சர்வதேச யோகா தினம் 2022: மலச்சிக்கல் பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் யோகாசனங்கள்!

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுகளை உண்பதோடு, உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டியது அவசியம்.

வாழ்நாளில் அவ்வப்போது சந்திக்கும் பிரச்சனை தான் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் பல காரணங்களால் ஒருவருக்கு வரக்கூடும். மலச்சிக்கல் ஏற்பட்டால் எந்த ஒரு செயலையும் நிம்மதியாக செய்ய முடியாமல், மிகுந்த அவஸ்தையை சந்திக்க வேண்டியிருக்கும். மலச்சிக்கலானது மோசமான குடலியக்கம் அல்லது செரிமான பிரச்சனைகளால் ஏற்படும். அதோடு இன்று பலரும் ஜங்க் உணவுகளை அதிகம் வாங்கி சாப்பிடுகின்றனர். இது செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளாகும். அதுமட்டுமின்றி, சதா எந்நேரமும் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தவாறே தினத்தை கழிக்கிறோம். இதனால் போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாத காரணத்தினாலும் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.

International Yoga Day: Simple Yoga Poses For Instant Constipation Relief

எனவே மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுகளை உண்பதோடு, உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டியது அவசியம். யோகா மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபட உதவும். அதோடு இது அனைவராலும் எளிதில் செய்யக்கூடியது.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. நாம் இப்போது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் சில எளிய யோகாசனங்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புஜங்காசனம்

புஜங்காசனம்

யோகாசனங்களில் புஜங்காசனம் செய்வது மிகவும் எளிது மற்றும் பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த ஆசனம் செரிமான பாதையின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, பசியை நன்கு தூண்டிவிடும். மேலும் இது வாய்வுத் தொல்லையில் இருந்தும் விடுவிக்கும். ஆனால் இந்த ஆசனத்தை கர்ப்பிணிப் பெண்கள், அல்சர் நோயாளிகள், இதய பிரச்சனை உள்ளவர்கள் செய்யக்கூடாது. அதோடு, அடிவயிற்றில் காயங்களைக் கொண்டவர்களும் தவிர்க்க வேண்டும்.

செய்முறை:

செய்முறை:

* படத்தில் கொடுக்கப்பட்டவாறு, முதலில் தரையில் குப்புறப் படுக்க வேண்டும்.

* பின் முழங்கால்கள் ஒன்றையொன்று தொடும் வகையில் கால்களை நீட்டி ஒன்றாக இணைத்து வைக்கவும். ஒருவேளை முதுகு வலி இருந்தால், கால்களுக்கு இடையில் 1-2 அடி இடைவெளி விடுங்கள்.

* பின்பு உள்ளங்கையை மார்பு பகுதியை ஒட்டியவாறு தரையில் ஊன்றி வைக்க வேண்டும்.

* பிறகு மூச்சை உள்ளிழுத்து, உடலை மேல்நோக்கி உயர்த்தவும். அப்போது எடை அனைத்தும் கைகளிலும், தொடைகளிலும் விழ வேண்டும்.

* முடிந்த அளவு கழுத்தை பின்னோக்கி சாய்க்க வேண்டும்.

* இந்நிலையில் 10-60 நொடிகள் மூச்சை வைத்திருங்கள். பின்னர் பழைய நிலைக்கு திரும்பும் போது மூச்சை வெளிவிடுங்கள்.

* இப்படி 3-5 முறை செய்யுங்கள்.

அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

இந்த ஆசனம் ஒட்டுமொத்த முதுகெலும்பையும் வலிமையாக்குகிறது. இது அடிவயிற்று தசைகளை மசாஜ் செய்வது, செரிமான அமில சுரப்பை ஒழுங்குபடுத்துவதைத் தவிர, இந்த ஆசனம் தொப்புள் சக்கரத்தை தூண்டுகிறது. கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலங்களில் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. அதேப் போல் இதயம் மற்றும் முதுகெலும்பு நோய் உள்ளவர்களும் செய்யக்கூடாது.

செய்முறை:

செய்முறை:

* படத்தில் உள்ளவாறு, முதலில் கால்களை நேராக நீட்டி உட்கார்ந்து கொள்ளுங்கள்.

* இடது பிட்டத்தின் பக்கவாட்டில் வலது பாதத்தைக் கொண்டு வந்து வளைக்கவும்.

* பின் இடது முழங்காலுக்கு வெளியே வலது காலை கொண்டு வாருங்கள். முதுகெலும்பு மற்றும் முழங்கைகளை நேராக நிமிர்த்தி வைத்திருக்கும் போது, தரையில் கால்களை தொட வேண்டும்.

* மூச்சை வெளியே விட்டு மேல் உடலை சரியான நிலையில் திருப்புங்கள். உங்கள் வலது கால்களை இடது கையால் பிடித்து, உங்கள் வலது கையை உங்களுக்கு பின்னால் வைக்கவும்.

* இப்படியே 20-30 நொடிகள் சாதாரணமாக சுவாசித்து இருங்கள். பின் சாதாரண நிலைக்கு திரும்புங்கள்.

பச்சிமோத்தாசனம்

பச்சிமோத்தாசனம்

இந்த ஆசனம் செய்யும் போது தலை முதல் கால் வரை ஒட்டுமொத்த உடலும் ஈடுபடும். இந்த ஆசனம் அடிவயிற்று தசைகளை வலிமையாக்குவது மற்றும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் குறைக்க உதவும். இந்த ஆசனத்தை கர்ப்பிணிகள், ஆஸ்துமா நோயாளிகள் செய்யக்கூடாது.

செய்முறை:

செய்முறை:

* படத்தில் காட்டியபடி, முதலில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்.

* பின் கால்களை நேராக நீட்டி உட்காருங்கள்.

* மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளை மேலே உயர்த்தி, உடலை லேசாக பின்னோக்கி வளையுங்கள்.

* பின்பு மெதுவாக மூச்சை வெளியே விட்டுக் கொண்டு, முன்னோக்கி கைகளால் பாத விரல்களை தொட முயற்சி செய்யுங்கள். அதே சமயம் தலையால் முழங்காலைத் தொட முயற்சியுங்கள்.

* 30 நொடிகள் அப்படியே இருந்து, பின் பழைய நிலைக்கு திரும்புங்கள். இவ்வாறு 3 முறை செய்யுங்கள்.

சலபாசனம்

சலபாசனம்

சலபாசனம் மற்ற ஆசனங்களைப் போல் இல்லாமல், சரியான தோரணைப் பெற சில குறிப்பிட்ட இயக்கம் தேவைப்படுகிறது. இந்த ஆசனத்தின் போது முதுகெலும்புகளை நீட்டுவதன் மூலம் வயிற்று தசைகள் வலிமையாகிறது. இந்த ஆசனம் கீழ் உடலை குறித்து வைத்து செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த ஆசனம் செய்யும் போது, சில நெகிழ்வு சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். ஆனால் போகப் போக சரியாகிவிடும். இந்த ஆசனத்தை ஸ்லிப் டிஸ்க் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் செய்யக்கூடாது.

செய்முறை:

செய்முறை:

* படத்தில் காட்டப்பட்டவாறு, முதலில் தரையில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் தலையை மேலே தூக்கி பின்னோக்கி உயர்த்த வேண்டும்.

* பின்பு மூச்சை உள்ளிழுத்தவாறு கால்களை மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.

* 20 நொடிகளுக்கு பிறகு மூச்சை வெளிவிட்டவாறு கால்களை கீழே கொண்டு வர வேண்டும்.

* இப்படி இரண்டு முறை செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion