Latest Updates
-
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
நீங்க இந்த உணவுகள ஏன் கடவுளுக்கு படைக்கணும்...இதுனால உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
இந்திய பூஜை சடங்குகளில் மிகவும் முக்கியமானதும் முதன்மையானதும் தேங்காய். தேங்காய் உடைக்காமல் எந்த பூஜைகளும் இங்கு நடைபெறாது எனலாம். தேங்காய் பெரும்பாலும் மனித மண்டை ஓட்டை ஒத்திருக்கிறது.
பூஜை சடங்கு செய்வது இந்து பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின் ஒரு பகுதியாகும். அது எந்த பண்டிகையாக இருந்தாலும் அல்லது விசேஷமாக இருந்தாலும், அதைத் தொடர்ந்து சில பூஜைகள் நடைபெறும். அதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வேறு தெய்வங்களுக்கு பல வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் அதன் சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இப்போது, பலர் விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகைகளில் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை சுத்திகரிப்பதற்காக கதா அல்லது ஹவன் போன்ற சிறிய பூஜையை தங்கள் வீட்டில் செய்கிறார்கள்.

மேலும் இந்த பூஜைகளில் பழங்கள், மிட்டாய், சில மசாலாப் பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், தெய்வங்களுக்கு வழங்கப்படும் சில உணவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பூஜையில் பயன்படுத்தப்படும் உணவுகள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருப்பதால், அந்த நேரத்தில் நாம் எந்த தெய்வத்தை வணங்குகிறோம் என்பதைப் பொறுத்து பூஜையில் பயன்படுத்தப்படும் உணவுகள் இருக்கும். நாம் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்கும் போது சிவபெருமானுக்கு கீர் அர்ச்சனை செய்து, ‘கீர் அபிஷேகம்' செய்கிறோம். நம் தேவைகளை பொறுத்து, அதற்கேற்ப உணவு படையலை தெய்வத்திற்கு நாம் படைக்கிறோம். நம் வாழ்வில் பணம் வேண்டும் எனும்போது, கரும்பு ஜூஸை படைத்தும், ஒருவரின் எதிரிகளை வெல்ல கடுகு எண்ணெய் படைத்தும், துர்கா தேவி அல்லது நவகிரகங்களுக்கு எள்ளை சமர்ப்பித்தும் வணங்கப்படுகிறது. இன்னும் பல உணவுகள் அந்தந்த கலாச்சாரம் மற்றும் சடங்களுக்கு ஏற்ப பின்பற்றப்பட்டு வருகிறது.

தேங்காய்
இந்திய பூஜை சடங்குகளில் மிகவும் முக்கியமானதும் முதன்மையானதும் தேங்காய். தேங்காய் உடைக்காமல் எந்த பூஜைகளும் இங்கு நடைபெறாது எனலாம். தேங்காய் பெரும்பாலும் மனித மண்டை ஓட்டை ஒத்திருக்கிறது. நாம் வீட்டில் அல்லது கோவிலில் பூஜை செய்யும் போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் வழங்கப்படும் உலகளாவிய உணவாக தேங்காய் இருக்கிறது. ஆனால், நாம் அம்மனை வழிபடும்போது அது மிகவும் முக்கியமானதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபடும்போது, உங்களின் துன்பங்கள் மற்றும் கவலைகள் உடைந்து, நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள்.

பழங்கள்
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பழங்கள் உணவாக படைக்கப்படுகிறது. இது கடவுளை பொருத்தும், வழங்கும் மக்களை பொருத்தும் மாறுபடும். உதாரணமாக, சக்தி தேவிக்கு மாதுளையும், விஷ்ணுவிற்கு வாழைப்பழமும் உணவாக படைக்கப்படுகிறது. இவற்றை உணவாக கடவுளுக்கு கொடுப்பதால், உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அது மன வலிமையை வளர்ப்பது அல்லது ஆன்மீக முதிர்ச்சியை அடைவதும் ஆகும்.

கிராம்பு
லக்ஷ்மி தேவி முதல் துர்கா மற்றும் அனுமான் வரை, நாம் பூஜையில் கிராம்பு பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன. யாரேனும் ஒருவர் தனது வாழ்க்கையில் கடினமான காலத்தை எதிர்கொண்டால், ராகு-கேதுவை சாந்தப்படுத்த அல்லது சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்ய இந்த கிராம்பு மசாலாவை படைப்பார்கள். மேலும், இந்த கிராம்புவை சனிக்கிழமையன்று யாருக்கு கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது சிவபெருமானுக்கு விருப்பமான மசாலாப் பொருளாகவும் உள்ளது. மேலும் பல பூஜைகளில் கிராம்பு பயன்படுத்தப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம்.

மிட்டாய் இனிப்புகள்
கடவுள்களை திருப்திப்படுத்த வழங்கப்படும் பொதுவான உணவுகளில் ஒன்று மிட்டாய் இனிப்புகள். இந்த இனிப்பு உணவை ருசிக்க தெய்வங்களை அழைப்பதற்காகவும், முழு சடங்கையும் முடித்து பக்தர்களை ஆசீர்வதிப்பதற்காக பக்தர்களுடன் இருப்பதற்காகவும் இது செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications