For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குரு பெயர்ச்சி 2019 - 20: ரிஷப லக்னகாரர்களுக்கு விபரீத ராஜயோகம் தரப்போகும் குரு

குரு பெயர்ச்சி அடுத்தமாதம் நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும

|

Recommended Video

12-09-2019 இன்றைய ராசி பலன் | Astrology | Rasipalan

நவகிரகங்களில் சுபத்துவமானவர் குரு. சுபகிரகமான குருபகவான் அக்டோபர் 29ஆம் தேதி முதல் விருச்சிகத்தில் இருந்து தனுசுவில் இடப்பெயர்ச்சி அடைந்து உங்கள் ராசிக்கு ஆயுள்தானமாக எட்டாவது வீட்டில் அமரப்போகிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும் என்பதால் அவர், உங்களுக்கு இரண்டாம் வீடான மிதுன லக்னத்தையும், சுக ஸ்தானமான நான்காம் வீடான சிம்ம லக்னத்தையும் பார்க்கிறார். அதோடு நிம்மதியையும் நல்ல தூக்கத்தையும் தரும் இடமான 12ஆம் வீடான அயன சயன ஸ்தானத்தையும் குரு பார்வையிடுகிறார். குருபகவானின் இந்த சஞ்சாரமும், பார்வைகளும் ரிஷப லக்னகாரர்களுக்கு அற்புதமான பலன்களையும் நன்மைகளையும் தரப்போகிறது.

குருபகவான்தன காரகர். புத்திரபாக்கியம் தருபவர். குரு ஒரு ராசியை கடக்க 12 மாதங்களை எடுத்துக்கொள்கிறார். 12 ராசிகளையும் கடக்க 12 ஆண்டுகளை எடுத்துக்கொள்கிறார். சுபத்துவம் வாய்ந்த குரு நன்றாக வலிமையாக இருந்தால் நிறைய நல்ல விசயங்களை தருவார். ஜாதகத்தில் மறைவாகவும் சரியில்லாத நிலையிலும் கேந்திர தோஷம் பெற்றும் இருந்தால் சில பிரச்சினைகள் ஏற்படும்.

Guru peyarchi

குரு அமர்ந்திருக்கும் ஸ்தானத்தைப் பொருத்து பலன்களைத் தருவார். குருபகவான் ஓராண்டில் சஞ்சரிக்கும் போது அதிசாரம், வக்ரம் ஆகிய நிலைகளை அடைகிறார். ரிஷப லக்னத்தில் கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் ஆகிய நட்சத்திரங்கள் உள்ளன. குருபகவான் தனுசு ராசியில் மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஓராண்டுகள் சஞ்சரித்து உங்கள் லக்னத்திற்கு எண்ணற்ற பலன்களைத் தரப்போகிறார். சில மாதங்கள் அதிசாரமாக சென்று பின்னர் வக்ரமடைகிறார். இந்த காலக்கட்டங்களில் பலன்கள் சிறிதளவு மாறுபடும். குரு தனுசு லக்னத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ரிஷப லக்னகாரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குருவினால் நிம்மதி

குருவினால் நிம்மதி

குருபகவான் ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். குரு உங்களுக்கு நல்லவர் இல்லை. கெட்டவர் ஒருவர் எட்டாம் இடமான மறைவு ஸ்தானத்தில் மறைந்து அமர்வது விபரீத ராஜயோகத்தை தரும் அம்சமாகும். அதோடு குரு உங்களுக்கு நிம்மதியையும் சந்தோசத்தையும் ஆயுள் முழுவதும் தரப்போகிறார். இந்த குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு நிறைய வருமானங்களும்,வீடு, சொத்து சுகம் சேர்க்கையும் கிடைக்கப் போகிறது. அப்புறம் என்ன ஆயுளுக்கும் நிம்மதிதான்.

MOST READ: குரு பெயர்ச்சி 2019 - 20: அற்புதங்களை அனுபவிக்கப் போகும் மேஷ லக்னகாரர்கள்

ராஜயோகம்

ராஜயோகம்

குருபகவான் உங்கள் லக்னகாரகர் சுக்கிரனுக்கு எதிரி என்பதால் நிறைய நல்ல விசயங்கள் செய்ய மாட்டார். அதே நேரம் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற அமைப்பின்படி உங்களுக்கு கெடுதல் செய்யும் குருபகவான் எட்டாம் வீடான மறைவு ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்கு ராஜயோகம்தான். இரண்டாம் வீடான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்க்கும் குருபகவான் உங்களுக்கு அதிகமான பணவரவை தரப்போகிறார். திருமண யோகத்தையும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையையும் தரப்போகிறார்.

ஆயுள் ஸ்தானம் அற்புதம்

ஆயுள் ஸ்தானம் அற்புதம்

உங்க லக்னத்திற்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தை குருபகவான் பார்வையிடுவதால் உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் வீடு வாங்கும் யோகம் கைகூடி வருகிறது. வண்டி வாகனம் வாங்கும் யோகமும் கிடைக்கிறது. தைரியம் அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு முதலாளியின் கரிசனம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஒன்பது பத்துக்கு உடைய சனியுடன் குருபகவான் சேர்ந்து அமர்வதால் பல நல்ல பலன்களை தரப்போகிறார். உங்க ஆயுள்வரைக்கும் தேவையான நிம்மதி சந்தேசம் என அனைத்தையும் குரு தரப்போகிறார்.

நன்மை தரும் குருபகவான்

நன்மை தரும் குருபகவான்

குருபகவான் உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தருவார். சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போவதால் கெடு பலன்களை தரமாட்டார். கணவன் மனைவி இடையே அவ்வப்போது சின்னச் சின்ன உரசல்கள் ஏற்பட்டாலும் அதை சரி செய்து விடுவார் குருபகவான். எதிரிகள் எதிர்பாளர்களால் கூட நன்மைகள் ஏற்படும். காரணம் குரு பகவான் உங்களுக்கு எட்டாம் அதிபதியாக இருப்பதோடு லாப ஸ்தான அதிபதியும் கூட. தொழில் காரகரான சனியுடன் சேரும் போது முன்னேற்றமான காலமாக அமையும். தொழிலில் எதிர்பாராத உயர்வு கிடைக்கும். முன்னேற்றங்கள் ஏற்படும். ஆசிரியர்களுக்கு இது பொற்காலம். இதுநாள் வரை அஷ்டமத்து சனி கேதுவால் அவதிப்பட்டவர்கள் கூடவே அமரும் குருபகவானால் பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவார்கள்.

MOST READ: அனுஷ்காவைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...

பரிகாரம் என்ன

பரிகாரம் என்ன

லக்ன யோகாதிபதி சனி குரு பரிவர்த்தனை யோகம் பெறும் போது அப்பா மகன் இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் தருவார். சில நேரங்களில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிரச்சினைகள் சமாளிக்கக் கூடிய சக்திகளை ஏற்படுத்துவார். பயணங்களில் கவனம் செலுத்துங்கள். குரு வக்ரம் பெறும் காலத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குரு வக்ர நிவர்த்தி அடையும் காலத்தில் செய்யும் தொழிலில் இடமாற்றம் வரும். மொத்தத்தில் குருபகவான் அஷ்டமத்தில் செல்லும் காலத்தில் வராமல் இருந்த பணம் கைக்கு வரும். தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபட நன்மைகள் நடைபெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Guru peyarchi 2019: Guru Peyarchi for Rishapa lagna

Guru peyarchi from Viruchigam to Dhanusu rasi on October 29 Vakkiya panchangam November 5th for Tirukanitha panchangam. here is the prediction for Rishapa lagna Rishapam ascendant
Story first published: Thursday, September 12, 2019, 12:57 [IST]
Desktop Bottom Promotion