For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச குடும்ப தினம் எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

சர்வதேச குடும்ப தினம் மே 15, 2020 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக அமைதி கூட்டமைப்பு ஆகியவை இந்த கொண்டாட்டத்திற்கு பின் இருந்து செயல்படும் நிறுவனங்களாகும்.

|

சமூக கட்டமைப்பின் ஒரு சிறிய உருவாக்கம் குடும்பம். மேலும் குடும்ப அமைப்பு என்பது சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். ஒரு குடும்ப அமைப்பானது ஒரு தனி நபரின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான பாதுகாப்பான சூழ்நிலையை வகுத்துக் கொடுக்கிறது. மேலும் வாழ்நாள் முழுக்க ஒரு ஆதரவைத் தருகிறது.

International Day of Families 2020 – History and Significance

சர்வதேச குடும்ப தினம் மே 15, 2020 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக அமைதி கூட்டமைப்பு ஆகியவை இந்த கொண்டாட்டத்திற்கு பின் இருந்து செயல்படும் நிறுவனங்களாகும். பல்வேறு நாடுகள் இந்த நிறுவனத்திற்கு பக்க பலமாக இருந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்வதேச குடும்ப தினத்தின் வரலாறு

சர்வதேச குடும்ப தினத்தின் வரலாறு

1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரங்களையும், சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கான அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடும்ப அமைப்பின் ஸ்திரத்தன்மையையும் கட்டமைப்பையும் பாதிக்கும் மாறிவரும் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குடும்ப தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சமூகத்தின் முக்கிய அங்கமாக மற்றும் மத்திய அங்கமாக இருப்பது குடும்ப அமைப்பு என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது

சர்வதேச குடும்ப தினம் எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

சர்வதேச குடும்ப தினம் எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

சர்வதேச குடும்ப தினத்தை கொண்டாட இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு மற்றும் இந்த அமைப்பை எதிர்மறையாக பாதிக்கும் பல்வேறு பாதிப்புகள்.

குடும்ப அமைப்பு என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூகத்தின் ஒரு முக்கிய சக்தியாக உறுதி செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் பற்றியும், அந்த பாதிப்பை சரிசெய்ய தனி நபர், சமூகம் மற்றும் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் இந்த நாளில் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. வலிமைமிக்க குடும்ப அமைப்பு ஒரு சமூகத்தையும் நாட்டையும் எந்த வகையில் வலிமையடைய உதவுகிறது என்பதையும் இந்த தினம் வெளிப்படையாக உணர்த்துகிறது.

சர்வதேச குடும்ப தினம் - சின்னம்

சர்வதேச குடும்ப தினம் - சின்னம்

ஒரு பச்சை வட்டத்திற்குள் சிவப்பு நிறத்தில் வீட்டின் உருவம் மற்றும் அந்த வட்டத்திற்குள் ஒரு இதயம் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த சக்திமிக்க சின்னம் எல்லா வயதினருக்கும் குடும்ப அமைப்பு ஆதரவுமிக்க மற்றும் பாதுகாப்புமிக்க சூழ்நிலையை தருகிறது என்பதை வலியுறுத்துகிறது.

நாடு முழுவதும் சர்வதேச குடும்ப தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது ?

நாடு முழுவதும் சர்வதேச குடும்ப தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது ?

உலகின் பல்வேறு இடங்களில் இந்த நாள் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. சில சமூகத்தில் பொதுத்துறை அதிகாரிகள் பல்வேறு கலந்துரையாடல் மற்றும் விவாதங்கள் நடத்தி குடும்பங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றி பேசி வருகின்றனர்.

சில நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கிய கருவின் அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். தனி நபர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இந்த நாளை கொண்டாடி மகிழலாம். உலகின் பல்வேறு அரசாங்கம் இந்த நாளை கொண்டாடினாலும் இது ஒரு பொது விடுமுறை நாளல்ல.

பல்வேறு பெரிய நிறுவனங்களும், இந்த நாளை கொண்டாடி வருகின்றன. குடும்பத்தினரிடையே அன்பை அதிகரிக்கவும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி பேசி அதனை தீர்ப்பதும் இந்த நாளைக் கொண்டாடுவதன் அடிப்படை நோக்கமாகும். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் குடும்பத்தினருடன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இந்த நாளைக் கொண்டாடுகின்றன. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுகள், இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி போன்றவை இடம் பெறுகின்றன .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

International Day of Families 2020 - History and Significance

Want to know the history and significance of international day of families? Read on...
Desktop Bottom Promotion