For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக பேட்மிண்டன் சாம்பியன் சரித்திர நாயகி சிந்து... சில சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ...

உலக பேட்மிண்டன் தொடரில் இதற்கு முன் சாம்பியனாக இருந்த வீராங்கணையை தோற்கடித்து நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த பிவி சிந்து பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றித் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

By Mahibala
|

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வந்தது. இதில் ஏற்கனவே நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் உலக சாம்பியன் வீராங்கணையான ஜப்பானின் நசோமி ஒகுஹாராவைத் தோற்கடித்து உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் சிந்து.

PV Sindhu

இந்தியாவை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறித்து, 24 வயதில் இந்தியாவின் 24 கேரட் தங்கமாகத் திகழும் சிந்துவைப் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலக சாம்பியன்ஷிப் தொடர்

உலக சாம்பியன்ஷிப் தொடர்

உலக பேட்மிண்டன் இறுதித்தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதித்தொடரைப் பொருத்தவரையில் உலக அளவில் தரவரிசைப் பட்டியலில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த இறுதிச்சுற்றில் நம்பர் சாம்பியனாக இருக்கும் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை (Nozomi Okuhara) என்பவரை எதிர்கொண்டு, 21 - 7, 21 - 7 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று முதன்முதலாக உலக சாம்பியன் பட்டத்தை இந்தியாவுக்காக பெற்றுத் தந்திருக்கிறார்.

MOST READ: வேண்டா வெறுப்பாக உறவில் ஈடுபடுகிறவர்களை எப்படி கண்டுபிடிப்பது? (ஆண்- பெண் இருவருக்கும்)

தலைவர்கள் பாராட்டு

தலைவர்கள் பாராட்டு

இந்த மாபெரும் வெற்றி குறித்து அரசியல் தலைவர்களும், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் வாழ்த்துச் செய்திகளைக் குவித்த வண்ணம் இருக்கிறார்கள். தற்போதைய வெற்றி மட்டுமல்லாமல் பிவி சிந்துவின் ஒலிம்பிக் வெற்றியும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சமயங்களில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஸ்டாலின் வாழ்த்து

ஸ்டாலின் வாழ்த்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதித்தொடரில் உலக சாம்பியன் பட்டம் வென்ற உடனேயே முதல் ஆளாக முஃக.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார். அதில் அவர் "பிவி. சிந்துவின் வெற்றி வருங்கால இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கும். அவர் வரும் காலங்களில் பல வெற்றிகளைப் பெற நான் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியாவை மீண்டும் பெருமை கொள்ளச்செய்த பிவி சிந்துவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். பிவி சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கு பெரும் ஊக்கமளிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நம்பர் ஒன்

நம்பர் ஒன்

உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்ற முதல் இந்தியர், முதல் பெண் என்ற சரித்திர சாதனையைப் பெற்றிருக்கிறார்.

MOST READ: பெண்கள் மெனோபஸ்க்கு பிறகும் கலவியில் இன்பம் பெற முடியுமா? இதோ தெரிஞ்சிக்கங்க...

சாம்பியன்ஷிப் தொடர்

சாம்பியன்ஷிப் தொடர்

1977 ஆம் ஆண்டு தான் முதன்முதலாக உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடத்தப்பெற்றது. அந்த காலகட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும். 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

42 ஆண்டுக்குப்பின்

42 ஆண்டுக்குப்பின்

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் ஆரம்பிக்கப்பட்டு 42 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்த 42 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றில் முதல்முறையாக தங்கம் வென்று, இந்தியாவின் பெயரை அந்த சரித்திரப் பக்கங்களில் எழுதியிருக்கிறார் சிந்து.

சைவப் பிரியர்

சைவப் பிரியர்

சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த். இவர் பயிற்சி கொடுக்கிற பொழுது அசைவ உணவின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, உடல் வலிமை பெற வேண்டுமானா்ல அசைவ உணவு தன்னுடைய வீரர்களுக்கு அவசியம் என்று உணர்த்தியிருக்கிறார். இவருடைய குழுவில் இருக்கிறவர்களில் பெரும்பாலானோர் சைவ உணவுப் பிரியர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆனால் அசைவ உணவின் தேவையை வலியுறுத்தி அதை பின்பற்றவும் வைத்திருக்கிறார். ஆனால் சிந்துவும் சைவ உணவுப் பிரியை தான் என்றாலும் அவருடைய பெற்றோர்களும் விளையாட்டுத் துறை சார்ந்தவர்களாக இருப்பதால் அவர் எடுத்துக் கொள்ளும் உணவின் மீது அதிக அக்கறை காட்டியிருக்கிறார்.

கருணாநிதி வாழ்த்து

கருணாநிதி வாழ்த்து

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற போது திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் சிந்துவுக்கு என்னுடைய இதயமார்ந்த வாழ்த்துக்கள் என்று வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். சிந்துவின் விளையாட்டுத் திறம் பற்றி தன்னுடன் இருப்பவர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமை கொள்வாராம்.

திருப்பதியில் எடைக்கு எடை இனிப்பு

திருப்பதியில் எடைக்கு எடை இனிப்பு

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்து தன்னுடைய 68 கிலோ எடைக்கு நிகராக, 68 கிலோ வெல்லத்தை திருப்பதி வெங்கடாஜலபதிக்குக் காணிக்கையாகச் செலுத்தினார்.

MOST READ: எலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...

சச்சின் கொடுத்த பி.எம்.டபிள்யூ

சச்சின் கொடுத்த பி.எம்.டபிள்யூ

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கும் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகிய நால்வருக்கும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பி.எம்.டபுள்.யூ. கார்களை வழங்கினார். கார்களை பணம் கொடுத்து வாங்கிக் கொடுத்த புரவலர் தொழிலதிபர் சாமுண்டேஷ்வர்நாத்.

சேலையில் காளி கோவிலில்...

சேலையில் காளி கோவிலில்...

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு ஹைதராபாத்தில் தன்னுடைய ஊரில் இருக்கும் காளி கோவிலுக்கு புடவை அணிந்து சென்று சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடத்தி, தன்னுடைய வெற்றிக்கான நன்றியை செலுத்தினார்.

சிந்துவின் ரசிகரான சூப்பர் ஸ்டார்

சிந்துவின் ரசிகரான சூப்பர் ஸ்டார்

பல கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தன்னை பிவி சிந்துவின் பெரும் ரசிகர் என்று கூறியிருக்கிறார். இது குறித்து சிந்துவின் தாயார் கண்ணீர் மல்க அவருக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

கேல் ரத்னா விருது

கேல் ரத்னா விருது

ரியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவுடன் விளையாட்டு வீரர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டார். அதோடு மட்டுமல்ல, இந்திய அரசாங்கத்தால் பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

உதவி கலெக்டர்

உதவி கலெக்டர்

ஆந்திர அரசாங்கம் இவரைப் பெருமைப்படுத்தும் வகையில், குரூப் 1 பதவியான துணை மாவட்ட ஆட்சியர் (Deputy Collector) பொறுப்பை வழங்கியது.

சந்திரபாபு நாயுடுவுடன் பேட்மிண்டன்

சந்திரபாபு நாயுடுவுடன் பேட்மிண்டன்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

MOST READ: டாய்லெட் சீட் மேலே தூக்கிட்டு பயன்படுத்தணுமா இல்ல கீழ வெச்சு பயன்படுத்தணுமா?

சல்மான் கானும் சிந்துவும்

சல்மான் கானும் சிந்துவும்

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் சிந்து விளையாடிக் கொண்டிருந்ததை சல்மான் கான் தன்னுடைய தாயுடன் அமர்ந்து டீவியில் பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது சிந்து வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றதும், சல்மான் மகிழ்ச்சியில் தன்னுடைய தாயிடம் சொன்னாராம், "நான் ஏற்கனவே சிந்துவுடன் சேர்ந்து போட்டா எடுத்திருக்கிறேன்" என்று னேந்தமாக அந்த போட்டோவை தன் தாயாரிடம் காட்டினாராம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Moments of PV Sindhu Badminton World Champion

After silver medals in two successive editions, Sindhu becomes India’s first world champion in badminton; power-smashes Okuhara into submission.
Story first published: Monday, August 26, 2019, 13:44 [IST]
Desktop Bottom Promotion