Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மார்கழி மாதத்தில் இந்த விசயத்தை எல்லாம் மறந்து கூட செய்யாதீங்க...
மார்கழி மாதத்தை பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக முன்னோர்கள் கருதினார்கள். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் மார்கழி மாதம். பீடு என்றால் பெருமை மிகுந்த அல்லது உயரிய என்று பொருள்.
மார்கழி மாதத்தை பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக முன்னோர்கள் கருதினார்கள். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் மார்கழி மாதம். பீடு என்றால் பெருமை மிகுந்த அல்லது உயரிய என்று பொருள். பீடு உடைய மாதமாகிய மார்கழியில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய காலமாக மார்கழியைக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள்.
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி வரும் காலம் மார்க்கசிர என்று வட மொழியில் அழைக்கின்றனர். தமிழில் மார்கழியாக அழைக்கப்படுகிறது. இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. இவர் மார்க்கண்டேயரின் தந்தை. மார்க்கண்டேயரின் ஜென்ம நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கண்டேயர்
சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு அடுத்தபடியாக நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர். தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்ற மகாயோகி அவர். மார்கழி மாதத்திற்கு உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்தவர். 16 வயதில் மரணம் என்று தெரிந்தும் சிவனை ஒவ்வொரு நிமிடத்திலும் சிந்தையில் நினைத்தவர். மார்கழி மாதத்தில் மரணத்தை வெல்லும் ம்ருத்யுஞ்சய ஹோமம் செய்ய உகந்தது.

ஆண்டாள் மாதம்
ஸ்ரீ ரங்கநாதனை கணவனான அடைய வேண்டும் என்று பாவை நோன்பிருந்து ஆண்டாள் திருப்பாவை பாடிய மாதம் மார்கழி மாதம். வைகுண்ட ஏகாதசி விழாவும் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படும் மாதம் மார்கழி மாதம். ஆஞ்சநேயர் மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர்.

மார்கழியில் செய்யக்கூடியவை
மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு வரன் பார்க்கலாம், ஜாதகம் கொடுக்கலாம், பொருத்தம் பார்க்கலாம். சீமந்தம் செய்யலாம், நிலம் மற்றும் வீடு வாங்க அட்வான்ஸ் கொடுக்கலாம். நிலம் பத்திரப்பதிவு செய்யலாம். அதிகாலையில் பஜனை பாட வேண்டும். திருப்பாவை திருவெம்பாவை பாடல் பாடுவதும் கேட்பதும் புண்ணியம். மார்கழியில் இவற்றை கண்டிப்பாக பாடி கேட்க வேண்டும்.

மார்கழியில் செய்யக்கூடாதவை
மார்கழியில் விதை விதைக்கக் கூடாது. கல்யாணம் பண்ணக்கூடாது என்று சொல்வார்கள். அதிகாலைக்குப் பிறகு தூங்கக் கூடாது. சூரிய உதயத்திற்குப் பிறகு தூங்கக் கூடாது என்பார்கள். அதீதமான ஆக்சிஜன் உடம்புக்கு கிடைக்க வேண்டும் எனவே 4.30 மணிக்கு குளித்து விட்டு வாசல் தெளித்து அரிசி மாவில் கோலம் போட வேண்டும்.

புது வீடு மாறக்கூடாது
மார்கழி மாதத்தில் புதுமனை புகுவிழா,வாடகை வீடு மாறுதல்,அலுவகம் மாறுதல்,திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம், காது குத்துதல், புதிய வீடு பத்திர பதிவு செய்யக்கூடாது, புதிய வண்டி வாகனம் வாங்கக்கூடாது.



Click it and Unblock the Notifications
