For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பொருட்களை வீட்டின் தெற்கு பகுதியில் வைக்காதீங்க.. இல்லன்னா வீட்ல கஷ்டம் அதிகரிக்கும்..

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரின் வாழ்க்கையில் திசைகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த திசைகளை சரியாக கவனிக்காமல் போகும் போது, ஒருவரின் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.

|

வாஸ்து சாஸ்திரத்தில் இடம் மற்றும் திசைக்கு சிறப்பான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு திசைக்கும் ஒரு சிறப்பு உண்டு. மேலும் வீட்டில் வைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதுமட்டுமின்றி ஒரு பொருளை எந்த திசையில் வைப்பது நல்லது என்பதையும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஒருவேளை தவறான திசையில் ஒரு பொருளை வைத்தால், அதனால் வீட்டில் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது தவிர பண இழப்புக்கள் கூட ஏற்பட்டு, வறுமை ஏற்படலாம்.

Do Not Keep These Things In The South DirectionDo Not Keep These Things In The South Direction

எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரின் வாழ்க்கையில் திசைகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த திசைகளை சரியாக கவனிக்காமல் போகும் போது, ஒருவரின் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இப்போது ஒரு வீட்டின் தெற்கு திசையின் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும், எந்த பொருட்களை தெற்கு திசையில் வைக்கக்கூடாது என்பதை காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தெற்கு திசை - முன்னோர்களின் இடம்

தெற்கு திசை - முன்னோர்களின் இடம்

வாஸ்து சாஸ்திரத்தில் தெற்கு திசை முன்னோர்களின் இடம் என்று கூறப்படுகிறது. இந்த திசையில் தவறான விஷயங்களை வைப்பது பித்ரு தோஷத்தை உண்டாக்கும். முன்னோர்களின் அதிருப்தியானது வீட்டின் மகிழ்ச்சி, செழிப்பு, நிதி நிலை, மரியாதை, முன்னேற்றம் போன்றவற்றில் தடையை ஏற்படுத்தும். மேலும் வாழ்வில் பல பிரச்சனைகள் வரும்.

சமையலறை

சமையலறை

வீட்டைக் கட்டும் போது, தெற்கு திசையில் சமையலறையை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதே வேளையில் தெற்கு திசையில் ஸ்டோர் ரூம் அமைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

கோவில்/பூஜை அறை

கோவில்/பூஜை அறை

வாஸ்து சாஸ்திரத்தின் படி, தெற்கு திசையில் கோவில் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டின் தெற்கு திசையில் பூஜை அறையை அமைக்காதீர்கள். ஏனெனில் இது தெய்வங்களுக்கு கோபத்தை உண்டாக்கும். மேலும் பல பிரச்சனைகள் வாழ்க்கையில் வரும். அதே வேளையில் தெற்கு திசையில் கட்டப்பட்ட கோயிலில் வழிபாடு செய்தால் பலன் கிடைக்காது. எந்த ஆசையும் நிறைவேறாது.

காலணிகள்

காலணிகள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, தெற்கு திசையில் எப்போதும் ஷூக்கள் மற்றும் செருப்புக்களை வைக்கக்கூடாது. இது பெற்றோர்களை கோபப்படுத்தும் மற்றும் இது வீட்டின் மகிழ்ச்சியையும் அமைதியையும் சீர்குலைக்கும்.

இயந்திரம்

இயந்திரம்

தெற்கு திசையில் எந்த ஒரு இயந்திரங்களையும் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த திசை தான் வீட்டின் நேர்மறையை வளர்க்கிறது. இயந்திரங்களை வைத்தால், அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

படுக்கை

படுக்கை

தெற்குத் திசையில் தூங்கும் அறையோ, படுக்கையோ நல்லதாகக் கருதப்படுவதில்லை. வாஸ்து படி, இந்த திசையில் படுக்கை அறை இருந்தால், அது தூக்கத்தில் குறுக்கிடுவது மட்டுமின்றி, நோய்கள் வரும் அபாயமும் உள்ளது.

உணவருந்தும் மேஜை/டைனிங் டேபிள்

உணவருந்தும் மேஜை/டைனிங் டேபிள்

வீட்டின் தெற்கு பகுதியில் உணவை சமைப்பது மற்றும் உணவை உண்பது இரண்டுமே தவறு என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஏனெனில் இது ஆரோக்கிய பிரச்சனை மற்றும் பண இழப்புக்கு வழிவகுக்குமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do Not Keep These Things In The South Direction

In this article, we shared what things should be taken care of in the south direction of the house. Read on..
Story first published: Friday, March 25, 2022, 15:13 [IST]
Desktop Bottom Promotion