For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குலதெய்வம் உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க என்ன செய்யணும் தெரியுமா?

தீபத்தை ஏற்றும்போது, நம்முடைய குலதெய்வத்தை மனதில் நினைத்து உச்சரித்துக்கொண்டே ஏற்றவேண்டும். அப்படி செய்தால் தான் நம்முடைய குலதெய்வம் என்றைக்கும் நம்முடைய வீட்டில் தங்கி பரிபூரண அருளை வழங்கும்.

|

இலுப்பை எண்ணெய்க்கு அனைத்து கடவுள்களின் தெய்வீக சக்தியையும் தன் பக்கம் ஈர்க்கும் தன்மை உண்டு. நம்முடைய பூஜை அறையில், மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கில், ஒரு ரூபாய் நாணயத்தை அதில் போட்டு, பின் அதில் இலுப்பை எண்ணெயை ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து திரித்து, கிழக்கு பக்கம் நோக்கி இருக்குமாறு அகல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும். தீபத்தை ஏற்றும்போது, நம்முடைய குலதெய்வத்தை மனதில் நினைத்து உச்சரித்துக்கொண்டே ஏற்றவேண்டும். அப்படி செய்தால் தான் நம்முடைய குலதெய்வம் என்றைக்கும் நம்முடைய வீட்டில் தங்கி நமக்கும் நம்முடைய சந்ததிக்கும் பரிபூரண அருளை வாரி வழங்கி வரும் என்பது ஐதீகம்.

Kuladeivam Arul In Your Home Light Iluppai Lamp Oil

இந்துக்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும், பிடித்த கடவுள் என்று ஒருவர் இருப்பார். தங்கள் சமுதாயத்திற்கு என ஒரு கடவுளை கும்பிட்டு வருவார்கள். அதோடு, தங்கள் குடும்பத்திற்கு என ஒரு குலதெய்வமும், தங்கள் குடும்பத்தோடு தொடர்புடைய ரத்த உறவினர்களுக்கு என ஒரு குலதெய்வமும் இருப்பதுண்டு. அப்படி இருந்தால், என்றாவது ஒரு நாளைக்கோ அல்லது குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்த என என்றைக்காவது ஒரு நாள் மட்டும் கும்பிட்டுவிட்டு வருவதுண்டு.

MOST READ: பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க இந்த பரிகாரம் பண்ணுங்க..

தங்களுக்கு பிடித்தமான கடவுள் என்றால், தினமும் போய் கும்பிடு போட்டு வருவார்கள். தங்களுடைய குடும்பத்திற்கு உரிய குலதெய்வம் என்றால் எப்போதாவது போய் கும்பிடுவது என்ற பழக்கத்தையே வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ குலதெய்வ கோவிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு வருவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒப்புக்கு சப்பானி கும்பிடு

ஒப்புக்கு சப்பானி கும்பிடு

பெரும்பாலானவர்கள், குலதெய்வ கோவிலுக்கு செல்வதோடு நம் கடமை முடிந்தது என்று நினைத்து விட்டுவிடுவதுண்டு. தங்களின் வீடுகளில் குலதெய்வத்தை வைத்தோ அல்லது தினமும் பூஜையறையில் நின்று சாமி கும்பிடும்போது, குலதெய்வத்தை நினைத்தோ கும்பிடுவது கிடையாது. நானும் சாமி கும்பிடுகிறேன் பேர்வழி என்ற பேரில் ஒப்புக்கு சாமியை கும்பிட்டுவிட்டு நடையை கட்டுவார்கள்.

குலதெய்வ அருள்

குலதெய்வ அருள்

அப்படியே குலதெய்வத்தை நினைத்து சாமி கும்பிட்டாலும் கூட, முறையாக குலதெய்வத்திற்கு உகந்த எண்ணெயை ஊற்றி தீபமேற்றி வழிபடமாட்டார்கள். தீபமேற்றுவதற்கு ஏதாவது தீப எண்ணெயையோ அல்லது தங்களுக்கு பிடித்த எண்ணெயையோ ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டு வருவார்கள். அப்படி வழிபட்டு வந்தாலும் தங்களுக்கு குலதெய்வத்தின் அருள் கிடைக்கவில்லையே என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.

குலதெய்வத்திற்கு பிடித்தமான பூஜை

குலதெய்வத்திற்கு பிடித்தமான பூஜை

என்னதான் குலதெய்வத்தை விழுந்து விழுந்து கும்பிட்டாலும், நமக்கு நல்லவழி பிறக்கமாட்டேன்கிறதே, எப்போது பார்த்தாலும் பணப்பிரச்சனை தீரவேமாட்டேன்கிறதே என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். குலதெய்வத்தின் அருளாசி நமக்கு கிடைக்க வேண்டுமானால், முதலில் நாம் நம்முடைய குலதெய்வத்தை திருப்திப்படுத்த வேண்டும். அதற்கு குலதெய்வத்திற்கு பிடித்த முறையில் நாம் பூஜை செய்து, தீபமேற்றி வழிபட வேண்டியது அவசியம்.

குலதெய்வத்திற்கு பிடித்த எண்ணெய்

குலதெய்வத்திற்கு பிடித்த எண்ணெய்

ஒவ்வொரு தெய்வத்திற்கு என ஒரு குறிப்பிட்ட மலர் எப்படி பிடித்தமானதாக உள்ளதோ, அதுபோலவே, நம்முடைய குலதெய்வத்திற்கு என்று பிடித்தமான எண்ணெய் ஒன்றும் உள்ளது. அந்த எண்ணெயை விளக்கில் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் தான் நம்முடைய குலதெய்வத்தின் பரிபூரண அருளாசி நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் கிட்டும். பெரும்பாலான குலதெய்வத்திற்கு பிடித்தமான எண்ணெய் என்றால் அது இலுப்பை எண்ணெய் தான்.

தீபமேற்றும் முறை

தீபமேற்றும் முறை

இலுப்பை எண்ணெய்க்கு அனைத்து கடவுள்களின் தெய்வீக சக்தியையும் தன் பக்கம் ஈர்க்கும் தன்மை உண்டு. நம்முடைய பூஜை அறையில், மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கில், ஒரு ரூபாய் நாணயத்தை அதில் போட்டு, பின் அதில் இலுப்பை எண்ணெயை ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து திரித்து, கிழக்கு பக்கம் நோக்கி இருக்குமாறு அகல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.

பிரம்ம முகூர்த்த நேரம்

பிரம்ம முகூர்த்த நேரம்

தீபத்தை ஏற்றும்போது, நம்முடைய குலதெய்வத்தை மனதில் நினைத்து உச்சரித்துக்கொண்டே ஏற்றவேண்டும். அதோடு, இந்த இலுப்பை எண்ணெய் தீபமானது நம்முடைய குலதெய்வத்திற்கு மட்டுமே என்ற எண்ணத்தோடு தான் ஏற்றவேண்டும். இலுப்பை எண்ணெய் தீபத்தை கூடுமானவரை, பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணியிலிருந்து 5:30 மணிக்குள் ஏற்றுவது சிறப்பாகும். அப்படி இல்லாவிட்டால், காலை 7 மணிக்குள் ஏற்றி வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும். அப்படி செய்தால் தான் நம்முடைய குலதெய்வம் என்றைக்கும் நம்முடைய வீட்டில் தங்கி நமக்கும் நம்முடைய சந்ததிக்கும் பரிபூரண அருளை வாரி வழங்கி வரும் என்பது ஐதீகம்.

குபேரனின் அருளாசி

குபேரனின் அருளாசி

பெரும்பாலான சிவன் கோவில்களில் இலுப்பை எண்ணெயில் தான் விளக்கை ஏற்றி வருகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில், குத்து விளக்கில் இலுப்பை எண்ணெயை ஊற்றி வெள்ளைத் திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் அஷ்டலட்சுமியின் அருளாசி கிடைக்கும். அதே போல், மஞ்சள் திரிபோட்டு விளக்கேற்றி வழிபட்டால் குபேரனின் அருளாசி கிட்டும். சிவப்பு திரிபோட்டு தீபமேற்றி வழிபட்டால் நம்முடைய அனைத்து கடன்களும் விரைவில் தீர்ந்து விடும்.

கஷ்டமும் வராமல் காப்பாற்றும்

கஷ்டமும் வராமல் காப்பாற்றும்

நாம் எந்த தெய்வத்தை வழிபட மறந்தாலும் சரி, நம்முடைய குலதெய்வத்தை வழிபட மறக்கக்கூடாது, உதாசீனப்படுத்தவும் கூடாது. காரணம், நம்முடைய குலதெய்வம் தான், நம்மையும் நம் குடும்பத்தையும், நம் சந்ததிகளையும் என்றைக்கும் கண்ணும் கருத்துமாக இருந்து எந்தவிதமான ஆபத்தும் நேராமல், கஷ்டமும் நேராமல் காப்பாற்றி கரைசேர்க்கும் தெய்வம். குலதெய்வத்தை மறந்தால் அது நமக்கும் நம்முடைய சந்ததிக்கும் நல்லதல்ல என்பதை மனதில் கொள்வது அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kuladeivam Arul In Your Home Light Iluppai Lamp Oil

The oil of iluppai has the divine power of all the gods to attract to it. In our pooja room, we should put an one Rupee coin in an earthen lamp made of mud, and then pour iluppai oil and twist the two strands together and light the lamp to the east. When loading the torch, we should bear in mind our Goddess. If we do so, it will be a blessing for us and our descendants to have the perfect blessing of our Goddess forever and ever.
Story first published: Monday, February 3, 2020, 12:39 [IST]
Desktop Bottom Promotion