For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ணனின் கவச குண்டலத்தை இந்திரன் ஏன் தானம் பெற்றார் தெரியுமா?

|

கர்ணனின் பூர்வ ஜென்ம தொடர்பே கவசங்களாக அவரது உடம்பில் இருந்துள்ளது. அந்த கவசத்தை நீக்கிய பிறகே அர்ஜூனனால் அம்பெய்து சாய்க்க முடிந்தது. அப்படியும் உயிர் போகவில்லை. பரமாத்மா கிருஷ்ணபகவானே கர்ணன் செய்த தர்மங்களின் பயனை பிச்சையாக யாசித்து உயிரை எடுத்தார். கர்ணன் குந்தியின் வயிற்றிலே பிறந்தாலும் தேர்ப்பாகனின் மகனாய் வளர்ந்து, துரியோதணனால் நட்பு பாராட்டப் பட்டதாலேயே அவனுக்காகப் போர்க்களத்தில் ரத்த சொந்தங்களை எதிர்த்து செஞ்சோற்றுக்கடன் தீர்த்தவன். இல்லையென்று சொல்லாமல் தன்னிடம் இருப்பது அனைத்தையையும் வாரி வாரி வழங்கிய வள்ளல். சூரியனின் மகன். குந்திக்கு சத்தியம் செய்ததாலேயே நாகாஸ்திரத்தை மறு பிரயோகம் செய்யாமல் விட்டான். சாவின் தருணத்திலேயும் தேவேந்திரன் இந்திரனுக்கு தன் கவச குண்டலங்கலைப் பெயர்த்துப் பிச்சையிட்டவன்.

கர்ணனைப் பற்றி பகை உள்ளத்துடன் கிருஷ்ணர் எங்குமே பேசவில்லை. சொல்லப்போனால், பல இடங்களில் கர்ணனின் புகழை தான் கிருஷ்ணர் பாடியுள்ளார். ஒருமுறை கிருஷ்ணனிடம் தர்மர், கிருஷ்ணா நான் கூட நிறைய தானதர்மங்கள் செய்கிறேன் ஆனால் எல்லோரும் கர்ணணைத்தான் புகழ்கிறார்கள் என்று கேட்டாராம். அதற்கு கிருஷ்ணர் சரி தர்மா நான் ஒரு போட்டி வைக்கிறேன் அதில் நீ வெற்றிபெற்றால் நீதான் சிறந்த தர்மவான் போட்டிக்கு தயாரா என்றாராம், தர்மரும் ஒத்துகொள்ள போட்டி தயாராயிற்று.

போட்டி இதுதான். இரண்டு பெரிய பொக்கிஷ குவியல்கள் அதை சூரியன் அஸ்தமிப்பதற்குள் தானம் செய்துவிடவேண்டும். அப்படி செய்த்துவிட்டால் நீதான் சிறந்த தர்மவான். காலையில் போட்டி துவங்கிற்று, தர்மரும் போவோர் வருவோருக்கெல்லாம் வாரிவாரி வழங்கினாராம் ஆனால் பொக்கிஷம் குறையவேயில்லை. ஆயிற்று இன்னும் சற்று நேரத்தில் சூரியன் அஸ்தமித்துவிடுவான்.

அப்பொழுது தர்மர் கிருஷ்ணனிடம் கிருஷ்ணா என்னால் முடியவில்லை ஆனால் இதே பரிட்சையை கர்ணணிடமும் வையுங்கள் அவன் ஜெயித்தால் நான் ஒத்துகொள்கிறேன் என்று கூற, கிருஷ்ணர் உடனே கர்ணணை கூப்பிட்டு கர்ணா இதை சூரியன் அஸ்தமிப்பதற்குள் தானம் செய்துவிடவேண்டும் என்று கூற உடனே கர்ணணை இரண்டு பேரை கூப்பிட்டு ஆளுக்கு ஒன்றாக கொடுத்துவிட்டாராம். அப்பொழுது கிருஷ்ணர் தர்மரைபார்த்து இதை நீ கூட செய்திருக்கலாம் ஆனால் உன்னுடைய மனம் இவ்வளவு பொருளையும் இரண்டு பேருக்கு கொடுப்பதா என்று ஒர் எண்ணம் அதனால்தான் உன்னால் முடியவில்லை, ஆனால் கர்ணண்னுக்கு அந்த மாதிரி கிடையாது அதனால்தான் அவன் சிறந்த தர்மவான் என்றாராம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ணன்

கர்ணன்

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் என் அம்மா நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா? நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா? பரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

MOST READ: மலம் கழிக்கும்போது சிலசமயம் வெள்ளையாக இருப்பது ஏன் தெரியுமா? அது எதன் அறிகுறி?

அவமானம்

அவமானம்

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார். திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன் குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார்.இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்.

கிருஷ்ணன் பதில்

கிருஷ்ணன் பதில்

அதற்கு கிருஷ்ணன் பதிலாக "கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்.என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது.நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன். நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன.

பிரச்சினைகள்

பிரச்சினைகள்

நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள். நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

குருஷேத்ர யுத்தம்

குருஷேத்ர யுத்தம்

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை! துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும். கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

MOST READ: தனுசு ராசியில் சனியோடு சேரும் சந்திரன் - புணர்ப்பு தோஷத்தால் பிரச்சினை வருமா?

தர்மத்தின் வாழ்க்கை

தர்மத்தின் வாழ்க்கை

வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை. ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுத்தப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானது அல்ல அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது என்று கண்ணன் சொன்னார். இங்கேதான் நாம் கர்ணனின் பூர்வ ஜென்ம ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

முன் ஜென்ம ரகசியம்

முன் ஜென்ம ரகசியம்

பூர்வ ஜென்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான். பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின் படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது. எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும். தான் பெற்ற வரத்தால் தலைகால் தெரியாமல் ஆடினான் தேவர்களை வதைத்தான்.

தவமும் போரும்

தவமும் போரும்

தவமும், போரும், யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான். எனினும், இதனைச் சாமான்ய மனிதர்களால் சாதிக்க இயலவில்லை. எனவே, சஹஸ்ர கவசன் தேவர்களுக்கு செய்த கொடுமைகள் அனைத்தும் தொடர்ந்தன. மகாவிஷ்ணுவை தேவர்கள் சரணடைந்தனர். உடனே நர நாராயணர்களை அவதரிக்க வைத்தார் கிருஷ்ணர். இருவரும் கூட்டு முயற்சி செய்து ஸஹர்ர கவசனை அழிக்க முயற்சி செய்தனர்.

நர நாராயணர்கள்

நர நாராயணர்கள்

நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை நர, நாராயணர்கள் அறுத்து எறிந்தனர். இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது. எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.

தன்னைத் தேடி வந்து அபயம் கேட்டவன் அரக்கனாக இருந்தாலுமே அவனுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டிய கடமை தன்னுடையது என்பதை உணர்ந்த சூரிய தேவன். அவனைத் தனது சூரிய லோகத்தில் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். சஹஸ்ர கவசன் தனக்கு அடைக்கலம் அளித்த சூரிய தேவனையே தனது இஷ்ட தெய்வமாக பாவித்து வணங்கி வந்தான். சூரிய லோகத்திலேயே அவனது அப்பிறவி முடிந்தது.

கிருஷ்ண அவதாரம்

கிருஷ்ண அவதாரம்

இந்த சஹஸ்ர கவசனே மறு ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் பூர்வ ஜென்மத்தில் மீதமிருந்த ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான். அந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே!. இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜூனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் அவதரித்தனர்.

MOST READ: சாப்பிடதும் வயிறு திம்முனு ஆயிடுதா?... அப்ப இதெல்லாம் சாப்பிடவே சாப்பிடாதீங்க...

பாண்டவர்கள் வனவாசம்

பாண்டவர்கள் வனவாசம்

12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது. அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கினார் கிருஷ்ணர். கவசம் நீங்கியதால் தான் அர்ஜுனனால் கர்ணணை கொல்ல முடிந்தது. இதே போலத் தான் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமைகளுக்கு நாம் செய்த பூர்வ ஜென்ம பலன்களையே நாம் அனுபவிக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About Karna's Kavasam

Gold is widely considered an auspicious metal with great qualities as jewellery and an investment alike. But did you know that according to Vedic astrology, Jupiter is named after the god Brihaspati who is often depicted with a golden body.Gold brings warmth and energy to the ones who wear it.
Story first published: Monday, September 9, 2019, 11:16 [IST]