின் உட்பக்கத்தில் மேல்புற சுவரில் ஆணி அடித்து அதில் மாட்டி வைத்து விடவேண்டும். ஒருமுறை இதை செய்து விட்டால் போதும், எந்த துர்தேவதைகளின் கட்டுக்குள் நமது குலதெய்வம் இருந்தாலும் சரி, அவை அனைத்தும் தானாகவே அறுந்து விழுந்து, குலதெய்வம் நம் வீட்டை தேடி வந்து விடும் என்பது நிச்சயம்.

MOST READ: சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்களை மகாசிவராத்திரியில் தரிசித்தால் கிடைக்கும் புண்ணியங்கள்!

மகா சிவராத்திரி திருநாள் இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 21ஆம் தேதியன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் சிவராத்திரி திருநாள் கொண்டாடப்பட்டாலும், அதிகம் கொண்டாடுவது தங்கள் குலதெய்வத்தை தான். தமிழகத்தின் வட மாவட்டங்களில் அன்றைய தினத்தில் பாரி வேட்டை நிகழ்ச்சியும், மயானக் கொல்லை நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெறும். அதே போல், தென் தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் குல தெய்வத்தை வழிபட வெளியூர்களுக்கு செல்வதுண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிம்மதி கிடைக்காது

நிம்மதி கிடைக்காது

ஒருவர் என்னதான் சமூகத்தில் அந்தஸ்தோடு இருந்தாலும் சரி, கோடீஸ்வரராக இருந்தாலும் சரி, அவருக்கு குலதெய்வத்தின் அருள் இல்லாவிட்டால் அவ்வளவுதான். எப்படி உப்பில்லாத உணவு குப்பைக்கு சமமானதோ, அது போலத்தான் குலதெய்வத்தின் அருள் இல்லாதவரின் நிலையும். அவரின் வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம், இல்வாழ்க்கையில் நிம்மதி, புத்திர பாக்கியம் என எதுவுமே பூரணமாக கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டேதான் இருக்கும்.

குலதெய்வத்தின் அருளாசி

குலதெய்வத்தின் அருளாசி

ஒருவர் என்னதான் பிசியாக ஆண்டு தோறும் நில்லாமல் உழைத்தாலும் கூட, ஆண்டுக்கு ஒரு முறையாவது தன்னுடைய குலதெய்வ கோவிலுக்கு போய் தரிசனம் செய்வது அவசியமாகும். அதே போல் வீட்டிலும் குலதெய்வத்தை முறையாக பூஜை செய்து கும்பிட்டு வரவேண்டும். அப்படி செய்து வந்தால் தான் அவருடைய குலதெய்வத்தின் பூரண அருளாசி அவருக்கும், அவருடைய சந்ததிகளுக்கும் தொடர்ந்து கிடைத்து வரும்.

பரிகாரமே கிடையாது

பரிகாரமே கிடையாது

அப்படி இல்லாமல், குலதெய்வத்தை மதிக்காமல், பணமே பிரதானம் என்று இருந்தால், அவர் என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் குலதெய்வத்தின் ஆசி கிடைக்காது. குலதெய்வத்தின் ஆசி இருந்தால் தான் மற்ற தெய்வங்களின் அருட்கடாட்ஷமும் அவருக்கு கிட்டும். அப்படி இல்லாவிட்டால், மற்ற தெய்வங்களும் ஒதுங்கி நின்று வேடிக்கை தான் பார்க்கும். எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும், அதன் பலன் பூஜ்யம் தான்.

காவல் தெய்வம்

காவல் தெய்வம்

பெரும்பாலானவர்கள், ஆண்டுக்கு ஒரு முறையோ, அல்லது அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதோ குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவதோடு, அந்த குலதெய்வத்தின் படத்தை வீட்டில் வைத்தும் பூஜை செய்து வருவார்கள். அப்படி செய்தால் அந்த குலதெய்வம் நம்முடைய வீட்டை காக்கும் காவல் தெய்வமாக இருப்பதோடு, நாம் எங்கு சென்றாலும் நம்மை பின்தொடர்ந்து வந்து நமக்கு எந்தவித ஆபத்தும் நெருங்காமல் நம்மை காத்து நிற்கும்.

குலதெய்வத்தை கட்டுப்படுத்தும் துர்சக்திகள்

குலதெய்வத்தை கட்டுப்படுத்தும் துர்சக்திகள்

அதே போல், நாம் குலதெய்வத்தை முறையாக வழிபட்டு வந்தாலும், சில ஏவல், பில்லி, சூனியம், சாத்தன் என கெட்ட சக்திகள் நமது குலதெய்வத்தின் கைகளையும் கண்களையும் கட்டிப்போட்டுவிடும். அப்போதும் குலதெய்வத்தால் நமக்கு எந்த உதவியும் செய்ய முடியாமல் போகும். அந்த துர்தேவதைகளின் கட்டுக்களில் இருந்து விடுபட்டு, நம்முடைய குலதெய்வம் நம் வீட்டுக்கு வந்து நமக்கு துணை நிற்க வேண்டுமானால் சில பொருடகளை நம்முடைய வீட்டு வாசலில் கட்டினால் போதும்.

சிவப்பு மூட்டை

சிவப்பு மூட்டை

சந்தனம், குங்குமம், சுத்தமான விபூதி, சாம்பிரானி தூள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் விரலி மஞ்சள் துண்டு, அதோடு அடுப்புக்கரி என இந்த 6 பொருட்களையும் ஒன்று சேர்த்து ஒரு புத்தம் புதிய சிவப்பு துணியில் சிறிய மூட்டையாக கட்டி புதிய சிவப்பு நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஒரு சிறிய பந்து அளவில் இருந்தாலே போதுமானது.

ஓடிவரும் குலதெய்வம்

ஓடிவரும் குலதெய்வம்

பின்பு, அந்த மூட்டையை நமது தலைவாசலின் உட்பக்கத்தில் மேல்புற சுவரில் ஆணி அடித்து அதில் மாட்டி வைத்து விடவேண்டும். அப்படி செய்யும்போது, அந்த மூட்டையானது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாமல் இருக்குமாறு மாட்டுவது அவசியமாகும். ஒருமுறை இதை செய்து விட்டால் போதும், எந்த துர்தேவதைகளின் கட்டுக்குள் நமது குலதெய்வம் இருந்தாலும் சரி, அவை அனைத்தும் தானாகவே அறுந்து விழுந்து, குலதெய்வம் நம் வீட்டை தேடி வந்து விடும் என்பது நிச்சயம்.

மனதில் நிம்மதி குடியேறும்

மனதில் நிம்மதி குடியேறும்

குலதெய்வம் நம்முடைய வீட்டுக்குள் வந்துவிட்டது என்பதை உறுதி செய்ய, நம்முடைய மற்றும் நமது குடும்பத்தினரின் மனதில் ஒருவித மனநிம்மதி தெரிய ஆரம்பிக்கும். வீட்டில் அது வரையிலும் நடக்காமல் இருந்து வந்த சுபகாரியங்கள் தானாகவே நடக்கத் தொடங்கிவிடும். அதன் மூலம் நமது குலதெய்வத்தின் அருளை நாம் புரிந்து கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Maha Shivratri 2020: How To Bring Our Home God To Our House

Kuladeivam is god that is taking care of our generation. Sandalwood, saffron, pure Vibhuti, sambrani powder, turmeric charcoal together with these 6 ingredients are to be tied in a fresh new red cloth into a small bundle of fresh new red thread. The bundle should be nailed to the top wall of the inside of our main door and stuck in it.
Story first published: Wednesday, February 19, 2020, 10:56 [IST]
Desktop Bottom Promotion