For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெலுங்கான என்கவுண்டர் போலவே தமிழகத்தில் நடந்த என்கவுண்டர் பற்றி தெரியுமா?

உலகளவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

|

உலகளவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதை நினைத்து இந்தியராய் பிறந்த அனைவரும் வெட்கப்பட வேண்டும். பெண்களை தெய்வமாக வழிப்படும் இந்நாட்டில், அதே பெண்களை வெறும் சதையும், தோலும் கொண்ட ஒரு உருவமாக மட்டும் பார்க்கும் ஆண்களும் இருக்கிறார்கள். 2012ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற பெண் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இறந்தார். இது இந்தியாவில் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் உலகளவில் பேசப்பட்டது.

Hyderabad Rapists Shot Dead In Encounter by Telangana Police

அதை தொடர்ந்து, கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக இழைக்கபடும் பாலியல் வன்கொடுமைகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா மூன்று நாட்கள் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு கலாச்சாரங்கள், உணவு, உடை என மாறுபட்டியிருந்தாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மட்டும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தெலுங்கான பெண் மருத்துவர்

தெலுங்கான பெண் மருத்துவர்

தெலுங்கான மாநிலம் மெஹபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர், கடந்த 27ஆம் தேதி பணி முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மர்மநபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நான்கு பேர் கைது

நான்கு பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக, முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேரை கைது செய்தது தெலுங்கான காவல் துறை. அவரிகளிடம் மேற்கொண்ட விசாரணையில், நீண்ட நாட்களாக திட்டுமிட்டு இதை செய்துள்ளதாக தெரிவித்தனர்.

MOST READ: உங்கள் காதலனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி?

எரித்துக்கொலை

எரித்துக்கொலை

ஹைதராபாத் புறநகர் பகுதியான ஷாத்நகர் அருகே தினமும் அப்பெண் டோல்கேட்டை கடப்பதை கண்ட சிலர் வேண்டுமென்றே அவரின் வாகனத்தை பஞ்சர் செய்துள்ளனர். இதையடுத்து, அப்பெண்ணுக்கு உதவுவது போல சென்று, அவரை அங்கிருந்து கடத்திச் சென்று வாயில் மதுவை ஊற்றி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், லாரியில் அப்பெண்ணை ஏற்றி சத்தனபள்ளி டோல் கேட் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் வைத்து எரித்து இருக்கிறார்கள்.

நீதிமன்றம்

நீதிமன்றம்

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைத்தது தெலுங்கான அரசு. நிர்பயாவின் பெற்றொரும் இதற்கு குரல் கொடுத்தனர். குற்றவாளிகளிடமும் கடந்த ஒரு வாரமாக தெலுங்கான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

என்கவுண்டர் செய்த தெலுங்கான போலீஸ்

என்கவுண்டர் செய்த தெலுங்கான போலீஸ்

இந்நிலையில், விசாரணையின் ஒரு பகுதியாக, இன்று அதிகாலை 3.30 மணியளவில் சம்பவம் நடந்த இடத்திற்கு நான்கு பேரையும் அழைத்து சென்ற போலீசார் எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டச் செய்தனர். அப்போது 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், போலீசாரை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் நான்கு பேரையும் என்கவுண்டர் செய்ததாக தெலுங்கான போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

MOST READ: உலகறிந்த தமிழன் சுந்தர் பிச்சை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்...!

நன்றி தெரிவித்த நிர்பாயாவின் தாய்

நன்றி தெரிவித்த நிர்பாயாவின் தாய்

தெலுங்கானாவில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நிர்பயாவின் தாய் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கான போலீசாருக்கு நன்றியும் அவர் தெரிவித்துள்ளார். இன்றைய நாளில் குற்றவாளிகளுக்கு இதுபோன்ற தண்டனை அவசியப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

தினமும் செத்துக்கொண்டு இருக்கிறோம்

தினமும் செத்துக்கொண்டு இருக்கிறோம்

தனது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் தினமும் செத்துக் கொண்டு இருக்கிறோம். தெலுங்கான பெண்ணின் பெற்றோருக்காவது, இந்த நிலை வேண்டாம். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் தெலுங்கான போலீசார் என்கவுன்டர் செய்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

MOST READ: உலகில் அழகான பெண்களை கொண்ட நாடுகள் எது தெரியுமா? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

தினமும் 100 பாலியல் வன்கொடுமை சம்பவம்

தினமும் 100 பாலியல் வன்கொடுமை சம்பவம்

இந்தியாவின் தேசிய குற்ற ஆவணப் பதிவு காப்பகம் (என்.சி.ஆர்.பி) படி, ஒவ்வொரு நாளும் சுமார் 100 பாலியல் வன்கொடுமை வழக்குகள் போலீசில் புகார் செய்யப்படுகின்றன. 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் 283 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 32,000 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளதாக 2017 தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடை விதிக்கப்படுவதாலும், பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்ட அவமானம் காரணமாகவும், பல பெண்கள் இத்தகைய குற்றங்களை புகார் அளிப்பதற்கு முன்பு பின் வாங்குகிறார்கள் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழக போலீசாரின் என்கவுண்டர்கள்

தமிழக போலீசாரின் என்கவுண்டர்கள்

2010ஆம் ஆண்டு கோவையில், பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிரைவர் மோகன் ராஜ் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட போது என்கவுண்டரில் கொல்லப்பட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒரே ஒரு என்கவுண்டர் மட்டுமே தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது. மற்ற காரணங்களுக்காக தமிழகத்தில் இதுவரை 80 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

MOST READ: பெண்களே உங்கள் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுகிறதா?...அப்ப இத பண்ணுங்க...!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகள்

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகள்

அரியலூர் நந்தினி, ராகவி, சிறுமி ஹாசினி, காஞ்சிபுரம் ரோஜா போன்று 5 வயது சிறுமிகள் முதல் பருவ வயது பெண்கள் வரை நிறைய பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு நீதி கிடைப்பதே இல்லை. காரணம் பொருளாதார பின்புலம், சாதிய அடையாளம் மற்றும் அரசியல் அதிகாரம் உள்ளவர்களுடன் தொடர்பு.

நிலுவையில் இருக்கும் வழக்குகள்

நிலுவையில் இருக்கும் வழக்குகள்

நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மூன்று மாதங்களில் தீர்ப்பு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வராமல் காவல் நிலையத்திலேயே நிலுவையில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

தெலுங்கான காவல் துறைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களை இதேப்போன்று சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hyderabad Rapists Shot Dead In Encounter by Telangana Police

Read to know the Hyderabad Rapists Shot Dead In Encounter by Telangana Police.
Story first published: Friday, December 6, 2019, 15:18 [IST]
Desktop Bottom Promotion