For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று இந்த 2 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்…

|

தொழில், வேலை, திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை என ஒவ்வொன்றை பற்றியும் தெரிந்து கொள்ள உதவுவது தான் ஜாதகம். ஒரு நாள் எப்படி அமையும் என்பது தொடங்கி, பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பன வரை முன்கூட்டியே தெரிந்து கொள்ள உதவுவதால் தான், ஒவ்வொரு நாளுக்கும் ஆன ராசி பலனை அனைவரும் ஆர்வத்தோடு தெரிந்து கொள்கின்றனர். இன்றைய தினம் உங்களது ராசிக்கான பலனை பற்றி இப்போது தெரிந்து கொள்வோமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று உங்கள் வாழ்க்கை துணையுடனான நெருக்க அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களோடு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சிகரமான நாளாக இன்று அமைய போகிறது. பெற்றோரின் ஆதரவு மற்றும் பாசத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் சிறு அலட்சியப்போக்கு கூட பெரும் பிரச்சனையில் சென்று முடிந்துவிடும். எனவே, மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். சக ஊழியர்களுடன் நல்லுறவை பராமரிப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு, தடைப்பட்ட காரியம் ஒன்றை மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பு கிட்டும். பண வரவு உண்டு. ஆரோக்கியத்தை பொறுத்தவரை, வெளியே சாப்பிடவதை தவிர்க்கவும் அல்லது பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்திடவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:05 மணி முதல் இரவு 10:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

வேலை செய்பவர்கள் இன்று அலுவலகத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். உயர் அதிகாரியின் கண்டனத்திற்கு ஆளாக கூடும். வேலையில் அதிக கவனம் செலுத்தும் பட்சத்தில் இன்றைய தினம் சுமூகமாக அமையும். உங்களை பற்றி பிறர் புகார் அளிக்க வாய்ப்பளிக்க வேண்டாம். ஆபத்து நிறைந்த எந்தவொரு முடிவுகளையும் வணிகர்கள் எடுக்காமல் இருப்பது நல்லது. உறவினர்களிடையே அன்பு அதிகரிக்கும். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் பற்றி பேசினால், இன்று அதிகப்படியான உடற்சோர்வினால் சில சிக்கல்களை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 முதல் 9:00 வரை

மிதுனம்

மிதுனம்

வேலை பார்ப்பவர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். வணிகர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பெரிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகலாம். கடும் உழைப்பை செலுத்திய நீங்கள், அதற்கான பலனை பெறுவதற்கான காலம் வந்துவிட்டது. வங்கியில் பணிபுரிபவர்களின் முன்னேற்றத்திற்கு வலுவான வாய்ப்பு கிடைக்கப் போகிறது. வாழ்க்கை துணையுடன் சிறிது கருத்து வேறுபாடு உண்டாகக்கூடும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்தி பயன்படுத்துவதால் வீண் சண்டையை தவிர்க்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:00 மணி வரை

கடகம்

கடகம்

பேச்சில் கவனம் செலுத்த வேண்டிய நாள். தேவையற்ற விவாதத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். கோபத்தால் எந்தவொரு பொறுப்பற்ற செயலையும் செய்திடாதீர்கள். பின்னர், அதை நினைத்து எதிர்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்கும். அன்புக்குரியவர்களின் வீண் செலவு செய்யும் குணம் சிக்கலில் மாட்டிவிடக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்த நல்ல ஆலோசனைகளை பெறலாம். எதிர்பார்த்து காத்திருந்த விஷயத்தில் நல்லதொரு முடிவு உங்களை தேடி வரும். உடல்நிலை சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

சிம்மம்

சிம்மம்

ஆரோக்கியமாக இருக்க உங்கள் அன்றாட வழக்கத்தை ஒழுங்கமைக்க வேண்டிய நாள். உங்களது தொடர் அலட்சிய போக்கு, உடல்நலனை வெகுவாகக் குறைக்கக்கூடும். வேலை செய்பவர்களுக்கு, இன்று அலுவலகத்தில் இருந்து சில நல்ல செய்திகள் வந்து சேரும். மறுபுறம், வர்த்தகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், இழப்பு உங்களுக்கு தான். தனிப்பட்ட வாழ்க்கையின் நிலைமை சற்று ஏற்ற தாழ்வுகளால் நிறைந்திருக்கும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கக்கூடும். திடீரென்று சில பெரிய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நலம் பற்றி பேசினால், வாயு, அஜீரணம் அல்லது அமிலத்தன்மை போன்ற சிக்கல்களால் அவதிக்குள்ளாவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:25 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கன்னி

கன்னி

அலுவலகத்தில் அமைதியாக உங்களது வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. உங்கள் வேலையில் உயர் அதிகாரிகள் குறை கண்டறிந்தால் ஆவேசமாக வாதிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையேல், வேலையிழக்கும் அபாயம் உண்டாகிவிடும். வணிகர்கள், எந்தவொரு அவசர முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. புதிய வணிகம் குறித்த முடிவுகளை நன்கு யோசித்து கவனமாக எடுக்கவும். குடும்பத்தாரோடு நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். தந்தை உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உடல்நலத்தை பொருத்தவரை, மன அழுத்தம், முதுகு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை

துலாம்

துலாம்

அலுவலகத்தில் உயர் அதிகாரியின் முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். உங்களது வேலையால் முதலாளி திருப்தி அடைவார். அதனால், புகழ் வந்து சேரும். வணிகர்கள் சட்ட சிக்கல்களில் இருந்து விலக வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நிதி நிலை நன்றாக இருக்கும். இருந்தாலும், செலவை குறைப்பது நல்லது. வாழ்க்கை துணையுடனான உறவு வலுபெறும். ஏற்ற இறக்கமான சூழலில் மனதிற்கு பிடித்தவரின் ஆதரவவை பெறுவீர்கள். ஆரோக்கியம் பற்றி பேசினால், அதிகப்படியான கோபம் மற்றும் மனஅழுத்தத்தை குறைத்துக் கொள்வது நல்லது. இல்லையேல், உடல்நலம் பாதிக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்றைய தினம் சிறப்பாக தொடக்கமாக இருக்காது. வீட்டில் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உறவினர்களுடன் மனகசப்பு அதிகரிக்கக்கூடும். வாழ்க்கை துணையின் நடத்தையால் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொடுத்த பணம் திரும்ப வருமா என்பது குறித்து கவலை ஆட்கொள்ளலாம். நிதி கட்டுப்பாடு காரணமாக சில சிரமங்களை சந்திப்பீர்கள். தந்தையின் வியாபாரத்தில் இணைந்திருந்தால், அவரது ஆலோசனையால் பயனடைவீர்கள். எடுத்த வேலையை எந்தவொரு தடங்கலும் இல்லாமல் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மன அழுத்தம் மற்றும் உடற்சோர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 44

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 முதல் 9:00 வரை

தனுசு

தனுசு

வர்த்தகர்கள் தங்கள் பொருளாதார முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். நீங்கள் ஏதேனும் பெரிய முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், சில அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற்று நடந்து கொள்வது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் சரியாக நடந்து கொள்ள மறவாதீர்கள். உங்களது அதிகப்படியான தன்னம்பிக்கையே உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். வாழ்க்கை துணையுடன் மென்மையான சூழல் இருக்கும். உங்களது கடுமையான அணுகுமுறை உங்கள் அன்புக்குரியவரின் உணர்வுகளை புண்படுத்தக்கூடும். நிதி நிலை நன்றாக இருக்கும். எதிர்பாராத மிகப்பெரிய செலவு வந்து சேரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

மகரம்

மகரம்

இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கிறது. வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏற்கனவே வேலை செய்பவர்களுக்கு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை வந்து சேரலாம். போக்குவரத்து தொடர்பான வணிகம் செய்பவர்கள் நல்ல பலனை பெறுவார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். பெற்றோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தை மூலமாக நிதி ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பிறருக்கு பண உதவு செய்யலாம். இன்றைய தினம் மிகவும் சுறுசுறுப்புடன் நேர்மறை ஆற்றலால் சூழ்ந்து காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் 10:00 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்களுக்கு சற்று சுமாரான நாள் தான். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காது. உங்கள் வேலையில் உயர் அதிகாரிகள் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். எனவே, எல்லா வேலையையும் முழு கவனத்துடன் செய்வது நல்லது. உணவு மற்றும் பானம் தொடர்பான வர்த்தகம் செய்பவர்கள், தூய்மைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறு குறை கூட பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடும். வீட்டில் சற்று பதற்றமாக சூழல் நிலவும். கருத்து வேறுபாடுகளை சரியாக கையாள முயற்சியுங்கள். இல்லையேல், உறவில் கசப்பு அதிகரித்துவிடும். பணம் சார்ந்த விஷயங்களில் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டிய அவசியம். ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம் கலர்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 முதல் மதியம் 2:00 மணி வரை

மீனம்

மீனம்

கூர்மையான பொருட்களை கையாளும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். இல்லையென்றால், விபத்து ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் மீது உயர் அதிகாரிகள் கூறும் குறைகளை திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல், சிக்கலில் சிக்கக்கூடும். மின்னணு தொழில் தொடர்பான வணிகர்கள் இன்று பயனடையலாம். மறுபுறம், நீங்கள் ஒரு புதிய பணியைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அந்தத் திட்டம் தடைப்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையுடன் விவாதம் ஏற்படக்கூடும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Horoscope For 2nd December 2020 Wednesday In Tamil

Check out the daily horoscope for 2nd December 2020 wednesday in Tamil. Read on.
Story first published: Wednesday, December 2, 2020, 5:00 [IST]